தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை -6.
முன்னிலை :திரு க.நந்தகுமார், இ.ஆ.ப.
ந.௧.எண்.54755/சி2/ இ1/2022, நாள் 01-11-2022...
பொருள்: பள்ளிக் கல்வி நிருவாக மறு சீரமைப்பு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் (தொடக்கக் கல்வி/ இடைநிலை/ தனியார் பள்ளிகள்) என பெயர் மாற்றம் மற்றும் புதிய அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டமை - பணியாளர் நிர்ணயம் - பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து ஆணையிடுதல் - சார்பு.
பார்வை:
1) அரசாணை (நிலை) எண்:.101, பள்ளிக் கல்வித் (வ.செ.1) துறை, நாள் 18.05.2018.
2) அரசாணை (நிலை) எண்.108,பள்ளிக் கல்வித் (ப.க(1) துறை, நாள் 28.05.2018.
3) அரசாணை (நிலை) எண்.151, பள்ளிக் கல்வித் (பக1(1) துறை, நாள் 09.09.2022.
4) அரசாணை (நிலை) எண்:172,பள்ளிக் கல்வித் (ப.க.4(1)) துறை, நாள் 30.09.2022.
5) தமிழ்நாடுபள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.49138/அ3/இ1/2022, நாள் 26.09.2022.
பார்வை 3-ல் கண்டுள்ள அரசாணையில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர்
(தொடக்கக் கல்வி), மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டும், புதிதாக 32 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டும் ஆணை வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக, பார்வை 4.ல் கண்டுள்ள அரசாணையில் தற்போது செயல்பாட்டிலுள்ள 120 மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 32 மாவட்டக் கல்வி அலுவலங்கள் என மொத்தம் 152 மாவட்டக் கல்வி அலுவலகங்கள் (தொடக்கக் கல்வி - 58 / இடைநிலை 55 / தனியார் பள்ளிகள் 39) செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வலுவலகங்களுக்கு பணி நிரவல் மூலம் பணியாளர்களை நியமனம் செய்யவும் அரசாணையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.