கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பி.எட்.,- எம்.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு

பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் மாணவ, மாணவிகள் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மறுகூட்டல், மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள், 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயகுமார் வெளியிட்ட அறிவிப்பு:
பல்கலையின் இணைப்புப் பெற்ற, 649 கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், 11ம் தேதி (இன்று), பல்கலை இணையதளத்தில் (http://www.tnteu.in) வெளியிடப்படும்.
மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிகத் தேர்ச்சிச் சான்றிதழ், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில், இம்மாத இறுதி வாரத்தில் வழங்கப்படும்.மறுகூட்டல், மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள், அதற்குரிய தனித்தனி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணங்களை செலுத்தி, 24ம் தேதிக்குள், "தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, சென்னை௫&' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

>>>ஒளி மிகுந்த கண்ணினாய் வா... வா...: இன்று சர்வதேச இளைஞர்கள் தினம்

ஒரு நாட்டின் எதிர்காலமே, இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தான், நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இத்தகைய வலிமைபடைத்த இளைஞர்களை, ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக, ஆக., 12ம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐ.நா., சபையால் 1999ல் இத்தினம் தொடங்கப்பட்டது.

யார் இளைஞர்:15 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்களை, இளைஞர்கள் என ஐ.நா., வரையறுத்துள்ளது. உலக மக்கள் தொகையில், ஆறில் ஒரு பங்கு பேர் இளைஞர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கு போன்றவற்றை, ஒவ்வொரு அரசும் இளைஞர்களுக்கு சரியாக ஏற்படுத்தித்ற தரவேண்டும்.

சாதிக்கும் எண்ணம்:இன்று ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் வளர்ச்சிக்கு, இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. ராணுவம், விளையாட்டு, தொழில்நுட்பம், வியாபாரம் என அனைத்து துறைகளிலும் இவர்கள் சாதித்து வருகின்றனர்.

ஏன் இந்த பழக்கம்: இளைஞர்களில், சிலர் ஆல்கஹால், புகையிலை மற்றும் போதைப் பொருள் உபயோகிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். சமீப காலமாக, பள்ளி மாணவர்களும் இப்பழக்கத்தில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இளைஞர்களே சிந்தித்து பாருங்கள், போதைப்பழக்கத்தால் நீங்கள் மட்டுமல்ல உங்கள் பாசமிகு குடும்பம், இந்த சமூகம் பாதிக்கப்படுகிறது. எனவே, இளைஞர்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து, வீடு மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ இந்நாளில் உறுதி ஏற்க வேண்டும்.

>>>ஆகஸ்ட் 12 [August 12]....

  • சர்வதேச இளைஞர்கள் தினம்
  • சிக்காகோ நகரம் அமைக்கப்பட்டது(1833)
  • நியூசிலாந்து சுயாட்சி பெற்றது(1853)
  • எக்கோ 1 என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது(1960)
  • ஐசக் சிங்கர் தனது தையல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1851)

>>>SSA - கல்வி உரிமை இயக்கம் - பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல் தொடர்பான SSA SPD அவர்களின் செயல்முறைகள்

>>>IGNOU "Foundation Course on Education of Children with Disabilities" Training கருத்தாளர்களுக்கு மதிப்பு ஊதியம் வழங்குவது தொடர்பான SSA SPD அவர்களின் செயல்முறைகள்

>>>ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளின் ஆசிரியர் வைப்புநிதிக் கணக்குகள் தணிக்கை செய்வது தொடர்பான அரசு தகவல் தொகுப்பு விவர மைய ஆணையரின் கடிதம்

>>>ஒன்றியத்திற்கு 5 பள்ளிகள் வீதம் 2065 பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்ய SSA SPD உத்தரவு

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...