கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளி பாடத்திட்டத்தில் ஆர்.டி.ஐ. - மத்திய அரசு பரிசீலனை

 தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.,) குறித்து, மக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள மத்திய அரசு, இந்தச் சட்டத்தின் பல அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விவகாரங்களில், முதன்மையான நிறுவனமாகச் செயல்படும் மத்தியப் பணியாளர் நலத்துறை இதுதொடர்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் (என்.சி. இ.ஆர்.டி.,) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான வரைவுத் திட்டமும் விரைவில் தயாராக உள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை, பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யும் விவகாரம், தற்போதுதான் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. என்.சி.இ.ஆர்.டி., உடன் கலந்து ஆலோசித்த பின்னரே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, மத்தியப் பணியாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு துறைகளிலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு, ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்தச் சட்டம் தொடர்பான விவரங்களை இடம் பெறச் செய்யும் யோசனை உருவாகியுள்ளது.
அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.சில துறைகளின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் திறமைகள் எல்லாம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மூலம் தெரியவந்துள்ளன.
அதனால், இந்தச் சட்ட அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டங்களில் இடம் பெறச் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்களில், இவை இடம் பெறலாம்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

>>>ஜூலை 10 [July 10]....

  • பஹாமாஸ் விடுதலை தினம்(1973)
  • டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது(988)
  • வேலூர் சிப்பாய் கழகம் ஏற்பட்டது(1806)
  • உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது(1962)
  • இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபாவின் பக்தர்களின் அமைதி தினம்(1925)

>>>DME: MBBS/BDS

>>>மூளைச்சாவு ஏற்பட்ட மாணவி உடல் உறுப்புகள் தானம்: ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன

 விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பலனின்றி இறந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள், முகம் தெரியாத ஏழு பேரின் உயிரை காப்பாற்றி உள்ளது.
கோவை, ரத்தினபுரியை சேர்ந்தவர்கள் மணியன்- கலாமணி தம்பதி. மணியன் ஒர்க்ஷாப் உரிமையாளர். இவர்களுக்கு இரு பெண்கள். மூத்த பெண் சரண்யா, 21, கோவில்பாளையம் அருகில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், பி.இ.,(இ.சி.இ)இறுதி ஆண்டு படித்து முடித்து, "ரிசல்டு'க்காக காத்திருந்தார். வளாக நேர்காணலில், "இன்போசிஸ்' நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டு, இம்மாத இறுதியில் பணியில் சேர இருந்தார். இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் தற்காலிகமாக, "பிளேஸ்மென்ட் டிரெய்னர்' வேலையில் சேர்ந்தார். கடந்த 29ம்தேதி வேலை நிமித்தமாக, சரண்யா மற்றும் கம்பெனி ஊழியர்கள் ஐந்து பேர், காரில் ஈரோடு சென்று விட்டு, கோவை திரும்பும்போது, சித்தோடு அருகில் கார் விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் இறந்தனர். பலத்த காயமடைந்த சரண்யா, கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்த சரண்யாவுக்கு நேற்று முன் தினம் "மூளைச்சாவு' ஏற்பட்டது. இதனால், படிப்படியாக உடல்நிலை மோசமடைந்து, நேற்று இறந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், அதிலிருந்து மீண்டு மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் தங்களின் முடிவை தெரிவித்தனர். டாக்டர்கள் குழு, சரண்யாவின் கண்கள், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை, பாதிக்கப்பட்ட எழு பேருக்கு பொருத்தினர். சரண்யாவின் உடல் உறுப்புகள், முகம் தெரியாத ஏழு பேரின் உயிரை காப்பாற்றி, வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சரண்யாவின் தந்தை மணியன் கூறியதாவது: பள்ளி பருவம் முதலே சரண்யா துடிப்பான, தைரியமான பெண். படிப்பில் படுசுட்டி. எந்தவொரு போட்டியானாலும் பயப்படாமல் கலந்து கொள்வாள். கல்லூரியில் கடைசி செமஸ்டர் "ரிசல்ட்' கடந்த 28ம் தேதி வெளியானது. அதில், 95 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருந்தாள். ரிசல்ட் வெளியான அடுத்த நாளே விபத்தில் சிக்கிவிட்டாள். மூளைச்சாவு ஏற்பட்டதால், எவ்வளவு முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. ஆசையாய் வளர்த்த மகளை, வெறுமனே புதைக்க மனமில்லாமல், அவளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம். எங்கள் மகள் எங்களை விட்டு பிரிந்தாலும், அவளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதன் மூலம், இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என நம்புகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்....

>>>ஜூலை 09 [July 09]....

  • ஆஸ்திரேலிய அரசியலமைப்பு தினம்
  • அர்ஜென்டீனா விடுதலை தினம்(1816)
  • பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது(1948)
  • ஆப்ரிக்க ஒன்றியம், அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது(2002)
  • அக்னி 3 ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது(2006)

>>>பள்ளிக்கல்வித்துறை அரசாணை(நிலை) எண்:169, நாள்:06-07-2012 - ஜூலை 15 பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளினைக் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுதல் மற்றும் 2012ஆம் ஆண்டில் சிறந்த பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான ”பரிசளிப்புத் திட்டம்” ஏற்படுத்துதல்

>>>பள்ளிக்கல்வித்துறை அரசாணை(நிலை) எண்:169, நாள்:06-07-2012 மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:16178/ஜே/2012, நாள்:07-07-2012ன் படி- ஜூலை 15 பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளினைக் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுதல் மற்றும் 2012ஆம் ஆண்டில் சிறந்த பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான ”பரிசளிப்புத் திட்டம்” ஏற்படுத்துதல் - அரசாணையைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....

>>>மின்வாரியத்தில் 4 ஆயிரம் பேருக்கு வேலை; முதல்வர் உத்தரவு

தமிழக மின்வாரியத்தில் 4 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் புதிதாக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதுடன் மின்வாரியத்தின் அடிப்பை களப்பணிகள் துரிதமாக நடக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மின்வாரியத்தில் 4 ஆயிரம் உதவிக்களப்பணியாளர்கள் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 4 ஆயிரம் பேரும் மாநிலம் முழுவதும் பரவலாக பணியில் அமர்த்தப்படுவர். இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்படுவர். தேர்வானவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி காலமாக கருதப்பட்டு அவர்களுக்கு மாதம்தோறும் தொகுப்பூதியமாக ரூ .3 ஆயிரத்து 250 வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கூடங்குளம் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி விரைவில் துவக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...