கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்
பிரிவு வாரியாக ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில், செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு, நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. பள்ளிக் கல்வித்துறையில் கல்வி மாவட்டத்திற்கு இருவர் வீதமும், துவக்கக் கல்வித்துறையில் 3 பேர் வீதமும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விருதுகள் பெறும் ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்படுகிறது. அதேபோல தேசிய அளவில், மாவட்டத்திற்கு ஒருவர் நல்லாசிரியர் விருது பெறுகிறார். அவருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளை, ஆசிரியர்களின் பிரிவு வாரியாக வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. தமிழக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியிருப்பதாவது:
தற்போது பள்ளிக் கல்வித்துறை, துவக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருதை, தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள் என பிரிவு வாரியாக விருது வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மதிப்பை உயர்த்தும் வகையில், தற்போது மாநில அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு ரூ.5 ஆயிரம் என்பதை, ரூ.ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். மேலும் ஊக்க ஊதியம், பஸ்களில் இலவச பாஸ் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான பல இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஒவ்வொன்றுக்கும், 22 படிவங்களை அனுப்பி, பள்ளிக் கல்வித் துறை விவரம் கேட்டுள்ளது.
டிஜிட்டல் வடிவம் மற்றும் பேப்பர் வடிவம் என, இரு முறைகளிலும், விண்ணப்பங்களை நிரப்ப வேண்டியுள்ளதால், தலைமை ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, ஆசிரியரல்லாத பணியாளர் இல்லாத நிலையில், இந்தப் புதிய சுமைகளால், தலைமை ஆசிரியர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இவற்றில் உள்ள மாணவ, மாணவியருக்கென, நடப்பாண்டில், பல்வேறு இலவசத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டத்துக்கும், தனித்தனியாக விவரங்களை அளிப்பது, ஏற்கனவே தலைமை ஆசிரியர்களுக்கு பணிச்சுமையை அதிகமாக்கியிருந்தது.
தற்போது, கடந்த வாரத்தில் மட்டும், 22 வகையான படிவங்களை, "இ-மெயில்" மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பிவிட்டு, அப் படிவங்களை, "இ-மெயில்" மற்றும், "பிரின்ட்" எடுக்கப்பட்ட பேப்பர் படிவங்களாகவும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே வாங்கிய தகவல்களையே, மீண்டும் வேறு மாதிரியாகத் தொடர்ந்து வாங்கிக் கொண்டேயிருக்கும் நிலை, தலைமை ஆசிரியர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வுத் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வுத் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்வு, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், வரும் நவம்பர் 18ம் தேதி நடக்கிறது.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை, சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, கடலூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க, வரும் 7ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் அவுட் ஆவதை தடுக்க டி.என்.பி.எஸ்.சி. புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று நடந்த நூலகர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வினாத்தாள்களை முன்கூட்டியே அச்சிட்டுக் கொடுக்காமல், ஆன்லைன் மூலமாக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு நேரடியாக அனுப்பப்பட்டது.
கம்ப்யூட்டர் கிளவுட் டெக்னாலஜி என்ற அதிநவீன தொழில்நுட்பம் மூலம், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அனுப்பப்பட்ட வினாத்தாள், பின்னர் தேர்வு மையத்தில் பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வர்களுக்கு விநியோகப்பட்டது.
நூலகர் தேர்வை தொடர்ந்து, இனி படிப்படியாக அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமாக வினாத்தாள்கள் குறிப்பிட்ட அச்சகங்களில் ரகசியமாக அச்சடிக்கப்பட்டு, அங்கிருந்து மாவட்ட மற்றும் தாலுகா கருவூலங்கள் வழியாக தேர்வு மையங்களைச் சென்றடையும்.அவ்வாறு செல்லும்போது இடையில் வினாத்தாள் கட்டுகளை பிரித்துப் பார்க்கவும் அதன் மூலம் வினாத்தாள் அவுட் ஆகவும் அதிக அபாயம் உள்ளது.
தற்போதைய புதிய முறையில் ஆன்லைனில் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து நேரடியாக தேர்வு மையங்களுக்கு சென்றுவிடுவதால் கேள்வித்தாள் அவுட் ஆகும் பேச்சுக்கே இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல பல்கலைக்கழகங்களில் இதுபோன்றுதான் ஆன்லைன் மூலமாக வினாத்தாள் அனுப்பப்பட்டு, பின்னர் பிரிண்ட் எடுத்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி குரூப் 2 தேர்வை நடத்தியது. தமிழகம் முழுவதும் 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள்.
இந்த நிலையில், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் வினாத்தாள் அவுட் ஆனது. இதையடுத்து, குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் அவுட் ஆனது தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.