கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜூலை 03 [July 03]....

  • மியான்மர் பெண்கள் தினம்
  • பெலரஸ் விடுதலை தினம்(1944)
  • க்யூபெக் நகரம் உருவாக்கப்பட்டது(1608)
  • அமெரிக்காவின் முதல் சேமிப்பு வங்கி நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1819)

>>>G.O Ms. No.115, June 28, 2012, கல்லூரிக் கல்வித்துறை - கல்வியியல் கல்லூரிகள்-கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - 2012-13-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள்

>>>அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை நவீனப்படுத்த பயிற்சி

அரசு பள்ளிகளில், தினமும் ஒவ்வொரு மெனு, 13 வகை சாப்பாடு, ஐந்து வகை முட்டை ஸ்பெஷல் என அசத்தல் திட்டத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
புகை, கரி படிந்த இருளான சமையல் அறை, ஒடுங்கி கறை பிடித்த பாத்திரங்கள், சுகாதாரமில்லா சாப்பாடு, பள்ளத்தை நோக்கி பாயும் சாம்பார்... இவையெல்லாம், அரசு பள்ளி சத்துணவுக் கூடங்களின் அடையாளம். தற்போது, பள்ளி சத்துணவு திட்டத்தை, அரசு கொஞ்சம் கொஞ்சமாக, நவீனப்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக, ஆண்டுதோறும் புதிய பாத்திரங்கள், விறகுக்கு பதிலாக காஸ் இணைப்பு என, பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது.
ஆனால், பள்ளி சத்துணவு சமைக்கும் முறையில், பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. அரசு வழங்கும் நிதியை கொண்டு, பள்ளிகளில் உயர் தரமாக தினமும் விதவிதமான, "மெனு' கொடுத்து, அசத்த முடியும் என்பதை, "செப்' தாமு நிரூபித்துள்ளார். சென்னை சைதாபேட்டை, மாந்தோப்பு அரசு பள்ளியில், உணவுத் துறை அமைச்சர் சம்பத் முன்னிலையில், "செப்' தாமு மாணவர்களுக்கு கமகம மணத்துடன், சத்துணவு தயாரித்து கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, 16 மாவட்டத்திலுள்ள சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு சுவையான ஆரோக்கியமான சத்துணவு சமைப்பது, சுகாதார முறைகளை கடைபிடிப்பது குறித்து, பயிற்சி அளித்துள்ளார்.
"செப்' தாமு, கோவையில், "தினமலர்' நிருபரிடம் கூறியதாவது: பள்ளிகளில் சத்துணவு சுவையாக இல்லாததால், மாணவர்கள் சாப்பாட்டை முழுமையாக சாப்பிடாமல், வீணாக கொட்டுவதை பார்த்ததால், மாணவர்களுக்கு சுவையான சாப்பாடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தற்போது, சத்துணவில் சாப்பாடு, சாம்பார், வாரத்தில் ஐந்து நாள் அவித்த முட்டை, ஒரு நாள் கொண்டைக் கடலை அல்லது பாசிப்பயறு அல்லது உருளைக் கிழங்கு வேகவைத்து கொடுக்கப்படுகிறது.
அதே பொருட்களை கொண்டு, உயர் தரத்துடன், ஆரோக்கியமான முறையில், சுவையான சாப்பாடு தயாரித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டேன். அரசு வழங்கும் நிதிக்குள், இந்த திட்டத்தை அமைத்தேன்.
சத்துணவில், கொண்டைக் கடலை பிரியாணி, தக்காளி புலாவ், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, கீரை சாதங்கள், பிஸ்மலாபாத், கடலை குழப்பு சாதம், சாம்பார் சாதம், பிரைடு ரைஸ், காய்கறி கலந்து மசால் சாதம் ஆகிய, 13 வகையான நாவுக்கு ருசியான சாப்பாடு தயாரிக்க முடியும். இந்த திட்டத்தை "டெமோ' பார்க்க, சென்னையில், ஸ்பெஷல் மெனு அடிப்படையில், சத்துணவு தயாரித்து கொடுத்தேன். குழந்தைகள் உணவை வீணடிக்காமல், மறுபடியும் விரும்பி வாங்கி சாப்பிட்டனர்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில், விதவிதமான உணவு வகைகள் சமைக்க, பயிற்சி அளித்து வருகிறேன். இதன் மூலம், சத்துணவு திட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுள்ளது. இவ்வாறு, "செப்' தாமு தெரிவித்தார்.

>>>பி.ஏ.பி.எல்., தரவரிசை பட்டியல் வெளியீடு

பி.ஏ.பி.எல்., (ஹானரஸ்) படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அம்பேத்கர் சட்ட பல்கலையில் வழங்கப்படும், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., (ஹானரஸ்) பட்டப் படிப்பிற்கு, 120 இடங்கள் உள்ளன. இதற்கு, 509 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், தகுதியற்றவை என, 115 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 394 விண்ணப்பங்கள் கலந்தாய்விற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கலந்தாய்வு ஜூலை 5ம் தேதி துவங்குகிறது. இதற்கான தரவரிசை பட்டியல், நேற்று மாலை வெளியிடப்பட்டது. கலந்தாய்வு நடைபெறும் அன்றே, மாணவர்களுக்கான இடஒதுக்கீடும் முடிவு செய்யப்பட உள்ளது. வகுப்புகள் ஜூலை 9ம் தேதி முதல் துவங்க உள்ளன.
பிரிவு வாரியான கட்-ஆப் மதிப்பெண் விவரம்:
ஓ.சி., 96
பி.சி., 92.875
பி.சி., (எம்) 92.5
எம்.பி.சி., 86
எஸ்.சி., 86
எஸ்.சி., (ஏ) 72
எஸ்.டி., 78.5

>>>தேவையை விட அதிகம் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கு பணியிட மாறுதல்

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகளின் தேவையை விட கூடுதலாக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யும் கலந்தாய்வு, 13ம் தேதி முதல் நடக்கிறது.
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும்; 6, 7, 8 ஆகிய வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும் இருக்க வேண்டும். ஆகையால், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறித்து, விவரம் சேகரிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுவதற்காக, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 13ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரையும்; தொடக்கக் கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 21ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரையும், பணி நிரவல் (கூடுதல் ஆசிரியர் பணியிட மாற்றம்) மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

>>>ஜூலை 02 [July 02]....

  • ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது(2004)
  • தாமஸ் சேவரி, முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்(1698)
  • முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சாவில் திறக்கப்பட்டது(1962)
  • பி‌ரெஞ்ச் ராணுவத்தினர், பசிபிக் பெருங்கடலில் அணுஆயுத சோதனையை நிகழ்த்தினர்(1966)

>>>தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை 21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜூலை  21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பணி நிரவல் மற்றும் மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை
1. ஜூலை 21-ந் தேதி - காலை - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் - ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்; பிற்பகல் - பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
2. ஜூலை 22-ந் தேதி - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்.
பணி நிரவல் மற்றும் மாறுதல் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சிலிங் அட்டவணை
1. ஜூலை  28-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் – ஒன்றியத்திற்குள்.
2. ஜூலை  29-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
3. ஜூலை  31-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...