கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>படிக்காத மேதை: இன்று காமராஜரின் 109வது பிறந்த நாள்

இன்று கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த தினம். இவரது காலத்தில் தான், கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்றது.காமராஜர், விருதுநகரில் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி, சிவகாமி அம்மாள். காமராஜருக்கு ஆறு வயது இருக்கும் போது தந்தை காலமானார். இதனால் பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு முடித்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த அவருக்கு, சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர்: 16வது வயதில் காங்கிரசில் சேர்ந்தார். ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். 1930ம் ஆண்டு வேதாரண்யத்தில், ராஜாஜியின் தலைமையில் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். கோல்கட்டா, அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டதால், தமிழக சிறைகளிலும் இருந்தார். சிறை வாழ்க்கையின் போது, சுயமாக புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக் கொண்டார்.

அரசியல் வாழ்க்கை: சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார். 1936ம் ஆண்டு சத்தியமூர்த்தி, காமராஜரை காங்., கட்சியின் செயலளராக நியமித்தார். 1940ம் ஆண்டு சிறையிலிருக்கும் போதே, விருதுநகர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-52 வரை சென்னை மாகாண காங்., தலைவராக இருந்தார். 1953ம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்றார். அவர் முதல்வராக இருந்த காலத்தில், மதிய உணவுத்திட்டம், நீர்பாசன திட்டங்கள், தொழிற்துறை திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றினார். மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட காமராஜர், 9 ஆண்டுகள் பதவி வகித்தார்.

“கே-பிளான்”: அகில இந்திய காங்கிரசிற்கு தலைமை வகித்த காமராஜர், பதவியை விட மக்கள் பணியும், கட்சிப் பணியுமே முக்கியம் என கருதி ஒரு திட்டத்தை வெளியிட்டார். இதன்படி கட்சியில் இளைஞர்களுக்கு பதவியை அளித்து விட்டு, மூத்த தலைவர்கள் கட்சி பணி மட்டுமே ஆற்றுவது என தெரிவித்தார். 1963ம் ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணியாற்ற முன் வந்தார். நேருவின் மறைவுக்குப் பிறகு, லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக காமராஜர் முன்மொழிந்தார். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சாஸ்திரியின் திடீர் மரணத்துக்குப் பிறகு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது இவரது முயற்சியால் இந்திரா பிரதமராக்கப்பட்டார்.

மறைவு: 1975ம் ஆண்டு அக்.2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த தினத்தில், காமராஜரின் உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது. அவரது இறப்பின் போது பையில் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது மறைவுக்குபின் 1976ம் ஆண்டு இந்திய நாட்டின் மிக உயரிய "பாரத ரத்னா' விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது. புனிதமான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காமராஜருக்கு மக்கள், படிக்காத மேதை, ஏழைப்பங்காளன், கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்ற பட்டங்களை சூட்டி அவரை போற்றி வருகின்றனர்.

அதிகாரத்தில் குறுக்கிடாத தலைவர்: கடந்த, 1965-66ம் ஆண்டு, விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றினேன். அப்போது, தமிழக முதல்வராக, பக்தவத்சலம் இருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக, காமராஜர் இருந்தார். அந்த காலத்தில், ஒரு தாலுகாவில் இருந்து, மற்றொரு தாலுகாவிற்கு அரிசி, பருப்பு எடுத்துச் செல்வது குற்றம். மீறுவோர் மீது, வழக்கு பதிந்து, சிறைக்கு அனுப்புவேன். காமராஜரின் உறவினர்கள், சிபாரிசுக்கு வருவது வழக்கம். நான் யாருடைய சிபாரிசையும் ஏற்க மாட்டேன். தொடர்ந்து இதுபோல் நடந்து கொண்டிருந்ததால் பொறுத்துக்கொள்ள முடியாத, காமராஜரின் உறவினர் சிலர், ஒரு கட்டத்தில், சென்னையில், காமராஜரிடம் நேரடியாக புகார் தெரிவித்தனர். அவரோ, "அவன் சரியாகத்தான் வேலை செய்கிறான்; நீங்கள் தலையிடாதீர்கள்' எனக் கூறி அனுப்பி வைத்தார். ஒருமுறை கூட இதுகுறித்து என்னிடம் அவர் கேட்டதில்லை. உயர்ந்த அந்தஸ்தில் இருந்த போதும், அரசு பணிகளில் குறுக்கிடாத பெருந்தலைவர் அவர்.

