"தனியார் கல்லூரி நிர்வாகத்தை அரசே ஏற்கும், கல்வித்துறையின் உத்தரவு
ரத்து செய்யப்படுகிறது" என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை
உத்தரவிட்டது. மதுரை யாதவா கல்வி நிதி சங்க செயலாளர் நவநீதகிருஷ்ணன் தாக்கல் செய்த
மனு: மதுரை யாதவா கல்லூரி செயலாளராக என்னை நியமித்தனர். அதற்கு, கல்லூரிக்
கல்வி இணை இயக்குனர் 2009ல், ஒப்புதல் அளித்தார். இதை எதிர்த்து,
கோபாலகிருஷ்ணன் மற்றும் சிலர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யாதவா கல்வி நிதி சங்கம்
குறித்து, கண்ணன் என்பவர் பதிவுத்துறை ஐ.ஜி.,க்கு புகார் அளித்தார். ஐ.ஜி.,
அறிக்கை கோரினார். என்னை விசாரணைக்கு அழைத்தார். கல்லூரி நிர்வாகத்தில்
பிரச்னை ஏற்படும் பட்சத்தில், அதை கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்
நிர்வகிக்கலாம், என 1985 செப்.,2 ல் (ஜி.ஓ.,-எம்.எஸ்., 1021) கல்லூரி
கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுரை கல்லூரிக்கல்வி இணை இயக்குனர், எங்கள் கல்லூரி
நிர்வாகத்தை ஏற்பதாக, பிப்.,28 ல் உத்தரவிட்டார். இது தனியார் கல்லூரி
ஒழுங்குமுறைச் சட்டப்படி செல்லாது. செயலாளர் இல்லை எனில், கல்லூரி குழுதான்
நிர்வகிக்க வேண்டும். கல்வித்துறையின் (1985) உத்தரவை ரத்து செய்ய
உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி வினோத் கே.சர்மா முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்
வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜரானார். தமிழ்நாடு தனியார் கல்லூரி விதிகள்படி,
ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் அதிகாரம் கல்லூரி செயலாளருக்கு உண்டு.
இதை யாராலும் மாற்ற முடியாது. கல்வித்துறையின் (1985) மற்றும் தற்போது
கல்லூரி கல்வி இணை இயக்குனரின் உத்தரவு எதேச்சதிகாரமானது. நிர்வாக
விதிகளுக்கு புறம்பானது. நிர்வாகத்தில் தகராறு ஏற்படும் பட்சத்தில், மண்டல இணை இயக்குனர் நிர்வாக
பொறுப்பை ஏற்கலாம். பிரச்னை முடிவுக்கு வந்தபின், பொறுப்புகளை ஒப்படைக்க
வேண்டும். கல்லூரி கல்வித்துறையின் (1985) உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,
என உத்தரவிட்டார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>மழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி?
வெயிலோ, மழையோ, குளிரோ, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, நமது உடல்
தகவமைத்துக் கொள்ளும் இயல்புடையது. அதேபோல, அந்தந்த தட்பவெப்பத்திற்கேற்ப,
வைரஸ், பாக்டீரியாக்களால் நோய்களும் அதிகமாக பரவ ஆரம்பிக்கும். தற்போது,
வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. அதற்கு முன்பே, ஆங்காங்கே மழை கொட்டத்
துவங்கி விட்டது. நோயின் முன்னோடியாக, "டெங்கு' காய்ச்சல் தமிழகம் முழுதும்
பரவலாகி விட்டது. இதேபோல மழைக்காலத்தில், பல்வேறு நோய்களும் நம்மைத்
தாக்கும். வெயில் காலத்தில் "எறும்பைப் போல' சுறுசுறுப்பாக செயல்படும்
நாம், மழைக்காலத்தில் சோம்பல் நிலைக்கு சென்று விடுவோம். திடீர் மழையில்
