குரூப்- 2 கலந்தாய்வில், நேற்று வரை, 2,446 பேருக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகள் வழங்கப்பட்டன. குரூப்- 2 தேர்வில் தேர்வு பெற்ற,
3,475 பேருக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகள் வழங்குவதற்கான கலந்தாய்வு, 15ம்
தேதி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் துவங்கியது. நேற்று வரை முடிந்த
ஐந்து நாளில், 2,446 பணிகளை நிரப்பி, அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டதாக,
துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடைசி நாளான இன்றும் கலந்தாய்வு நடக்கிறது. இன்று, ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர், பணி ஒதுக்கீடு ஆணை பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு
நாள் கலந்தாய்விலும் பங்கேற்காத தேர்வர்களுக்கு, வேறொரு நாளில் தனியாக,
கலந்தாய்வு நடத்தப்படலாம் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>இன்று - அக்.20: அதிரடி மன்னன் 'வீரு'வின் பிறந்தநாள்
*
வீரேந்தர் சேவாக், அக்டோபர் 20, 1978 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில்
பிறந்தார். அப்பா அரிசி வியாபாரி. தன் மகன் சிறந்த கிரிக்கெட் வீரனாக
வேண்டும் என்ற ஆசையில் ஏழு மாத குழந்தையாக சேவாக் இருந்தபோதே பிளாஸ்டிக்
பேட் வாங்கிக்கொடுத்து உள்ளார்.
* டெல்லி அரோரா வித்யா பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கிய சேவாக் தன் பன்னிரெண்டாவது வயதில் விளையாடும்போது கீழே விழுந்ததில் பற்கள் உடைந்தன. இந்த நிகழ்வு சேவாக்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளிவைக்கும் அளவுக்குத் தந்தையின் மனதை மாற்றியது. ஆனால் அந்தத் தடையை அம்மாவின் ஆதரவால் முறியடித்து 1997-ல் டெல்லி கிரிக்கெட் அணிக்குத் தேர்வானார்.

* தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பில் சேர்ந்த சேவாக்
உள்ளூர் போட்டிகளில் சதம், இரட்டை சதம் என்று கலக்கியதால் 1999-ல் இந்திய
அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள்
போட்டியில் களம் இறங்கியவர் ஒரு ரன்னோடு ஆட்டம் இழந்தார். பந்து வீச்சிலும்
மூன்று ஓவருக்கு 35 ரன்கள் கொடுத்தார். அதன் விளைவு... இந்திய அணியில்
அடுத்த வாய்ப்புக் கிடைக்க ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தார்.
*
பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 54
பந்துகளுக்கு 58 ரன்கள் சேர்த்து ரசிகர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தார்.
இதுவே சேவாக்கின் நான்காவது ஒரு நாள் போட்டி. அப்போது தொடங்கிய அதிரடி
இந்திய அணியின் தொடக்க வீரராகத் தொடர்ந்து களம் இறங்க வகை செய்தது.
* நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 68 பந்துகளுக்கு 100 ரன்கள்
அடித்து சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதல் சதத்தைப் பதித்தார்.
*
இதுவரை 245 ஒரு நாள் போட்டிகளில் 8,090 ரன்களும், 96 டெஸ்ட்களில் 8,178
ரன்களையும் குவித்து உள்ளார். ஒரு நாள் போட்டியில் இவரின் அதிகபட்ச ரன்கள்
219. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 149 பந்துகளிலேயே இந்த
இமாலயச் சாதனையைச் செய்தார். டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்சம் 319
ரன்கள்.
* ஒரு நாள் போட்டிகளில் விரைவாக சதம் அடித்த முதல்
இந்தியர் என்ற பெருமையைத் தட்டிச்சென்றவர் சேவாக். டெஸ்ட் போட்டிகளைக்கூட
ஒரு நாள் போட்டிகளைப் போலவே அணுகக் கூடியவர். சர்வதேச அளவில்
ஆஸ்திரேலியாவின் பிராட்மேன், மேற்கிந்தியத் தீவுகளின் ப்ரையன் லாரா, கிறிஸ்
கெய்ல் வரிசையில் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் தொட்டவர்களுள்
சேவாக்கும் ஒருவர்.
* ஆரம்ப காலத்தில் சச்சினுக்கு நிகராக
கருதப்பட்டவர். தன் முன்னேற்றத்துக்கு உந்து சக்தியாக இருப்பவர் என்று
சச்சினையே முன் உதாரணமாகக் கொண்டவர். ஃபார்மில் இல்லாதபோது ஏற்படும்
சறுக்கல்களைத் தனது தீவிரப் பயிற்சியால் ஏற்றங்களாக மாற்றிக் காட்டியவர்.
