கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வீடு தேடி வரும் நண்பன்: இன்று உலக தபால் தினம்

உலக தபால் அமைப்பு 1874ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று இந்த அமைப்பில் இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைய தலைமுறையினருக்கு தபால் துறையின் மகத்துவம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் இன்றும் லட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கையில் தபால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், தபால் துறையின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்., 9ம் தேதி உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தபால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. 

நாம் இன்று இ-மெயில், இன்டர்நெட், பேக்ஸ், மொபைல் என்று நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். இதனால் தற்போது தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்கிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன் உலகில் அல்லது உள்நாட்டில் எதாவது ஒரு இடத்தில் இருப்பவர், தங்களது குடும்பத்தினை தொடர்பு கொள்ள தபால் துறையை சார்ந்திருந்தனர்.

பழங்காலத்தில் புறாவின் கால்களில் கடிதத்தை கட்டி தகவல்கள் அனுப்பப்பட்டன. மன்னர்கள் ஆட்சியின் போது ஒற்றர்கள் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டன. தபால் துறை உருவாக்கப்பட்ட பின், தகவல்கள் தபால் துறை மூலமாக உலக முழுவதும் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
குறைந்து விட்டது:
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிராமம், நகரம் வித்தியாசமின்றி இந்தியாவை, மக்களின் கலாசாரத்தை ஒருங்கிணைக்கும் பணியை தபால்துறை செய்து வருகிறது. பொது மக்களிடம் கடிதம் எழுதும் பழக்கம் இ-மெயில் வரவால் குறைந்திருந்தாலும், தபால் வழியாக அனுப்பப்படும் அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சேர்க்கும் பொறுப்பு இன்றும் தபால் துறை வசமே உள்ளது.

உலகில் முதலிடம்:
இந்திய தபால் துறை 1764ல் துவக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கு 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. 12 ஆயிரம் தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.

ஈடு தர முடியுமா!
ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால்,விரைவு தபால், இ- போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் மற்றும் சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது. தற்போது மொபைல் போன்களின் வரவால் தபால் துறைக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, தபால்துறையின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.

>>>அக்டோபர் 09 [October 09]....

  • உலக அஞ்சல் தினம்
  • உகாண்டா விடுதலை தினம்(1962)
  • தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்(1897)
  • டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1804)
  • இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001)

>>>Education Management Information System(EMIS) - School Edn Director Proceedings, Format & Instructions

>>>TNPSC - Group-IV Results (DATE OF EXAMINATION : 07.07.2012)

>>>மொழிபெயர்ப்பின் மூலம் வேற்றுமையை போக்குவோம்

"மொழி பெயர்ப்பின் மூலம் நாம் வேற்றுமையை போக்கவேண்டும்,'' என, தமிழ்நாடு தேர்வாணைய குழு தலைவர் நடராஜ் பேசினார். நல்லி சின்னசாமி செட்டி நிறுவனம், திசை எட்டு மொழியாக்க காலாண்டிதழ் ஆகியவை இணைந்து இந்த ஆண்டில், சிறந்த மொழியாக்கப் படைப்பாளிகள், 14 பேருக்கு விருது வழங்கியுள்ளன. அதற்கான விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழிலிருந்து வங்காளிக்கும், வங்காளியிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்த, சு.கிருஷ்ணமூர்த்தி, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்த்துள்ள ராஜரத்தனம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. குறுந்தொகையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த தட்சணாமூர்த்தி, சிவகுமார், ராமன்ராஜா, சின்னத்தம்பி முருகேசன், மகாதேவன், கிருட்டிணமூர்த்தி, பானுமதி, மாரியப்பன், பாலசுப்பிரமணியன், குளச்சல்.யூசுப், ஜெயஸ்ரீ, ஸ்டான்லி ஆகியோருக்கு விருதுகளை தொழிலதிபர் நல்லி குப்புசாமி வழங்கினார். மேனகா காந்தி எழுதிய ஆங்கில நூலினை தமிழில், "மரங்களின் கதைகள்' என்ற தலைப்பில் சுப்ரபாலன் மொழிபெயர்த்துள்ளார். நிகழ்ச்சியின் போது இந்த நூலை நல்லி குப்புசாமி வெளியிட தமிழ்நாடு தேர்வாணைய குழுத் தலைவர் நடராஜ் பெற்றுக்கொண்டார். அவர் பேசுகையில், ""மொழியில் எப்போது வேற்றுமை வந்தது என்றால், மொழி தோன்றி பேசியபோதுதான் வேற்றுமை வந்தது. இதை போக்க வேண்டுமென்றால் வேற்று மொழி நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். திசை எட்டும் விழாவில், திசை எட்டும் எட்டி விட்டது. அதேபோல மற்ற நூல்கள் அங்கிருந்து கொண்டு வந்ததைப்போல, இங்கு உள்ள நூல்களை மற்ற மொழிகளுக்கு கொண்டு செல்லவேண்டும்,'' என்றார்.

>>>6,500 மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் :நிதிஉதவி தந்து அரசு உதவி

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகளுக்கு, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், 6,500 மாணவ, மாணவியர் பயனடைவர். தமிழக அரசின் செய்திக்குறிப்பு: அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று, முதல் மூன்று இடங்களை பெறும், சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுதொகை, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. "பிளஸ் 2' வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்று, முதல் மூன்று இடங்களை பெறும், சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை, 6,000, 4,000 மற்றும் 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.. முஸ்லிம் சமுதாய மக்களின் வாழ்வை மேம்படுத்த வழங்கப்படும், 10 லட்சம் ரூபாய் மானிய தொகை, 20 லட்சம் ரூபாயாக உயர்கிறது. இதற்கு, மூன்று கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, 4,200 இரண்டடுக்கு இரும்பு கட்டில்கள் வழங்கப்படும். குளிர்பிரதேச பகுதியில் உள்ள, இரு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதியில் படிக்கும், 100 மாணவர்களுக்கு, மரத்திலான இரண்டடுக்கு, 50 கட்டில்கள் வழங்கப்படும். இவைகளுக்கு, நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்லூரி விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றலை மேம்படுத்த, பயிற்சிகளை நடத்த, இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 160 விடுதிகளில் உள்ள, 6,550 மாணவர்கள் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி பெற்று பயனடைவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

>>>அரசு பள்ளிகளில் அடுத்தாண்டு ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ். வருகைபதிவேடு முறை அமல்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல் ஆசிரியர்களின் வருகையை, எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் வருகை குறித்து, பதிவு செய்ய, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி முறையை அறிமுகம் செய்துள்ளனர். இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர், காலை 9:30 மணிக்கு, பள்ளிக்கு வந்த ஆசிரியர்களின் வருகை குறித்து, அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அல்லது மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிப்பர். இது கம்ப்யூட்டர் மூலம் ,தானாகவே கல்வி துறை அலுவலகத்தில் பதிவாகிவிடும். ஒரு பள்ளியின் ஆசிரியர்கள் வருகை குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள "பாஸ்வேர்ட்' மூலம் கம்ப்யூட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதே போல், கல்வி துறை இயக்குனர் வரை கொடுக்கப்பட்டுள்ள "பாஸ்வேர்ட்' மூலம், தமிழகத்தில் எந்த ஊரிலும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் வருகை குறித்து, சென்னையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். "இம்முறை தற்போது தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டிலிருந்து, அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வர உள்ளது' என கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...