நனையும் போது சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். மழைக்கால நோய்கள்,
அதிலிருந்து நம்மை பாதுகாப்பது, நோய் வந்தால் எப்படி செயல்படுவதென, டாக்டர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.மழைக்கால பொதுவான நோய்கள்,
அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி
பேராசிரியர். மழைக்காலம், பனிக்காலம் என்றாலே
அதிக சளி, மூச்சுதிணறல், இருமல் தொந்தரவு பரவலாக இருக்கும். நோயாளிகள்
இதிலிருந்து தங்களை தற்காத்து கொள்வது அவசியம்.ஆஸ்துமா, காசநோய், நுரையீரல்
நோய் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது, மழையில் நனையக் கூடாது. மழையில்
நனைந்தால் இருமல், சளி, தலைவலி, காய்ச்சல், மூச்சு முட்டல் ஏற்படும். இருதய
நோயாளிகள் மழை, அதிக குளிரில் செல்லக்கூடாது. அதிக குளிர், ரத்தத் தமனிகளை
சுருங்கவைப்பதால், ஆபத்தில் முடியலாம். மாரடைப்பு மற்றும் வால்வு கோளாறு
உள்ளவர்களுக்கு அடிக்கடி சளிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. பக்கவாதம்,
மூளை தொடர்பான நோய்கள் இருந்தால், நோயை கூடுதலாக்கி விடும்.சர்க்கரை
நோயாளிகள் மழைக் காலத்தில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய முடியாது. எனவே,
ரத்த சர்க்கரை கூட வாய்ப்புள்ளது. அந்தநிலையில், உணவுக் கட்டுப்பாட்டை
கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதிக குளிரில், அதிகாலையில் உடற்பயிற்சி,
நடைப்பயிற்சி செய்யும் போது, மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தேங்கிய
மழைநீர் மூலம் சிக்குன்குனியா, டெங்கு, பன்றி காய்ச்சல் வரலாம். பன்றி
காய்ச்சல் கிருமிகள் (எச்1என்1) அதிக குளிர், மழை சீதோஷ்ணத்தில் அதிகமாக
உற்பத்தியாகும். எனவே, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். பெண்கள்,
ஈரத்தலையுடன் இருந்தால், "சைனஸ்' தொல்லை ஏற்படும். வைரசால் கண்நோய்
ஏற்படும் வாய்ப்புள்ளது.
குளிருக்கு அதிக டீ, காபி குடித்தால் ஆபத்து. பாதுகாப்பில்லாத குடிநீரால் மஞ்சள் காமாலை நோய் தாக்கலாம். கொதிக்க வைத்த வெதுவெதுப்பான நீரை குடித்தால், காலரா, வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து நம்மை காப்பாற்றும். மழை பெய்யும் போது, சாக்கடை கழிவுநீரும் சேர்ந்துவிடும். தவிர்க்க முடியாமல் நடந்து வந்தாலும், உடனடியாக ஆடையை மாற்றி, கால்களை நன்கு கழுவ வேண்டும். மழையில் நனைந்த ஆடைகள் மூலம், தோல்நோய்கள் வரலாம். உடல் இயங்குவதற்கு தண்ணீர் அவசியம். குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர், மழைக் காலத்தில் உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்க, சிலர் அதிகமாக சிகரெட் புகைப்பர், மதுரை அருந்துவர். இவர்களுக்கு மாரடைப்பு, நுரையீரல், கல்லீரல் தொடர்பான நோய்கள் வரலாம். காப்பி, டீ அதிகமாக குடித்தால், வயிற்றுப் புண் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளின், கொழுப்புச்சத்து அதிகரிக்க காரணமாகிவிடும்.

>>>அக்டோபர் 19 [October 19]....
