கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

AstraZeneca லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
AstraZeneca லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஐரோப்பாவில் டென்மார்க் , ஐஸ்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கு தற்காலிக நிறுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளதாமே? ஏன்?

 


ஐரோப்பாவில் டென்மார்க் , ஐஸ்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கு தற்காலிக நிறுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளதாமே? ஏன்? 

இது குறித்து எனது  விரிவான விளக்கம் 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


டென்மார்க் நாட்டில் ஆஸ்ட்ரா செனிகா/ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டறிந்துள்ள AZD1222 தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில் முப்பது லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அவர்களுள் 22 பேருக்கு அசாதாரண ரத்த உறைதல் ஏற்பட்டிருப்பதாகவும், 

அவர்களுள் ஒருவர் மரணமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் முகமை  எடுத்துரைத்தது. 


இதனை கருத்தில் கொண்டு அந்நாடு வருகிற 14 நாட்களுக்கு AZD1222 தடுப்பூசி வழங்குதல் பணியை தற்காலிகமாக நிறுத்தி( TEMPORARY SUSPENSION)  வைத்து , நிகழ்ந்த இந்த ரத்த உறைதல் சம்பவங்களுக்கும் தடுப்பூசிக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை அறிய ஆணை பிறப்பித்துள்ளது.


TEMPORARY SUSPENSION/ ENQUIRY  என்பது சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தால் காவல் துறையினர் ACQUIST என்பார்களே அது போன்று என்று கருத்தில் கொள்ள வேண்டும். 


சந்தேகத்தின் பேரில் வழக்கு தொடுத்து கைது செய்து விசாரிப்பார்கள். பிறகு நீதி விசாரணை நடைபெறும். அதன் பிறகு தீர்ப்பு ÇONVICT என்று வந்தால் தான் அவர் குற்றவாளி ஆகிறார். எனவே AZD1222 தடுப்பூசியை ஐரோப்பிய யூனியன் நிரந்தநமாக தடை செய்து விட்டது என்று செய்தி பரவினால் அதை ஒதுக்கி விடுங்கள். அது புரளி. 


டென்மார்க்கை தொடர்ந்து  ஐஸ்லாந்து , நார்வே ஆகிய நாடுகளும் தற்காலி நிறுத்த ஆணை பிறப்பித்துள்ளன 


மொத்த ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஐம்பது லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டு இதுவரை 30 ரத்த உறைதல் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ கட்டமைப்பும் சரி.. அவர்கள் பக்கவிளைவுகளை பதிவு செய்து பராமரிக்கும் முறையும் சரி மிகவும் சிறப்பானது. 

எனவே அந்த நாடுகளில் இத்தகைய பக்கவிளைவுகள் துல்லியமாகக் கண்டறியப்படுவதில் வியப்பேதுமில்லை. 


இதய ரத்த நாள அடைப்பு 

மூளை ரத்த நாள அடைப்பு 

நுரையீரல் ரத்த நாள அடைப்பு 

கால்களின் ஆழ் சிறை அடைப்பு 

போன்றவை அதீத ரத்த உறைதலால் நிகழ்பவை. 


ஆயினும் ஒரு நாட்டில் மேற்சொன்ன நிகழ்வுகள் தடுப்பூசி போடப்படாத சூழ்நிலையிலும் கூட  அனுதினமும் முதியோர்களுக்கு, 45+ மக்களுக்கு நடந்தேறி வருகின்றன. 


உதாரணம் கூறுகிறேன் 


அதாவது ஒரு நாட்டில் ஒரு வருடத்தில் மொத்தம் 3650 பேர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகிறார்கள் என்று கடந்த ஐந்து வருட ஆவணங்கள் தெரிவிக்கின்றன என்றால் 


அங்கு சராசரியாக தினமும் 10 பேர் மாரடைப்பால் மரணமடைகிறார்கள் என்று அர்த்தம் 


அந்த பத்து பேரில் 5 பேர் 65+ வயதினர் 

3 பேர் 45+ வயதினர் 

2 பேர் 45 வயதுக்குள் என்று ஆவணங்கள் கூறினால் அதை ஒரு பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். 


இதை Normally  Expected Events என்போம். 


மற்றொரு பக்கம், தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட மருந்து வழங்கப்பட்டவர்களில் நிகழ்ந்துள்ள மொத்த மரணங்கள் எவ்வளவு? என்று பார்க்க வேண்டும்


தடுப்பூசி வழங்கப்பட்ட மக்கள் தொகையில் மாரடைப்பு மரணங்கள் நிகழ்கிறது என்றால் அந்த மரணங்களை ஆய்வுக்குட்படுத்தி அவை முதலில் தடுப்பூசியின் நேரடி விளைவால் நடந்தவை தானா? என்பதை உறுதி செய்ய வேண்டும்

 

இதற்கு மருத்துவ ஆய்வு / பிரேதக்கூறாய்வு போன்றவை துணை நிற்கும். 


