கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் "ஆப்சென்ட்'

மதுரையில் தென் மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் 11 பேர் "ஆப்சென்ட்' ஆயினர். மதுரை உட்பட 9 மாவட்டங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மதுரையில் நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் சேதுராம வர்மா தலைமை வகித்தார். மதுரை சி.இ.ஓ., நாகராஜ முருகன் உட்பட அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் பங்கேற்றனர். 9 மாவட்டங்களில் இருந்தும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்றனர். சேதுராம வர்மா கூறுகையில், ""மதுரையில் 2 நாட்கள் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் 544 பேர் பங்கேற்றனர். 11 பேர் "ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். "ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும்,'' என்றார்.

>>>காப்பீட்டு திட்ட சிகிச்சையை கண்காணிக்க சிறப்பு குழு: தமிழக அரசு ஏற்பாடு

அரசு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களுக்காக, செயல்படுத்தப்படும், புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில், மருத்துவமனைகளை பட்டியலிடுதல் மற்றும் சிகிச்சையின் தன்மையை கண்காணித்தல் ஆகியவற்றிற்கு, அங்கீகாரக் குழு ஒன்றை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் நலனிற்காக, புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களின் குடும்பத்தினர், ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம், நான்கு லட்சம் ரூபாய் வரை சலுகை பெறலாம். யுனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வரும், 2016, ஜூன் வரை அமலில் இருக்கும். இத்திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு குறைந்த பட்ச தகுதி மற்றும் சிகிச்சையின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. உரிய மருத்துவமனைகளை பட்டியலிடவும், சிகிச்சைகளை கண்காணிக்கவும், அங்கீகாரக் குழு அமைக்க வேண்டியதன் அவசியம், சுகாதாரத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்குழு, மருத்துவமனைகளை ஆய்வு செய்து, அங்கீகாரம் அளிப்பதுடன், அங்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் கண்காணிக்கும். இக்குழுவிற்கு, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் கமிஷனர் தலைவராகவும், மருத்துவம் மற்றும் கிராமப்புற மருத்துவ சேவைகள் துறை இயக்குனர் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியும், உறுப்பினர்களாக இருப்பர். இவர்கள், இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்து, அவற்றை பட்டியலில் சேர்ப்பர்; தொடர்ந்து அவர்கள், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பர். இக்குழு, மூன்று மாதங்களுக்கு இப்பணியில் ஈடுபடும் என்று, நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நலநிதி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு அறுவை சிகிச்சை, சிகிச்சைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அடங்கிய திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

>>>ஆசிரியர் விருதில் ஏற்படும் சர்ச்சைகளை தவிர்க்க புது திட்டம் : அடுத்த ஆண்டு முதல் அமலாகும்

""ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியரின் சாதனைகளை, வரும் ஆண்டுகளில் வெளிப்படையாக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும், பாடத்தில் சிறப்பாக செயல்படுவதுடன், பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடும் சிறந்த ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசு சார்பில், 370 பேருக்கு, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.

குற்றச்சாட்டு : ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரும், விருதுக்கு பரிந்துரை செய்கின்றனர். இதனால், விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்யும் முறை குறித்து, சர்ச்சை எழுந்து உள்ளது. திறமையான ஆசிரியரை தேர்வு செய்வதில் உள்ள விதிமுறைகளை, தேர்வு செய்யப்படும் அனைத்து ஆசிரியருக்கும் பார்ப்பது கிடையாது என்றும், வேண்டப்பட்ட ஆசிரியராக இருந்தால், எவ்வித விதிமுறைகளையும் பார்க்காமல், கடைசி நேரத்தில் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும், ஆசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

வெளிப்படை தன்மை : நடப்பாண்டில், 80 சதவீத ஆசிரியர், முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 20 சதவீத ஆசிரியர், விதிமுறைப்படி தேர்வு செய்யப்படவில்லை. தகுதியற்றவர்களுக்கு, சிபாரிசுகளின் அடிப்படையில், விருதுகளை கொடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் பெயரில் அமைந்த விருதை, தகுதியான ஆசிரியருக்கு மட்டுமே வழங்க வேண்டும். விருதுக்குரிய ஆசிரியர் செய்த சாதனைகளை, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை, வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