- அல்பேனியா - அன்னை தெரசா தினம்
- வானியல் இயற்பியலாளர் சுப்ரமணியன் சந்திரசேகரின் பிறந்தநாள்(1910)
- நியுயே - அரசியலமைப்பு தினம்(1974)
- மார்டின் லூதர், இறையியலுக்கான டாக்டர் பட்டம் பெற்றார்(1512)
- சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது(1954)
>>>"லேப்டாப்' பெறுவதில் மாணவர்கள் அவதி
அரசு இலவச லேப்டாப் பெற தேவையான பிளஸ் 2 "ஒரிஜினல்' மதிப்பெண் சான்றுகளை,
உயர் கல்வி நிறுவனங்கள் வழங்க மறுப்பதால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
2011-2012 கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள் தற்போது பொறியியல்,
மருத்துவம் உள்ளிட்ட கல்லூரி படிப்புகளில் சேர்ந்துள்ளனர். தற்போது
அவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 மதிப்பெண் சான்று
வழங்கியபோது பின்புறம் "லேப்டாப் பெறவில்லை' என தலைமையாசிரியர்களால்
முத்திரையிட்டு வழங்கப்பட்டது. உயர் கல்வியில் சேர்ந்த போது அச்சான்றுகளை
கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் ஒப்படைத்தனர். தற்போது இலவச லேப்டாப்
பெற தலைமையாசிரியர்களால் முத்திரையிடப்பட்ட அந்த மதிப்பெண் சான்று
தேவைப்படுகிறது. இவற்றை பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் வழங்க மறுக்கின்றன.
சில நிறுவனங்களில் தாமதப்படுத்துகின்றனர். அதற்குள் "லேப்டாப்'
வழங்கப்பட்டு விடுகிறது. இதனால், தகுதி இருந்தும் "லேப்டாப்' கிடைக்காமல்
மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சி.இ.ஓ., நாகராஜமுருகன் கூறியதாவது: உயர்
கல்வி நிறுவனங்களில் மதிப்பெண் சான்று பெறுவதில் சிக்கல் உள்ள மாணவர்கள்,
அந்த நிறுவனத்தில் இருந்து படித்ததற்கான சான்று பெற்றுவந்தால் "லேப்டாப்'
வழங்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து
மாணவர்களுக்கு "லேப்டாப்' கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
>>>நான் ஒரு மருத்துவ தூதர்: மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு
"டெங்கு'
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு
ஏற்படுத்த, பள்ளி மாணவர்களை "மருத்துவ தூதராக' மாநகராட்சி அனுப்பி
வருகிறது.சென்னையில் "டெங்கு' காய்ச்சலால், மருத்துவமனைகளில் சிகிச்சை
பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசு ஒழிப்பு
குறித்து, பள்ளி மாணவர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த
மாநகராட்சி ஈடுபட்டுள்ளது."மருத்துவ தூதர்'மண்டல சுகாதார அதிகாரிகளால்,
பள்ளி மாணவர்கள் அனைவருக்கும், ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
அதில், "என் வீட்டிற்கும் தெருவுக்கும், நான் ஒரு மருத்துவ தூதர்' எனவும்,
மாணவ, மாணவியர் பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர் போன்ற
விவரங்களும், குறிப்பிடப்பட்டுள்ளன.தூய்மையான நீரில்...அட்டையின்
மறுபக்கம், ஆட்டுக்கல், தேங்காய்ஓடு, வாழை மரம், டயர், வாளி, குளிர்
சாதனங்கள், திறந்த கிணறு, திறந்த மேல்நிலை தொட்டி, பூந்தொட்டி, அடைபட்ட
மாடிகள், பிளாஸ்டிக் கப் போன்ற படங்கள் அடங்கிய வாசகத்துடன் அட்டை
உள்ளது. மேலும், இந்த பொருட்களில் தேங்கி நிற்கும், தூய்மையான நீரில்
இருந்து, கொசு உற்பத்தியாகி, "டெங்கு' உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது என,
குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து மண்டல நல அலுவலர் ஒருவர்
கூறியதாவது:கொசு ஒழிப்பு குறித்து, தங்கள் வீட்டுக்கு மட்டுமில்லாமல்,
தெருவில் உள்ள அனைவருக்கும் மாணவ, மாணவியரை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த
உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
>>>மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் - பள்ளிகளிடம் வசூல் புகார்
மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்க பள்ளிகளிடம் கட்டணம் வசூல்
செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு
விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால் மாவட்டத்தில் பல்வேறு
இடங்களில் இந்த பொருட்களை வழங்க பள்ளிகளிடமிருந்து கெடுபிடி
வசூல் செய்து வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் ஆசிரிய, ஆசிரியைகள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் உட்பட ஒரு சில தொடக்க கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு அரசு
வழங்குகின்ற விலையில்லா பொருட்களான புத்தகம், குறிப்பேடு மற்றும் சீருடை
போன்றவற்றை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வினியோகம் செய்த போது இரு
பருவங்களுக்கும் சேர்த்து துவக்கப் பள்ளிக்கு 300 ரூபாய், நடுநிலைப்
பள்ளிக்கு 500 ரூபாய் வீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. விலையில்லா பொருட்கள்
வினியோகத்ற்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கியுள்ள நிலையில் சில அதிகாரிகள்
ஆசிரியர்களிடம் கெடுபிடி வசூல் செய்து வருவது கண்டிக்கதக்கது. எனவே, அரசின்
விலையில்லா பொருட்களை வழங்க கட்டாய வசூல் செய்த அதிகாரிகள் மீது உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட
தொகையை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள்
தெரிவித்தனர்.