>>>ஜூலை 15 [July 15]....

  • தமிழக முன்னாள் முதல்வர் கே.காமராஜர் பிறந்த தினம்(1903)
  • மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(2003)
  • தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினம்(1876)
  • இரண்டு வருட உருவாக்கத்திற்கு பின் அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது(1954)

>>>தொடக்கக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது 2011 - 2012 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - மாவட்ட அளவில் தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து கருத்துருக்களை அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

>>>தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.13682/ஜே2/2012, நாள்.27.06.2012 மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறுவதற்கான மாதிரி விண்ணப்ப படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>>டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறுவதற்கான தெளிவான விண்ணப்ப படிவத்தைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>>கடினமான தேர்வால் தகுதியான ஆசிரியர் கிடைப்பது நிச்சயம்: டி.ஆர்.பி., கருத்து

டி.இ.டி., தேர்வு எழுதியவர்களில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என எதிர்பார்ப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. 6.56 லட்சம் பேர், இத்தேர்வை எழுதினர். இரு தாள் தேர்வுகளுமே கடினமாக இருந்ததாகவும், நேரமின்மை பெரிய பிரச்னையாக இருந்தது எனவும், தேர்வர் புகாராகத்தெரிவித்தனர்.டி.இ.டி., தேர்வு கேள்வித்தாள், தமிழகம் மட்டுமல்லாமல், ஏற்கனவே தேர்வு நடந்த கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், கடினமாகவே அமைந்துள்ளது.சி.பி.எஸ்.இ., தேசிய அளவில் நடத்திய தகுதித் தேர்வில், தேர்ச்சி சராசரி வெறும் 6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டி.ஆர்.பி., நடத்திய தேர்வு, பெரும் சலசலப்பை
ஏற்படுத்தியது.

"திறமையானவர் கிடைப்பார்':இதுகுறித்து, டி.ஆர்.பி.,வட்டாரம் கூறியதாவது: கேள்வித்தாள் அமைக்கும் பணியில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த பாட வல்லுனர்களும் இடம் பெற்றனர். என்.சி.டி.இ., கூறியுள்ள விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் தான், கேள்வித்தாள் தயாரிக்கப் பட்டன.டி.இ.டி., தேர்வில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றாலே, அது பெரிய விஷயம். இந்த 10 சதவீதம் பேரும், நல்ல திறமை உள்ளவர்களாக இருப்பர் என்பதுமட்டும் உறுதி.

"கீ-ஆன்சர்' எப்போது?மாவட்டங்களில் இருந்து, விடைத்தாள்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை, "ஸ்கேன்' செய்து, அதன்பின் மதிப்பீட்டு பணிகளை செய்ய வேண்டும். இரு வாரங்களில், இணையதளத்தில், "கீ-ஆன்சர்' வெளியிடப் படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பத்து சதவீத தேர்ச்சி எனில், 65,600 பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர். டி.ஆர்.பி., இப்படி தெரிவித்தாலும், 5 சதவீதம் வரை தான் தேர்ச்சி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வராதவர்கள் எண்ணிக்கை :முதல் தாள் தேர்வு எழுதியவர்களில், 7 சதவீதம் பேரும், இரண்டாம் தாள் எழுதியவர்களில், 8 சதவீதம் பேரும்,"ஆப்சென்ட்' ஆனதாக,
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அதன்படி, முதல் தாள் தேர்வில், 17,287 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 28,054 பேரும், "ஆப்சென்ட்' ஆகி உள்ளனர்.

>>>ஜூலை 14 [July 14]....

