கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஒளி மிகுந்த கண்ணினாய் வா... வா...: இன்று சர்வதேச இளைஞர்கள் தினம்

ஒரு நாட்டின் எதிர்காலமே, இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தான், நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இத்தகைய வலிமைபடைத்த இளைஞர்களை, ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக, ஆக., 12ம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐ.நா., சபையால் 1999ல் இத்தினம் தொடங்கப்பட்டது.

யார் இளைஞர்:15 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்களை, இளைஞர்கள் என ஐ.நா., வரையறுத்துள்ளது. உலக மக்கள் தொகையில், ஆறில் ஒரு பங்கு பேர் இளைஞர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கு போன்றவற்றை, ஒவ்வொரு அரசும் இளைஞர்களுக்கு சரியாக ஏற்படுத்தித்ற தரவேண்டும்.

சாதிக்கும் எண்ணம்:இன்று ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் வளர்ச்சிக்கு, இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. ராணுவம், விளையாட்டு, தொழில்நுட்பம், வியாபாரம் என அனைத்து துறைகளிலும் இவர்கள் சாதித்து வருகின்றனர்.

ஏன் இந்த பழக்கம்: இளைஞர்களில், சிலர் ஆல்கஹால், புகையிலை மற்றும் போதைப் பொருள் உபயோகிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். சமீப காலமாக, பள்ளி மாணவர்களும் இப்பழக்கத்தில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இளைஞர்களே சிந்தித்து பாருங்கள், போதைப்பழக்கத்தால் நீங்கள் மட்டுமல்ல உங்கள் பாசமிகு குடும்பம், இந்த சமூகம் பாதிக்கப்படுகிறது. எனவே, இளைஞர்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து, வீடு மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ இந்நாளில் உறுதி ஏற்க வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: புல்...