>>>300 பள்ளிகளில் மின் இணைப்பு "கட்' : "பில்' கட்ட ரெடி; தொகை தெரியவில்லை
மதுரை மாவட்டத்தில், 300 பள்ளிகளில், துண்டிக்கப்பட்ட மின் இணைப்புக்களை
மீண்டும் பெற, "பில்' தொகை விவரங்களை பெற முடியாமல், கல்வி துறையினர்
தவிக்கின்றனர். இம்மாவட்டத்தில், 16 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், 300 தொடக்க
மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2009ல் இருந்து, மின் கட்டணம்
செலுத்தப்படவில்லை. பல லட்ச ரூபாய் நிலுவையானதால், மின்வாரியம், 2012,
ஜனவரியில், பள்ளிகளின் இணைப்புக்களை துண்டித்தது. மதுரை கிழக்கு ஊராட்சி
ஒன்றியத்தில் மேலமடை, ஒத்தக்கடை உட்பட, 50 பள்ளிகள் மூலம், அதிகபட்சம், 5
லட்சம் வரை நிலுவை உள்ளது. இப்பள்ளிகளில், 2009ல் இருந்து மின்சாரம்
இல்லாததால், கோடையில் மின்விசிறி, குளிர் காலத்தில் லைட் வசதி இன்றி,
மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அரசு வழங்கிய, டி.வி.டி., கம்ப்யூட்டர்,
"டிவி' ஆகியவற்றை இயக்க முடியாமலும், மூலம் ஆங்கிலம் கற்றல் போன்ற, "கணினி
வழி கற்றல்' திட்ட உபகரணமும், காட்சி பொருட்களாக உள்ளன.
கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இப்பிரச்னையை, ஆசிரியர் சங்கங்கள் எடுத்துச் சென்றன. பள்ளிகள் வாரியாக, மொத்த நிலுவை தொகை விவரம் தெரிவித்தால், அதற்கான நிதியை ஒதுக்குவதாக, தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மொத்த, "பில்' விவரத்தை தெரிவிக்க, மின் வாரிய அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, புகார் எழுந்துள்ளது. தலைமையாசிரியர்கள் கூறுகையில், " பள்ளி செயல்படும் பகுதிக்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகத்தில், மொத்த, பில் குறித்த தகவல் கேட்டால், ஓராண்டுக்கு மேல், பணம் கட்டாததால், அந்த தகவல் இல்லை. உயர் அதிகாரிகளிடம் கேட்டு பெறுங்கள் எனக் கூறி விடுகின்றனர்' என்றனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுபாஷினி, ""இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பேசப்படும்,'' என்றார்.
எதிர்பார்ப்பு : தமிழகத்தில், 2009க்கு முன், பள்ளிகளுக்கு மின் கட்டணத்தை, அந்தந்த ஊராட்சி நிர்வாகம் செலுத்தியது. தி.மு.க., ஆட்சியில் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது, பள்ளிகளுக்கு, அரசே மின் கட்டணத்தை செலுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது இருந்தே, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மின் கட்டணம் செலுத்தும் பிரச்னை உள்ளது. பழைய முறைப்படி, பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை, ஊராட்சிகள் கட்ட வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Government school teacher murdered - Minister assured that appropriate action will be taken
தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி "உடனடிய...