  • எம்.பி.,3 பெயரிடப்பட்டது(1995)
  • ஈராக் குடியரசு தினம்
  • நாசாவின் சேர்வெயர் 4 எனும் ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது(1967)
  • பிரெஞ்சுப் புரட்சியின் 200வது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது(1989)
  • ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன(1933)

>>>2011-2012 சிறுபான்மையினர் நலத்துறையில் பத்தாம் வகுப்பு வரையிலான ஊக்கத்தொகை பெறும் புதிய பயனாளிகள் [Dir. of Minorities Welf.: Pre Matric Scholarship 2011-12-Beneficiaries (Fresh 3rd Batch)]

>>>கடினமான தேர்வு இது: டி.இ.டி., தேர்வு எழுதியவர்கள் புலம்பல்

டி.இ.டி., தேர்வு, எதிர்பார்த்ததை விட மிகக் கடினமாக இருந்ததாகவும், முதல் தாள் தேர்வுக்கான கேள்விகள், பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படவில்லை என்றும், கணிதக் கேள்விகள், விடை அளிக்க முடியாத அளவிற்கு கடினமாக இருந்ததாகவும், தேர்வர் பலரும் புலம்பினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக நேற்று, ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (டி.இ.டி.,) நடந்தது. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடந்தன. 1,027 மையங்களில் நடந்த தேர்வில், 6.56 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியை எதிர்நோக்கி உள்ளவர்கள், தேர்வில் பங்கேற்றனர். இதையொட்டி, அனைத்து வகை பள்ளிகளுக்கும், நேற்று விடுமுறை விடப்பட்டது. காலை 10.30 மணி முதல், 12.00 மணி வரை, முதல் தாள் தேர்வு நடந்தது. சென்னையில், 78 மையங்களில் தேர்வுகள் நடந்தன.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வை முடித்து வெளியே வந்த தேர்வர்களிடம், "தேர்வு எப்படி இருந்தது?' என கேட்டது தான் தாமதம்; ஆளாளுக்கு புலம்பித் தள்ளினர். ஒருவர் கூட, "தேர்வு எளிதாக இருந்தது' எனக் கூறவில்லை. "கேள்விகளைப் படித்தபோது, தலை சுற்றியது. பாடப் பகுதிகளுக்கும், கேட்ட கேள்விகளுக்கும் சம்பந்தமே இல்லை. கணிதத்திற்கு 30 கேள்விகள்; 30 மதிப்பெண்கள். இதற்கு, ஒவ்வொரு கேள்விக்கும், உடனடியாக விடையை அளிக்க முடியவில்லை. கணக்கு போட்டுப் பார்த்து, விடை அளிப்பதற்கு நேரம் போதவில்லை. இப்படி கேள்வி கேட்டால், ஒன்றரை மணி நேரத்தில் எப்படி தேர்வெழுத முடியும்?' என்று பலரும் தெரிவித்தனர்.

எதற்கு இந்த தேர்வு? "ஏற்கனவே இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படித்து முடித்து, அரசு சான்றிதழும் பெற்றிருக்கிறோம். அதன் பிறகும், எதற்கு இந்த தேர்வு? ஒவ்வொரு தேர்வரிடம் இருந்தும், தலா, 500 ரூபாயை, தேர்வுக் கட்டணமாக வசூலித்திருக்கின்றனர். இந்த வகையில், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறது' என, சிலர் கூறினர். சென்னை அல்லாத பிற நகரங்களில் தேர்வெழுதியவர்களும், "கணிதம் கசக்க வைத்தது; நேரம் போதவில்லை' என்ற கருத்தையும், ஒட்டுமொத்த அளவில், தேர்வு எளிதாக இல்லை என்ற கருத்தையும் தெரிவித்தனர். மதுரை, கோவை உள்ளிட்ட சில இடங்களில், வெகு சிலரே, தேர்வு எளிதாக இருந்தது எனக் கூறினர். ஆனால் அவர்களும், கணிதக் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலவில்லை என்ற கருத்தை தெரிவித்தனர். மொத்தத்தில், 5 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு பெறலாம் என்று எதிர்பார்ப்பதாக, தேர்வு எழுதியவர்கள் கருதுகின்றனர். தேர்வைப் புறக்கணித்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம், இன்று தெரியும்.

