கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜூலை 17 [July 17]....

  • சர்வதேச நீதி தினம்
  • தென்கொரியா அரசியலமைப்பு தினம்
  • கலிபோர்னியாவில் டிஸ்னிலாந்தின் ஆரம்ப நிகழ்வுகள் டிவி மூலம் காண்பிக்கப்பட்டது(1955)
  • கிழக்கு தீமோர், இந்தோனேஷியாவுடன் இணைக்கப்பட்டது(1976)

>>>ஜூலை 16 [July 16]....



  • சான் டியாகோ நகரம் அமைக்கப்பட்டது(1769)
  • ஐரோப்பாவின் முதலாவது பேங்க்நோட் சுவீடனில் வெளியிடப்பட்டது(1661)
  • எத்தியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்(1930)
  • பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது(1965)
  • டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது(1955)
  • >>>TNTET 2012 - Tentative Answer Keys

    >>>Click here to Download TET Paper-I Answer Keys (SGT)
    >>>Click here to Download TET Paper-II Answer Keys (BT)
    Answers are in Bold Letters. These Keys are Published by Private. Not by TRB.

    >>>படிக்காத மேதை: இன்று காமராஜரின் 109வது பிறந்த நாள்

    இன்று கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த தினம். இவரது காலத்தில் தான், கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்றது.காமராஜர், விருதுநகரில் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி, சிவகாமி அம்மாள். காமராஜருக்கு ஆறு வயது இருக்கும் போது தந்தை காலமானார். இதனால் பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு முடித்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த அவருக்கு, சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டது.
    சுதந்திர போராட்ட வீரர்: 16வது வயதில் காங்கிரசில் சேர்ந்தார். ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். 1930ம் ஆண்டு வேதாரண்யத்தில், ராஜாஜியின் தலைமையில் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். கோல்கட்டா, அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டதால், தமிழக சிறைகளிலும் இருந்தார். சிறை வாழ்க்கையின் போது, சுயமாக புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக் கொண்டார்.

    அரசியல் வாழ்க்கை: சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார். 1936ம் ஆண்டு சத்தியமூர்த்தி, காமராஜரை காங்., கட்சியின் செயலளராக நியமித்தார். 1940ம் ஆண்டு சிறையிலிருக்கும் போதே, விருதுநகர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-52 வரை சென்னை மாகாண காங்., தலைவராக இருந்தார். 1953ம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்றார். அவர் முதல்வராக இருந்த காலத்தில், மதிய உணவுத்திட்டம், நீர்பாசன திட்டங்கள், தொழிற்துறை திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றினார். மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட காமராஜர், 9 ஆண்டுகள் பதவி வகித்தார்.

    “கே-பிளான்”: அகில இந்திய காங்கிரசிற்கு தலைமை வகித்த காமராஜர், பதவியை விட மக்கள் பணியும், கட்சிப் பணியுமே முக்கியம் என கருதி ஒரு திட்டத்தை வெளியிட்டார். இதன்படி கட்சியில் இளைஞர்களுக்கு பதவியை அளித்து விட்டு, மூத்த தலைவர்கள் கட்சி பணி மட்டுமே ஆற்றுவது என தெரிவித்தார். 1963ம் ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணியாற்ற முன் வந்தார். நேருவின் மறைவுக்குப் பிறகு, லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக காமராஜர் முன்மொழிந்தார். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சாஸ்திரியின் திடீர் மரணத்துக்குப் பிறகு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது இவரது முயற்சியால் இந்திரா பிரதமராக்கப்பட்டார்.

    மறைவு: 1975ம் ஆண்டு அக்.2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த தினத்தில், காமராஜரின் உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது. அவரது இறப்பின் போது பையில் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது மறைவுக்குபின் 1976ம் ஆண்டு இந்திய நாட்டின் மிக உயரிய "பாரத ரத்னா' விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது. புனிதமான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காமராஜருக்கு மக்கள், படிக்காத மேதை, ஏழைப்பங்காளன், கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்ற பட்டங்களை சூட்டி அவரை போற்றி வருகின்றனர்.

