கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>முதுகலை ஆசிரியர் நியமனம்: 396 பேருக்கு உத்தரவு

மாநிலம் முழுவதும் நேற்று நடந்த முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில், 396 பேர், உத்தரவுகளை பெற்றனர்.
மாநில பதிவு மூப்பு அடிப்படையில், 1,080 முதுகலை ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, "ஆன்-லைன்" வழியாக, மாவட்ட தலைநகரங்களில் உள்ள சி.இ.ஓ., அலுவலகங்களில் நேற்று நடந்தன.
சென்னை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், காலிப் பணியிடங்கள் இல்லை. இதர, 29 மாவட்ட தலைநகரங்களில், கலந்தாய்வு நடந்தது.
முதல் நாளான நேற்று, அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 396 பேர், பணி நியமன உத்தரவுகளை பெற்றதாக, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
ஒரு மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டத்தில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, திருச்சியில் இன்று நடக்கிறது. நியமன உத்தரவு பெறும், 1,080 பேரும், இம்மாதமே பணியில் சேர வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

>>>வங்கியியல், நிதித்துறை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் இயங்கி வரும் பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட்டில், வங்கியியல் மற்றும் நிதி பாடப் பிரிவில் ஓராண்டு முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
சென்னையில் இயங்கி வரும் பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட்டில், வங்கியியல் மற்றும் நிதி பாடப் பிரிவில் ஓராண்டு முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பொறியியல், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பு பயின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் விவரங்களை www.pgpbf.bsebti.com என்ற இணையதளத்தில் இருந்து பெற்று கொள்ளலாம். 044 42089958 என்ற தொலைபேசி எண் அல்லது admissions@bseindia.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

>>>இலவச தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் இலவச வகுப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இம்மாதம் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறுகிறது.
சென்னை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு பயிற்சி இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பங்களை, சென்னையில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையல், வரும் 17ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தங்களது கல்வி மற்றும் சாதிச் சான்றிதழ்களின்  நகலை இணைத்து இம்மாதம் நாளைக்குள் (17ம் தேதி) சமர்ப்பிக்க வேண்டும்.

>>>பாலியேடிவ் கேர் - ஓர் உன்னதப் பணி

புற்றுநோய் போன்றவைகளால் பாதிக்கப்படுபவர்கள், தங்களின் நோய் முற்றிய இறுதிகட்டத்தில், வலியால் மிகவும் வேதனைப்படுவார்கள். அத்தகைய வலியை குறைக்க உதவும் மருத்துவத்துறை ஒன்று இருக்கிறது. ஆங்கிலத்தில் Palliative care எனப்படும் அந்தத் துறையில் பல வேலைவாய்ப்புகள் உள்ளன.
ஒரு நோயாளியுனுடைய வாழ்க்கையின் மிகவும் சோகமான மற்றும் வேதனை மிகுந்த கட்டத்தில், அவரின் துயரை ஓரளவு துடைக்க உதவும் ஒரு உன்னதமான பணி இதுவாகும். இச்சேவையின் மூலம், நோயாளிக்கு, மனதளவிலும் தைரியம் கொடுக்க முடியும். இப்படிப்பு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கானது.
இந்த வலி நிவாரணி தொடர்பான மருத்துவத் துறையில் பணியாற்றுவது சற்றே சவாலான விஷயம்தான். இத்துறையானது, இந்தியாவில் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், இதன் முக்கியத்துவம் நாளுக்குநாள் கூடி வருகிறது.
The Indian Association of Palliative care(IAPC) என்ற அமைப்பானது, கடந்த 1995ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலக சுகாதார நிறுவனம்(WHO) மற்றும் இந்திய அரசின் ஆலோசனையில் நிறுவப்பட்ட இந்த அமைப்பானது, இத்துறையில் கல்வி செயல்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.
படிப்புகள்
IAPC மற்றும் பல கல்வி நிறுவனங்கள், Palliative care தொடர்பான பல அடிப்படை படிப்புகளை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்குகின்றன. இந்தப் படிப்பு 2 வகைப்படும்,
முதல் பாகமானது, 8 வாரங்கள் தொலைநிலைக் கல்வியைக் கொண்டது மற்றும் Palliative care தொடர்பான அறிமுக அம்சங்களும் உண்டு.
இரண்டாம் பாகமானது, விருப்பப்பட்ட கிளீனிக்கில், Palliative care பிரிவில், 10 நாட்கள் பணிபுரிவதாகும்.
Palliative care படிப்பில், Communication skills, Psychological issues, Ethical and spiritual issues, Pain management, Symptom management, Bereaement counselling, Palliative care emergencies, End of life care and Practical issues related to death போன்றவையும் அடங்கும்.
இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
Institute of Palliative medicine(AIIMS)
Institute of Palliative medicine(Calicut)
TMCH(Mumbai)
Bangalore Baptist hospital
IPC(Thrissur)
போன்றவை முக்கிய கல்வி நிறுவனங்கள்.
வெளிநாட்டுப் படிப்புகள்
Cardiff மற்றும் Oxford Brookes university போன்ற வெளிநாட்டுப் பல்கலைகள், Palliative care தொடர்பான எம்.எஸ்சி, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன.

>>>பி.எல். படிப்பு: 20ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் டி.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகளில் மூண்றாண்டு பி.எல். படிப்பில் மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன.
இதில் சேருவதற்கு 6,110 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான கட் ஆப் மார்க் வெளியிடப்பட்டு இருக்கிறது. சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும், பல்கலைக்கழக தகவல் பலகையிலும் கட் ஆப் மார்க் பட்டியலை பார்க்கலாம். அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவு - 71.033
பிற்படுத்தப்பட்டோர் - 64.090
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) - 63.217
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் - 63.478
ஆதி திராவிடர் - 56.807
ஆதி திராவிடர் (அருந்ததியர்) - 62.474
பழங்குடியினர் - 56.807
சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான பொது கலந்தாய்வு, சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.
தகுதியுள்ள மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவு தபால் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் தங்கள் கட் ஆப் மார்க்கிற்கு ஏற்ப குறிப்பிட்ட நாளில் கவுன்சிலிங்கிற்கு நேரடியாக மாணவர்கள் வந்துவிடலாம். இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்கள் ரேங்க் பட்டியலை மாணவர்கள் எடுத்து வர வேண்டும்.
கலந்தாய்வின் போது காலி இடங்கள் ஏற்பட்டால் அவை காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களால் நிரப்பப்படும். இதற்கான கவுன்சிலிங் 22, 24, 25ம் தேதிகளில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

>>>செப்டம்பர் 16 [September 16]....

  • மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்டது(1852)
  • மெக்சிகோ விடுதலை தினம்(1810)
  • மலேசியா நாடு உருவாக்கப்பட்ட தினம்(1963)
  • உலக ஓ‌சோன் பாதுகாப்பு தினம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...