நியாயமாக நடக்கிறது: அமைச்சர் திருவல்லிக்கேணி, என்.கே.டி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வை, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, துறை முதன்மை செயலர் சபிதா, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, அமைச்சர், நிருபர்களிடம் கூறும் போது, ""முதல்வர் உத்தரவுப்படி, டி.இ.டி., தேர்வு நியாயமாக நடக்கிறது. 6.56 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்,'' என்றார். ""காலையில் நடந்த தேர்வு கடினமாக இருந்தது என்றும், பாடத் திட்டத்தின்படி கேள்விகள் கேட்கவில்லை என்றும் தேர்வர் புகார் கூறியுள்ளனரே?'' என்று கேட்டதற்கு, ""தகுதியான ஆசிரியரை தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்,'' என, அமைச்சர் சிவபதி பதிலளித்தார்.

30 மதிப்பெண்கள் "அவுட்!' கணிதப் பாடத்திற்கு, 30 மதிப்பெண்களுக்கு, 30 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும், படிப்படியாக பல நிலைகளில், ஒரு பக்கம் அளவிற்கு போட்டுப் பார்த்த பிறகே, விடையைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு இருந்ததாக, சென்னையில் தேர்வெழுதிய தேர்வர் தெரிவித்தனர். ஒரு கேள்விக்கு விடை அளிக்க, எவ்வளவு நேரமாகும் என்பதை, டி.ஆர்.பி., கணக்கிடாமல், எப்படி கேட்டனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இத்தேர்வு, ஆசிரியர் மத்தியிலும், ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் மத்தியிலும், பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுக்கு 90 நிமிடம் தந்த முரண்பாடு ஏன்? அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான, 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, மே 27ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்தியது. இத்தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வு, காலை 10 முதல், பகல் 1 மணி வரை, மூன்று மணி நேரம் நடந்தது. மொத்த மதிப்பெண்கள், 150. இந்த ஆசிரியருக்கான அடிப்படைச் சம்பளம் அதிகம்; அத்துடன், இவர்கள் மேல்நிலை வகுப்புகளுக்கு, பாடம் எடுக்கக் கூடியவர்கள். இவர்களுக்கான தேர்வும் கடினமாக இல்லை; நேரமும் குறையவில்லை.

ஏன் இந்த முரண்பாடு? ஆனால், நேற்று காலையில் நடந்த, டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய, சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கானது. பிற்பகலில் நடந்த இரண்டாம் தாள் தேர்வு, பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய, பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. இந்த இரு தேர்வுகளுக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வைப்போல், அதே, 150 மதிப்பெண்கள் தான். ஆனால், நேரம் மட்டும், 50 சதவீதம் குறைத்து வெறும், ஒன்றரை மணி நேரம் மட்டும் வழங்கப்பட்டது. இது எந்த வகையில் நியாயம் என, நேற்று பல தேர்வர்கள் கேள்வி எழுப்பினர். நேற்று இரு தேர்வுகளையும் எழுதிய தேர்வர்களுக்கு, கேள்வித்தாள் கடினம் ஒரு பக்கம் என்றாலும், மிக முக்கியமாக, நேரமின்மை தான் பெரும் பிரச்னையாக இருந்தது.

தேர்வு வாரியம் பதில்: தேர்வு நேரத்தில் உள்ள முரண்பாடு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் கூறியதாவது: இந்த கால நேரத்தை, நாங்கள் நிர்ணயிக்கவில்லை. நடைமுறை ரீதியாக, தேர்வர்களுக்கு உள்ள இந்த பிரச்னையை உணர்கிறோம். அவர்களது கேள்வி நியாயமானது தான். குறைந்தபட்சம், இரண்டு மணி நேரமாவது வழங்கியிருக்க வேண்டும். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் (என்.சி.டி.இ.,) ஆசிரியர் தேர்வுக்கான விதிமுறைகளில், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, மூன்று மணி நேரம் வழங்க வேண்டும் என உள்ளது. அந்த விதிமுறையைப் பின்பற்றி தான், டி.இ.டி., தேர்வர்களுக்கு ஒன்றரை மணி நேரம் வழங்கினோம். இதில், எங்களை குறை கூற முடியாது. ஆனால், இந்தத் தேர்வில் கிடைத்த சில அனுபவங்களைக் கொண்டு, குறைகளை, அடுத்த தேர்வில் களைவதற்கு நடவடிக்கை எடுப்போம். மேலும், இந்த நேர பிரச்னையும் கவனத்தில் கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு  மாண்புமிகு ம...