வரும் ஆண்டுகளில்... : ஆசிரியர் விருது பெற்றவர் குறித்த புத்தகத்தில், ஆசிரியர் செய்த சாதனைகள் குறித்து, ஒரு தகவலும் இல்லை; வெறும், பெயர், பள்ளி ஆகிய விவரங்கள் மட்டுமே உள்ளன. இதனால், விருது பெற்ற ஆசிரியரின் சாதனைகளை, அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. ஆசிரியரின் செயல்பாடுகளை, புத்தகத்திலும், இணையதளத்திலும் வெளியிடலாம். விருதுக்கு, விண்ணப்பங்களை வரவேற்பது குறித்த அறிவிப்பையும், ஆசிரியருக்கான தகுதிகள், விதிமுறைகள் குறித்த தகவலையும், முன்கூட்டியே நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என்பதும், ஆசிரியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சங்க நிர்வாகிகள், ஆசிரியர்களின் கருத்துகள் குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, ""தகுதியான ஆசிரியர்களுக்குத் தான், விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெறும் ஆசிரியரின் சாதனைகளை, புத்தகத்தில் வெளியிடுவதில், எந்த பிரச்னையும் இல்லை. வரும் ஆண்டுகளில், ஆசிரியர் சாதனைகள், புத்தகங்களில் வெளிப்படையாக வெளியிடப்படும்,'' என்றார்.

>>>சான்றிதழில் குளறுபடி தேர்ச்சி பெற்றும் சிக்கல்

ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களில், 100 பேருக்கு சிக்கல் எழுந்துள்ளது. தேர்ச்சி பெற்றாலும், உரிய கல்விச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரியாக இல்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) முதல் தாளில், 1,735 பேர், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேர் என, 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, 7, 8ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதன்பின் நடத்திய ஆய்வில், இரு தேர்வுகளிலும் சேர்த்து, 50 பேருக்கு, உரிய தகுதிகள் இல்லை என்பது, கண்டறியப் பட்டுள்ளது.
சான்றிதழ்கள் இல்லாதது, தேர்வுக்குரிய தகுதியில் பட்டம் பெறாமல், வேறு பாடங்களில் பட்டம் பெற்றிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த 50 பேரும், தேர்ச்சிப் பட்டியலில் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
மேலும், 50 முதல், 75 பேரின் கல்விச் சான்றிதழ்கள் குறித்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஆய்வு செய்து, இறுதி முடிவை எடுக்கும் என, துறை வட்டாரம் தெரிவித்தது. பல தேர்வர்கள், வெளி மாநிலங்களில் உள்ள பல்கலையில் படித்துள்ளனர். அந்த பட்டங்கள், தமிழகத்தின் கல்வித் தகுதிக்கு நிகரானது தானா என்பதை, உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குப் பின், இறுதி தேர்வுப் பட்டியல், 20ம் தேதிக்குப் பின் வெளியாகும் என, கூறப்படுகிறது.

>>>பி.எட்., படிப்புக்கு தாவுகின்றனர் மாணவர்கள் ஆசிரியர் பட்டயப்படிப்பில் ஆர்வம் இல்லை

