கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குடமுழா - தமிழர்களின் மறந்துபோன இசைக்கருவி



 குடமுழா Kudamuzhaa - தமிழர்களின் அழிந்து போன இசைக் கருவி!!


கி.பி 1-ம் நூற்றாண்டு.

இந்த குடமுழுவம் இசைக் கருவி, தேவாரத்தில் "குடமுழா" என்று குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்து. ஒரு காலத்தில் சோழ மண்டலத்தில் பெருவாரியாக இந்த அரிய இசைக் கருவி பாவனையில் இசைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது..


தேவாரத்திற்கு முந்திய கி.பி முதலாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரத்திலும் இந்த "கடமுழுவம்" இசைக்கருவி இசைக்கப்பட்டிருக்கிறது...


இந்த இசைக் கருவி தற்போது,

ஈழம் மற்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது!!திருவாரூ‌ர் தியாகராசர் மற்றும் திருத்துறைபூண்டி மருந்தீசுவரர் கோயில்களில் மட்டுமே இந்த அரிய இசைக்கருவியான குடமுழுவத்தை காண முடியம்.


வார்ப்பு வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட உயரமான குடத்தில் ஐந்து வாய்கள் இருக்கும். 

வாய்கள் அனைத்தும் மான் தோல்களால் மூடப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு வாயிலிலும் வெவ்வேறு விதமான பண் (இசை) எழுப்பப்படும். 


சங்க இலக்கியங்கள் 

குடமுழுவத்தை பற்றி ஏராளமான பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன.


மேலும், பாேர் வீரர்களின் தோல் வலிமைக்கும், பலாப்பழத்திற்கும், பனைமரத்தின் அடிக்கும் இக் கருவியை ஒப்பிட்டு பல சங்ககால பாடல்கள் பாடப்பட்டுள்ளன.


மறந்துபோன இசைக்கருவிகள் - பஞ்சக குடமுழா


மறந்துபோன இசைக்கருவிகள்

பஞ்சமுக வாத்தியம் (அ) பஞ்சக குடமுழா


பஞ்சக குடமுழா (அ) பஞ்சமுக வாத்தியம்

பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழரின் வாழ்வியல் முறைமை அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் இசையுடன் பிணைந்தே இருந்து வந்துள்ளது.பல்வேறு வகை இசைக்கருவிகளை நம்மவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.தோல்,நரம்பு,காற்று என அவற்றின் இயக்க முறைமை பொறுத்து வகைப்படுத்துவர். பஞ்சக குடமுழா ஐந்து முகங்களைக் கொண்ட ஒருவகை தோல் இசைக் கருவியாகும்.இதன் அடிப்பாகம் தகுந்த சீரிசை உருவாக்கும் வண்ணம் தாமிரம் மற்றும் வெண்கலம் கலந்த கலவையினால் உருவாக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முகமும் வெவ்வேறு ஒலியெழுப்புவது சிறப்பு. ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு ஒரு பக்கம் திறந்த ஆர்கன் குழாய் போன்று செயல்படும்.கழுத்தின் உயரத்திற்கேற்ப சப்தத்தின் அதிர்வெண் வேறுபடும்.


கோவில்களில் சிவபெருமானின் நிருத்த சிற்பங்களுக்கு கீழமர்ந்திருக்கும் பூத கணங்களில் ஒன்று குடமுழா வாசித்துக் கொண்டிருக்கும்.ஐந்திணைகளில் மருத நிலத்திற்குரிய கருப்பொருளாக குடமுழா உள்ளது.


நிருத்தம் -ஒரு வகை நடனம்


இவ்விசைக்கருவி பற்றிய குறிப்புகள் சங்ககாலந் தொட்டே இலக்கியங்களில் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் மாதவியின் நடனத்தின் போது யாழ், குடமுழா,மத்தளம் ஆகியவை இசைத்ததாக கூறப்பட்டுள்ளது. இன்றளவும் திருவாரூர் கோவிலில் பஞ்சமுக வாத்தியம் இசைக்கப்படுகிறது. 


சிவபெருமானே இவ்விசைக்கருவியை வாசிப்பதாய் அமைந்த சிற்பம்.


சிவபெருமான் கரங்களில்


இடம்: சிதம்பரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...