கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜூலை 04 [July 04]....

  • பிலிப்பைன்ஸ் குடியரசு தினம்
  • அமெரிக்க விடுதலை தினம்(1776)
  • இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் இறந்த தினம்(1902)
  • நியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது(1634)

>>>2012-2013ம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கும், உடன் வருபவர் ஒருவருக்கும்(1+1) இருவழி பயணப் போக்குவரத்துக் (50%)கட்டணச் சலுகை

>>>பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் 100லிருந்து 500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

>>>இந்தியாவில் முதன் முறையாக விலையில்லாத நோட்டுப்புத்தகம் வழங்கும் திட்டம் துவக்கம்

இந்தியாவில் முதன் முறையாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லாத நோட்டுப்புத்தகம் வழங்கும் திட்டம், தமிழகத்தில் நேற்று துவங்கப்பட்டது. 150 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், 81 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர். திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, ""மார்க்'கைத் தவிர, மற்ற அனைத்து திட்டங்களையும் விலையில்லாமல் வழங்கிவிட்டோம்'' என்றார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், திட்ட துவக்க விழா, சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடந்தது. துறை முதன்மைச் செயலர் சபிதா தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் மணி வரவேற்றார்.

திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ, மாணவியருக்கு, விலையில்லாத நோட்டுப் புத்தகங்களை வழங்கி, அமைச்சர் சிவபதி பேசியதாவது:இந்தியாவில், முதல் மாநிலமாக தமிழகத்தில் இத்திட்டம் துவக்கப்படுகிறது. அரசுக்கு நிதிச்சுமை இருந்தபோதும், தமிழகம் 100 சதவீத எழுத்தறிவை பெற வேண்டும் என்பதற்காக, பட்ஜெட்டில் அதிகபட்சமாக 14 ஆயிரத்து 551 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டார். வருங்காலத்தில், இந்தியாவில் 100 சதவீத எழுத்தறிவை பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும். ஏழை, எளிய பெற்றோர், நோட்டுப்புத்தகம் வாங்க சிரமப்படுவதை அறிந்த முதல்வர், இத்திட்டத்தையும் அமல்படுத்த உத்தரவிட்டார்.விலையில்லாத சைக்கிள், ஆண்டுக்கு நான்கு செட் சீருடைகள், காலணி, புத்தகப்பை, அட்லஸ், கலர் பென்சில் உள்ளிட்ட பல்வேறு விலையில்லாத திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், விலையில்லாத நோட்டுப் புத்தகம் திட்டம் மட்டும், 150 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இதனால், 81 லட்சத்து 2,128 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.ஆசிரியர், மாணவ, மாணவியரை, தங்களது பிள்ளைகள் போல் பார்க்க வேண்டும். மாணவ, மாணவியரும், ஆசிரியரின் கண்டிப்பை, பெற்றோர் வழங்கும் அறிவுரையாக கருதி ஏற்க வேண்டும். ஆசிரியர், மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். மாணவ, மாணவியர், தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மொத்த்தில், "மார்க்'கைத் தவிர, மற்ற அனைத்து திட்டங்களையும் விலையில்லாமல் வழங்கி வருகிறோம்.இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.

முன்னதாக, துறை முதன்மைச் செயலர் சபிதா பேசியதாவது:பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, இரு முறை முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது, ""மாணவர்களுக்கு இன்னும் வேறு ஏதாவது செய்ய வேண்டி உள்ளதா?'' எனக் கேட்டு, நோட்டுப் புத்தகம் மட்டும் வழங்கவில்லை என்ற தகவல் அறிந்ததும், அதையும் வழங்க உத்தரவிட்டார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, முதல் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டுப் புத்தகமும் வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த பருவங்களுக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், உரிய காலத்திற்குள் வழங்கப்படும்.இவ்வாறு செயலர் சபிதா பேசினார். பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால், தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

மின் சிக்கனம் குறித்து பிரசாரம்:அனைத்து நோட்டுப் புத்தகத்தின் பின்புறம், "மின் சிக்கனம்; தேவை இக்கணம்' என, மின் சிக்கனத்தின் அவசியம் குறித்து, ஒரு பக்கத்தில் பல்வேறு தகவல்களை, மாணவ, மாணவியருக்கு தெரிவித்துள்ளனர். மின் சிக்கனத்தின் அவசியத்தை, இளம் வயதிலேயே மாணவ, மாணவியர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, இப்படி ஒரு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன், ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தின் பின்புற அட்டையில், மாணவர்களுக்கான சுவையான புதிய தகவல்கள், "கார்ட்டுன்' படங்களுடன் தரப்பட்டுள்ளன.

