INCOME TAX 2024-25 : தவிர்க்க வேண்டியவையும் - கவனித்துக் கணக்கிட வேண்டியவையும்
INCOME TAX 2024-25 : Dos and Don'ts - Watch and Calculate
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
* New Regimeல் மாற்றுத்திறனாளிகளின் பயணப்படியைத் தவிர்த்து வேறெந்த சேமிப்பும் / முதலீடும் கழிக்க இயலாது. Standard Deduction தவிர்த்து மொத்த வருமானத்திற்கும் நேரடியாக வரி விதிக்கப்படும்.
* Old Regime கணக்கீட்டில், CPSல் உள்ளோர் தங்களது *CPS தொகை ₹50,000ஐ 80CDD(1B)ல் கழிக்கக் கூடாது.* 80CDD(1B) என்பது NPSற்கு மட்டுமே பொருந்தும். இதை வருமானவரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
* New Regimeல் *GPF, PPF, NPS & CPS* உள்ளிட்ட ஊழியரின் ஓய்வூதியம் தொடர்பான எந்தவொரு அலுவலகப் பிடித்தத்தையோ / தனிப்பட்ட முதலீட்டுத் தொகையையோ *கழிக்க இயலாது.*
* Old Regimeன் *80CCD2ல் தற்போதோ / ITR செய்யும் போதோ CPS பிடித்தத் தொகையை மீண்டுமாகக் கழிப்பது சட்டப்படி குற்றம்.*
* NPS திட்டத்தில் உள்ளோருக்கு அரசின் பங்களிப்பான 14% வருமானத்தில் சேர்த்துக் காண்பிக்கப்படும் என்பதால் அந்த *அரசின் பங்களிப்பை மட்டும் கழித்துக் கொள்ள New Regimeல் வழி வகையுண்டு.* தனிப்பட்ட முறையில் NPS முதலீடு செய்வோர் அரசின் பங்களிப்பை வருமானத்தில் (Income from other source) காண்பித்துக் கழித்துக் கொள்ளலாம்.
* மொத்தத்தில் Old Regimeன் 80CCD2 & New Regimeன் NPS கழிவு என்பது அரசின் பங்களிப்பை (14%) வருமானமாகக் காண்பித்து பின் கழித்துக் கொள்வதன் மூலம் அத்தொகையையும் வரிக் கணக்கீட்டிற்குள் கொண்டு வருவதற்கான வழிமுறை மட்டுமே.
* Old Regimeற்கான *Standard Deduction ₹50,000/-*
* New Regimeற்கான *Standard Deduction ₹75,000/-*
* Old Regimeல் Net Taxable Income *₹ 5,00,000க்குள் இருந்தால் மட்டும் ₹12,500 Rebate* உண்டு என்பதால் ₹5,00,000 வரையுள்ளோருக்கு வரி வராது.
* New Regimeல் Net Taxable Income *₹ 7,00,000க்குள் மட்டும் இருந்தால் ₹20,000 Rebate* உண்டு என்பதால் ₹7,00,000 வரையுள்ளோருக்கு வரி வராது.
* New Regimeல் Net Taxable Income ₹ 7,00,001 முதல் *₹ 7,22,220 வரை Marginal Relief உண்டு.* அதன்படி, ₹7,00,000ஐ விடக் கூடுதலாக வரும் வருமானமானது, ஒட்டு மொத்த வருமானவரியை விடக் குறைவாக இருப்பின், அக்கூடுதல் வருமானத்தை ஒட்டுமொத்த வரியிலிருந்து கழித்து மீதமுள்ள தொகை மட்டும் Rebate ஆக வழங்கப்படும். இந்தக் கணக்கீடு ₹7,22,220 வரை மட்டுமே வரும். அதன்பின்னர் கூடுதல் தொகை ஒட்டுமொத்த வரியை விடக் குறையாது என்பதால் Marginal Relief இருக்காது.
இணையத்தில் உலாவரும் ஒரு சில Tax Calculatorகளில் இந்த Marginal Relief பயன்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் 80CCD(1B)ல் ₹50,000 CPS தொகை கழிப்பது போன்றும் உள்ளது. இவையிரண்டுமே தவறான வழிமுறை. எனவே, முழுமையான Tax Calculatorகளைப் பயன்படுத்தி சரியான வருமானவரியை மட்டும் கணக்கிட்டு இறுதி நேர பதற்றத்தையும் எதிர்காலச் சிக்கல்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.