கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிறந்த தேதி மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்த தேதி மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

🍁🍁🍁 பணிப் பதிவேட்டில் பிறந்த தேதியை மாற்ற உத்தரவு - மேல்முறையீட்டு மனு தள்ளுபடி...

 காவல்துறை ஐ.ஜி கணேசமூர்த்தியின் பணி பதிவேட்டில் பிறந்த தேதியை மாற்ற உத்தரவிட்ட தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. தமிழக காவல்துறையில் ஐ.ஜி.யாக பதவி வகித்து வருபவர் எம்.டி.கணேசமூர்த்தி . 

இவர் கடந்த 1991 - ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். இவரது கல்விச்சான்றிதழ்களில் பிறந்த தேதி 20.10.1961 என குறிப்பிடப்பட்டிருந்தது . கணேசமூர்த்தி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 10.10.1962 அன்று பிறந்துள்ளார் . அதுதொடர்பாக சென்னை மாநகராட்சியில் கடந்த 1962 - ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய பிறந்த தேதியை மாற்றக்கோரி கணேசமூர்த்தி தமிழக அரசிடம் முறையிட்டார் . அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

இதனையடுத்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது . இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார் . வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி , கணேசமூர்த்தியின் 3 அண்ணன்கள், 2 தங்கைகள் பிறந்த தேதி தொடர்பான ஆவணங்களைப் பரிசீலித்து , கணேசமூர்த்தியின் பணிப்பதிவேட்டில் பிறந்த தேதியை 10.10.1962 என மாற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டார் . இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது . இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் , ஆர்.சுப்பையா , சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர் . தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர் .

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Internet Service Charges for Schools - Releasing Funds - State Project Director's Order

பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு Internet Service Charges for Schools - Releasing ...