கடினமான பாடத் திட்டம், குறைந்து வரும் வேலை வாய்ப்பு போன்ற காரணங்களால், ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்கள் குறைந்து வருகின்றனர். அதற்குப் பதிலாக, பி.எட்., படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். டிப்ளமாவில் சேர ஆள் இல்லாததால், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில், துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் பாட வாரியாக, பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். கடின பாட திட்டம் இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு, பிளஸ் 2 முடித்து, இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு முடிப்பவர்கள், மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப் படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, பி.எட்., முடித்தவர்கள், டி.ஆர்.பி., நேரடித்தேர்வு மூலம் நியமனம் செய்யப் படுகின்றனர்.இரண்டாண்டுக்கு முன், ஆசிரியர் கல்வி டிப்ளமாவுக்கான பாடத் திட்டங்களை, மாநில ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மாற்றி அமைத்தது. பாடத்திட்டம் மிக கடினமாக அமைக்கப்பட்டதால், தேர்வு எழுதுபவர்களில், 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், தேர்ச்சி பெற முடியாமல் போனது. துணைத் தேர்வும் நடத்தப்படாததால், அடுத்த ஆண்டு வரை, தேர்வுக்கு காத்திருக்க வேண்டி உள்ளது. அதேசமயம், அரசு துவக்கப் பள்ளிகளில், ஆண்டுக்காண்டு சரிந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் குறைத்துக் கொண்டே வருகிறது.
மாநில அளவில், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடந்தாலும், தற்போது வரை படித்து காத்திருக்கும் ஆசிரியர்களுக்கே, அரசுப்பணி கிடைக்க, 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிடும். இதனால், ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்தால், அரசுப் பணி கிடைப்பது அரிது என்ற, நிலை உருவாகிவிட்டது. இதனால், ஆண்டுக்காண்டு, ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. பி.எட்.,டுக்கு மவுசு அதுமட்டுமின்றி, பி.எட்., படித்தவர்களுக்கு, தனியார் பள்ளிகளிலும் அதிக வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதனால், ஆசிரியராக விரும்பும் அனைவரும், பி.எட்., படிப்பில் சேரவே விரும்புகின்றனர்.
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை பாதியாக குறைத்துக் கொண்டாலும், பயிற்சிப் பள்ளிகளில் சேர ஆள் வருவதில்லை. இதனால், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், மூடு விழா நடத்த முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், "கஷ்டப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு படித்தாலும், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. தனியார் பள்ளிகளிலும், பி.எட்., படித்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால், அனைவரும், பி.எட்., படிப்பில் சேருகின்றனர்' என, தெரிவித்தனர்.

>>>செப்டம்பர் 11 [September 11]....

  • அர்ஜெண்டினா ஆசிரியர் தினம்
  • லத்தீன் அமெரிக்கா ஆசிரியர் தினம்
  • தமிழக கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் இறந்த தினம்(1921)
  • நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட தினம்(2001)

>>>"மாதம் 20 பள்ளிகளை ஆய்வு செய்தால் கல்வித்தரம் உயரும்"

மாதந்தோறும் 20 பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டால் கல்வித்தரம் உயரும் என்று கல்வி அலுவலர்களுக்கு முதன்மை செயலர் சபீதா அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில், 8 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் டி.சபிதா பேசும்போது, பள்ளி கல்வித்துறை தொடர்பாக நாங்கள் எடுத்து செல்லும் திட்டங்கள், கோரிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் உடனடியாக கேட்டறிந்து அதற்கான தீர்வினை உடனடியாக வழங்குகிறார்.
இதன் விளைவாகத்தான் இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். சுமார் ரூ.4 ஆயிரம் கோடி மாணவ-மாணவிகளுக்கு இலவச திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இது முழுமையாக மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்பட்ட சலுகைகள் ஆகும்.
நீங்கள் ஒருமாதத்தில் குறைந்த பட்சம் 5 பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளது. ஆனால் மாதந்தோறும் 20 பள்ளிகள் வரை ஆய்வு நடத்தலாம். அதன் மூலம் கல்வி தரம் உயரும். அரசு பள்ளிகள் தவிர அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் ஆய்வு நடத்த வேண்டும்.
நீங்கள் அதிகமான பள்ளிகளை ஆய்வு செய்யும் போது மிக சிறப்பாக செயல்படும் பள்ளிகளை மாதிரி பள்ளிகளாக தேர்வு செய்து, மற்ற பள்ளிகள் அந்த பள்ளியை பார்வையிட செய்ய வேண்டும். மாணவர்களின் சேர்க்கை கணக்கெடுப்புகளை தயார் செய்து விரைவாக வழங்கிட வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...