கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 Teachers' Transfer Counselling - DEE Proceedings

 

2025-26ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜூன் 2025 மாதத்தில் நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியீடு - 19.06.2025 முதல் 25.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் - கலந்தாய்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் - DEE செயல்முறைகள்


இந்த ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந.க.எண் : 13466/டி1/2025, நாள் : 18.06.2025


பொருள்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி - 2025-2026ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜூன் 2025 மாதத்தில் நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.


பார்வை: 1. அரசாணை (நிலை) எண்.176, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள்:17.12.2021.

2. அரசாணை (நிலை) எண்.180, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள்:17.10.2022.

3. அரசாணை (நிலை) எண்.94, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள்:24.05.2023.

4. அரசாணை (நிலை) எண்.26, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள்:24.01.2024.

5. அரசாணை (நிலை) எண்.164, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள் : 11.07.2024.

6. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண் : 98391/டி1/2024, நாள் : 07.05.2024 முதல் 22.06.2024.


பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் கடந்த 2024-25ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதனைப் பின்பற்றி கடந்த 2024-25-ல் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் கலந்தாய்வுப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன.

2. அதே போல 2025-26 ஆம் கல்வியாண்டிற்கும் அனைத்து ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வு பணிகள் கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக நடைபெறும் எனவும், அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவும், அதனைத் தொடர்ந்து மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.

* மேற்படியான மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 19.06.2025 முதல் 25.06.2025 அன்று மாலை 6.00 வரை EMIS-ல் இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.



>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Sastra University B.Ed., degree Eligible to Incentive : G.O. Ms. No: 112, DEE Proceedings & High Court Judgment

    தஞ்சை  சாஸ்த்ரா பல்கலைக்கழக பி.எட்., பட்டம் ஊக்க ஊதிய உயர்விற்கு செல்லும் என்கிற அரசாணை எண் : 112,  தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...