அதற்கடுத்த படியாக தடுப்பூசி போடப்பட்டவர்களில் நிகழ்ந்த மரணங்கள் ஏற்கனவே அந்த நாட்டில் ஏற்படும் EXPECTED DEATHS தை தாண்டுகின்றனவா? என்று பார்க்க வேண்டும். 


அவ்வாறு தடுப்பூசி பெறப்பட்டவர்களில் அதிகமாக மரணங்கள் நிகழ்வு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த தடுப்பூசி தடை செய்யப்படும். இதை EXCESS DEATHS THAN EXPECTED என்று கூறுவோம்.


டென்மார்க் மற்றும் ஐரோப்பிய யூனியனின் சில நாடுகள் சேர்த்து 50லட்சம் டோஸ்களில் 30 ரத்த உறைதல் சம்பவங்கள்  நிகழ்ந்துள்ளன.  இது அந்நாடுகளின் Expected events அளவுக்குள் தான் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.  


அதற்கடுத்த படியாக தடுப்பூசிக்கும் இத்தகைய விளைவுகளுக்கும் தொடர்பு உள்ளனவா என்பதை அறிய CAUSALITY ANALYSIS செய்யப்படும் 


அதில் இந்த தடுப்பூசியை வழங்கும் ஏனைய நாடுகளில் இது போன்ற விளைவுகள் தோன்றுகின்றனவா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


இதுவரை இந்தியாவில் இரண்டரை கோடி டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது 

ஆயினும் ஓரிரு இடங்கள்  தவிர்த்து 

தடுப்பூசியினால் தொடர்ந்து கொத்து கொத்தாக மக்கள் தீவிர பக்க விளைவுகளுக்கு உள்ளானார்கள் என்று செய்தியில்லை.  அதுவே உண்மையும் கூட. 


இந்தியாவில் கோவிஷீல்டு / கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதிக பட்சம் தலைவலி, காய்ச்சல், கைகால் வலி மட்டுமே அறுதிப்பெரும்பான்மை பேருக்கு ஏற்படுகின்றது.


எனவே இந்திய மக்கள் ஐரோப்பிய நாடுகளில் நடப்பதைப் பார்த்து அச்சப்படத்தேவையில்லை.  


மேற்சொன்ன அனைத்து ஆய்வுகளையும் வட சிறந்த ஆய்வு 


RISK Vs BENEFIT ANALYSIS 


அதாவது ஒரு செயலை செய்வதால் ஏற்படும் தீமை 

அதை செய்யாமல் விட்டால் அடையும் தீமையை விட குறைவாக இருந்தால் 

அந்த செயலை செய்யத்தான் வேண்டும். 


ஹெல்மெட் போட்டு நீண்ட தூரம் பைக் ஓட்டினால் தலை முடி கொட்டுகிறது. 

தலைவலி வருகிறது.

ஆனால் இந்த தீமைகளை கருத்தில் கொண்டு ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டி அடிபட்டால் தலையில் பலத்த காயம் பட்டு மரமணடையும் தீமை நடக்கலாம். 


அதே போல 

கொரோனா தடுப்பூசி பெறுவதால் 

ஏற்படும் காய்ச்சல் / உடல் வலி போன்ற சிறு தீமைகளை பொறுத்துக்கொள்வது 


தீவிர கொரோனா ஏற்படுவது 

கொரோனா மரணங்கள் ஏற்படுவது போன்ற பெருந்தீமைகளில் இருந்து காத்துக்கொள்ளத் தான் என்ற எண்ணம் வேண்டும்.


மீண்டும் இரண்டு வாரங்களில் அந்த நாடுகள் ஆய்வை முடித்து மீண்டும் AZD1222 தடுப்பூசியை வழங்கும் பணிகளை தொடரும் என்றே எதிர்பார்க்கிறேன்.  


இந்தியாவில் வழங்கப்படும் இரண்டு தடுப்பூசிக்கும் தற்போது வரை பாதுகாப்பு தன்மை மிக்கவையாகவே ஆய்வு முடிவுகளின் படியும் கடந்த இரண்டு மாத கால அனுபவங்களின்படியும் விளங்குகின்றன. 


எனவே, அச்சமின்றி தடுப்பூசி பெற முன்வாருங்கள் 


அரசு மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று இலவசமாக தடுப்பூசியை பெற்றிடுங்கள்.  


நன்றி  


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Husband should be given leave to look after wife during maternity - High Court

மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் Husband should be given leave to look after wife durin...