நோட்டுப் புத்தகங்கள் விவரம்:நாற்பது பக்கம், 80 பக்கம், 196 பக்கம், ஓவிய நோட்டுப் புத்தகம், கணித செய்முறை வடிவியல் மற்றும் கணித வரைபட நோட்டுப் புத்தகம், கட்டுரை நோட்டுப் புத்தகம் ஆகியவை, வகுப்புகளுக்கு தகுந்தாற்போல் வழங்கப்படுகின்றன. முதல் பருவத்தை பொருத்தவரை, 1ம் வகுப்பிற்கு 7 நோட்டுகள், 2ம் வகுப்பிற்கு 7 நோட்டுகள், 3ம் வகுப்பிற்கு 8 நோட்டுகள், 4ம் வகுப்பிற்கு 8 நோட்டுகள், 5ம் வகுப்பிற்கு 10 நோட்டுகள், 6,7 வகுப்புகளுக்கு 11 நோட்டுகள், 8ம் வகுப்பிற்கு 10 நோட்டுகள் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. 9,10 வகுப்புகளுக்கு, முறையே 11 மற்றும் 10 நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

பல்வேறு வண்ணங்களில் நோட்டுப் புத்தகங்கள்:இலவச நோட்டுப் புத்தகங்கள், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. இந்த நோட்டுப் புத்தகங்கள், மாணவரைக் கவரும் வகையில், பல்வேறு வண்ணங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தின் பின்புறம், எந்த வகுப்புக்கான நோட்டுப்புத்தகம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தந்த பாடம் சார்ந்த பொருள்படும்படியான படங்கள், நோட்டுப் புத்தகத்தின் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளன. தமிழக அரசின் சின்னம் மற்றும் முதல்வரின் படமும் பொறிக்கப்பட்டுள்ளன.

>>>ஜூலை 03 [July 03]....

  • மியான்மர் பெண்கள் தினம்
  • பெலரஸ் விடுதலை தினம்(1944)
  • க்யூபெக் நகரம் உருவாக்கப்பட்டது(1608)
  • அமெரிக்காவின் முதல் சேமிப்பு வங்கி நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1819)

>>>G.O Ms. No.115, June 28, 2012, கல்லூரிக் கல்வித்துறை - கல்வியியல் கல்லூரிகள்-கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - 2012-13-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள்

>>>அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை நவீனப்படுத்த பயிற்சி

அரசு பள்ளிகளில், தினமும் ஒவ்வொரு மெனு, 13 வகை சாப்பாடு, ஐந்து வகை முட்டை ஸ்பெஷல் என அசத்தல் திட்டத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
புகை, கரி படிந்த இருளான சமையல் அறை, ஒடுங்கி கறை பிடித்த பாத்திரங்கள், சுகாதாரமில்லா சாப்பாடு, பள்ளத்தை நோக்கி பாயும் சாம்பார்... இவையெல்லாம், அரசு பள்ளி சத்துணவுக் கூடங்களின் அடையாளம். தற்போது, பள்ளி சத்துணவு திட்டத்தை, அரசு கொஞ்சம் கொஞ்சமாக, நவீனப்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக, ஆண்டுதோறும் புதிய பாத்திரங்கள், விறகுக்கு பதிலாக காஸ் இணைப்பு என, பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது.
ஆனால், பள்ளி சத்துணவு சமைக்கும் முறையில், பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. அரசு வழங்கும் நிதியை கொண்டு, பள்ளிகளில் உயர் தரமாக தினமும் விதவிதமான, "மெனு' கொடுத்து, அசத்த முடியும் என்பதை, "செப்' தாமு நிரூபித்துள்ளார். சென்னை சைதாபேட்டை, மாந்தோப்பு அரசு பள்ளியில், உணவுத் துறை அமைச்சர் சம்பத் முன்னிலையில், "செப்' தாமு மாணவர்களுக்கு கமகம மணத்துடன், சத்துணவு தயாரித்து கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, 16 மாவட்டத்திலுள்ள சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு சுவையான ஆரோக்கியமான சத்துணவு சமைப்பது, சுகாதார முறைகளை கடைபிடிப்பது குறித்து, பயிற்சி அளித்துள்ளார்.
"செப்' தாமு, கோவையில், "தினமலர்' நிருபரிடம் கூறியதாவது: பள்ளிகளில் சத்துணவு சுவையாக இல்லாததால், மாணவர்கள் சாப்பாட்டை முழுமையாக சாப்பிடாமல், வீணாக கொட்டுவதை பார்த்ததால், மாணவர்களுக்கு சுவையான சாப்பாடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தற்போது, சத்துணவில் சாப்பாடு, சாம்பார், வாரத்தில் ஐந்து நாள் அவித்த முட்டை, ஒரு நாள் கொண்டைக் கடலை அல்லது பாசிப்பயறு அல்லது உருளைக் கிழங்கு வேகவைத்து கொடுக்கப்படுகிறது.
அதே பொருட்களை கொண்டு, உயர் தரத்துடன், ஆரோக்கியமான முறையில், சுவையான சாப்பாடு தயாரித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டேன். அரசு வழங்கும் நிதிக்குள், இந்த திட்டத்தை அமைத்தேன்.
சத்துணவில், கொண்டைக் கடலை பிரியாணி, தக்காளி புலாவ், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, கீரை சாதங்கள், பிஸ்மலாபாத், கடலை குழப்பு சாதம், சாம்பார் சாதம், பிரைடு ரைஸ், காய்கறி கலந்து மசால் சாதம் ஆகிய, 13 வகையான நாவுக்கு ருசியான சாப்பாடு தயாரிக்க முடியும். இந்த திட்டத்தை "டெமோ' பார்க்க, சென்னையில், ஸ்பெஷல் மெனு அடிப்படையில், சத்துணவு தயாரித்து கொடுத்தேன். குழந்தைகள் உணவை வீணடிக்காமல், மறுபடியும் விரும்பி வாங்கி சாப்பிட்டனர்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில், விதவிதமான உணவு வகைகள் சமைக்க, பயிற்சி அளித்து வருகிறேன். இதன் மூலம், சத்துணவு திட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுள்ளது. இவ்வாறு, "செப்' தாமு தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

 தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...