கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜூலை 13 [July 13]....

  • லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் மலையின் மேல் ஹாலிவுட் குறியீடு அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது(1923)
  • இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன(1844)
  • பெர்லின் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது(1878)
  • முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உருகுவேயில் நடைபெற்றன(1930)

>>>அரசிதழ் எண்:27, நாள்:11-07-2012 [Gazette Issue No.27, Dated:11-07-2012]

>>>தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.04404 இ1 2012, நாள் 11-07-2012ன் படி அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைக் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் மற்றும் மாறுதல் அளித்தல் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

>>>தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.04404 இ1 2012, நாள் 11-07-2012ன் படி அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைக் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் மற்றும் மாறுதல் அளித்தல் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது - இயக்குநரின் செயல்முறைகளைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....

>>>பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்.270 நாள் 10-07-2012ன் படி அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

>>>பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்.264, நாள்.06-07-2012ன் படி காலை வழிபாட்டுக்கூட்டத்திலும், மதிய உணவு இடைவேளைக்கு முன்பும், பின்பும் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்

>>>1,150 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

பள்ளிக் கல்வித் துறையில், 1,150 பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியராக பதவி உயர்த்தப்பட்டனர். மீதமுள்ள முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில், நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், நியமிக்கப்பட உள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங், பதவி உயர்வு கவுன்சிலிங் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வரிசையில், பள்ளிக் கல்வித் துறையில், தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
காலை 9:30 மணிக்கு, மாவட்ட வாரியாக இருந்த, 6,000 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் வெளியிடப்பட்டன. இதன்பின், பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் உமா (மேல்நிலைக் கல்வி), கண்ணப்பன் (இடைநிலைக் கல்வி), உஷாராணி (என்.எஸ்.எஸ்.,) ஆகியோர், கலந்தாய்வை நடத்தினர்.
பணிமூப்பு வாரியாக ஆசிரியர் அழைக்கப்பட்டு, அவரவர் தேர்வு செய்த இடங்களில், முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகள் வழங்கப் பட்டன. அழைக்கப்பட்ட 1,234 பேரில், 1,150 பட்டதாரி ஆசிரியர், பதவி உயர்வு உத்தரவுகளை பெற்றனர்.

>>>ஜூலை 12 [July 12]....

  • செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)
  • நார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)
  • போர்ச்சுகலுக்கும் நெதர்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1641)
  • 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்(1806)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு  மாண்புமிகு ம...