    அதிகாரத்தில் குறுக்கிடாத தலைவர்: கடந்த, 1965-66ம் ஆண்டு, விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றினேன். அப்போது, தமிழக முதல்வராக, பக்தவத்சலம் இருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக, காமராஜர் இருந்தார். அந்த காலத்தில், ஒரு தாலுகாவில் இருந்து, மற்றொரு தாலுகாவிற்கு அரிசி, பருப்பு எடுத்துச் செல்வது குற்றம். மீறுவோர் மீது, வழக்கு பதிந்து, சிறைக்கு அனுப்புவேன். காமராஜரின் உறவினர்கள், சிபாரிசுக்கு வருவது வழக்கம். நான் யாருடைய சிபாரிசையும் ஏற்க மாட்டேன். தொடர்ந்து இதுபோல் நடந்து கொண்டிருந்ததால் பொறுத்துக்கொள்ள முடியாத, காமராஜரின் உறவினர் சிலர், ஒரு கட்டத்தில், சென்னையில், காமராஜரிடம் நேரடியாக புகார் தெரிவித்தனர். அவரோ, "அவன் சரியாகத்தான் வேலை செய்கிறான்; நீங்கள் தலையிடாதீர்கள்' எனக் கூறி அனுப்பி வைத்தார். ஒருமுறை கூட இதுகுறித்து என்னிடம் அவர் கேட்டதில்லை. உயர்ந்த அந்தஸ்தில் இருந்த போதும், அரசு பணிகளில் குறுக்கிடாத பெருந்தலைவர் அவர்.

    >>>ஜூலை 15 [July 15]....

    • தமிழக முன்னாள் முதல்வர் கே.காமராஜர் பிறந்த தினம்(1903)
    • மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(2003)
    • தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினம்(1876)
    • இரண்டு வருட உருவாக்கத்திற்கு பின் அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது(1954)

    >>>தொடக்கக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது 2011 - 2012 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - மாவட்ட அளவில் தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து கருத்துருக்களை அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

    >>>தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.13682/ஜே2/2012, நாள்.27.06.2012 மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறுவதற்கான மாதிரி விண்ணப்ப படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
    >>>டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறுவதற்கான தெளிவான விண்ணப்ப படிவத்தைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

    >>>கடினமான தேர்வால் தகுதியான ஆசிரியர் கிடைப்பது நிச்சயம்: டி.ஆர்.பி., கருத்து

    டி.இ.டி., தேர்வு எழுதியவர்களில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என எதிர்பார்ப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
    டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. 6.56 லட்சம் பேர், இத்தேர்வை எழுதினர். இரு தாள் தேர்வுகளுமே கடினமாக இருந்ததாகவும், நேரமின்மை பெரிய பிரச்னையாக இருந்தது எனவும், தேர்வர் புகாராகத்தெரிவித்தனர்.டி.இ.டி., தேர்வு கேள்வித்தாள், தமிழகம் மட்டுமல்லாமல், ஏற்கனவே தேர்வு நடந்த கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், கடினமாகவே அமைந்துள்ளது.சி.பி.எஸ்.இ., தேசிய அளவில் நடத்திய தகுதித் தேர்வில், தேர்ச்சி சராசரி வெறும் 6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டி.ஆர்.பி., நடத்திய தேர்வு, பெரும் சலசலப்பை
    ஏற்படுத்தியது.

    "திறமையானவர் கிடைப்பார்':இதுகுறித்து, டி.ஆர்.பி.,வட்டாரம் கூறியதாவது: கேள்வித்தாள் அமைக்கும் பணியில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த பாட வல்லுனர்களும் இடம் பெற்றனர். என்.சி.டி.இ., கூறியுள்ள விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் தான், கேள்வித்தாள் தயாரிக்கப் பட்டன.டி.இ.டி., தேர்வில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றாலே, அது பெரிய விஷயம். இந்த 10 சதவீதம் பேரும், நல்ல திறமை உள்ளவர்களாக இருப்பர் என்பதுமட்டும் உறுதி.

    "கீ-ஆன்சர்' எப்போது?மாவட்டங்களில் இருந்து, விடைத்தாள்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை, "ஸ்கேன்' செய்து, அதன்பின் மதிப்பீட்டு பணிகளை செய்ய வேண்டும். இரு வாரங்களில், இணையதளத்தில், "கீ-ஆன்சர்' வெளியிடப் படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பத்து சதவீத தேர்ச்சி எனில், 65,600 பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர். டி.ஆர்.பி., இப்படி தெரிவித்தாலும், 5 சதவீதம் வரை தான் தேர்ச்சி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

    வராதவர்கள் எண்ணிக்கை :முதல் தாள் தேர்வு எழுதியவர்களில், 7 சதவீதம் பேரும், இரண்டாம் தாள் எழுதியவர்களில், 8 சதவீதம் பேரும்,"ஆப்சென்ட்' ஆனதாக,
    அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அதன்படி, முதல் தாள் தேர்வில், 17,287 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 28,054 பேரும், "ஆப்சென்ட்' ஆகி உள்ளனர்.

    இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...