* 2002-ல் அர்ஜூனா விருது, 2010-ல் சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின்
சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் விருது, 2010-ல் பத்மஸ்ரீ விருது என உயரிய
கௌரவங்களைப் பெற்றவர். உலக அளவில் கொடுக்கப்படும் விஸ்டன் லீடிங்
கிரிக்கெட்டர் விருது 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் சேவாக்குக்குக் கிடைத்து
இருக்கிறது.
* 'தோல்விகளுக்கு எதிரான எனது வெற்றிகள் தொடரும்’
என்ற முழக்கத்தோடு சேவாக் ஒரு மூத்த ஆல்ரவுண்டராக இன்று வரையில்
உற்சாகத்துடன் வலம் வந்துகொண்டேதான் இருக்கிறார்!

>>>இன்னும் 7 ஆண்டில் அனைத்து மாணவருக்கும் ஆகாஷ் டேப்லட்
"இன்னும், ஏழு ஆண்டுகளில், அனைத்து மாணவர்களுக்கும், ஆகாஷ் டேப்லட்
கம்ப்யூட்டர் வழங்கப்படும்" என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை
அமைச்சர், கபில் சிபல் கூறினார். டில்லியில் நேற்று, இந்தியா -
நியூசிலாந்து, கல்வி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்துள்ள,
நியூசிலாந்து, கல்வி, திறமை மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர், ஸ்டீவன்
ஜாய்ஸ் தலைமையிலான, உயர்மட்டக் குழுவுடன், மத்திய அரசு, பல உடன்பாடுகள்
மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
இந்த நிகழ்ச்சியில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், கபில் சிபல் பேசியதாவது: நாட்டின் உயர் கல்வியை மேம்படுத்த, மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்து
வருகிறது. இதற்காக, பல மசோதாக்களை வரைந்துள்ளது. அவற்றை நிறைவேற்ற,
எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால், நாட்டின் கல்வித் துறை மேம்படும். குறைந்த விலை, டேப்லட் கம்ப்யூட்டர் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட
வேண்டும் என்பதில், அரசு முனைப்பாக உள்ளது. இன்னும், ஐந்து முதல், ஏழு
ஆண்டுகளுக்குள், அனைத்து மாணவர்களுக்கும், இது வழங்கப்படும்.இவ்வாறு, கபில்
சிபல் பேசினார்.
>>>கற்றல், கேட்டல் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய விருப்பமா?
மாணவர் பருவத்தில் அல்லது இளைஞர் பருவத்தில் உள்ள ஆண்கள் சிலருக்கு,
கீச்சு குரல் இருக்கும். பெண்களைப் போல் இருக்கும் அந்த குரலால், அவர்கள்
பல இடங்களில் கிண்டலுக்கு ஆளாகி, அவமானமாக உணர்வர். இதுபோன்ற நபர்களுக்கு
வாய்ஸ் தெரபி சிகிச்சை தேவைப்படுகிறது.
நோக்கம்
பேசும் திறனை மேம்படுத்துவது ஒரு அம்சம் என்றால், கேட்கும் திறன்
மற்றொரு அம்சம். ஆடியாலஜிஸ்ட் அன்ட் ஸ்பீச் லாங்குவேஜ் பேதாலஜிஸ்ட்(ASLP)
எனப்படும் மருத்துவரின் ஒட்டுமொத்தமான நோக்கம் என்னவெனில், இந்தப்
பிரச்சினையைக் கொண்டிருக்கும் அனைத்து வயது மக்களுக்கும் உதவிசெய்து,
அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே.
இந்தப் பணிக்கான வாய்ப்புகள்
ASLP நிபுணர்கள் மொத்தம் 3 பிரிவுகளில் கவனம் செலுத்துகிறார்கள்.
* ஆடியாலஜி - இது கேட்பது தொடர்பானது
* ஸ்பீச் - இது குரல் செயல்பாடுகள் தொடர்பானது
* லாங்க்வேஜ் - இது ஒருவரின் மொழி புரிந்துணர்வு திறன் தொடர்பானது.
* ஆடியாலஜி - இது கேட்பது தொடர்பானது
* ஸ்பீச் - இது குரல் செயல்பாடுகள் தொடர்பானது
* லாங்க்வேஜ் - இது ஒருவரின் மொழி புரிந்துணர்வு திறன் தொடர்பானது.
சோதனைகளின் பேட்டரி மூலம், பிரச்சினையை அளவிட அல்லது பரிசோதிக்க,
இத்துறை நிபுணர்கள் பயிற்சியளிக்கப்பட்டுள்ளார்கள். வாய்ஸ் பயிற்சிகள்
மற்றும் நீண்ட கவுன்சிலிங் மூலமாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், ஒலியளவை அதிகப்படுத்த, hearing aids மற்றும் cochlear implants
போன்ற சாதனைங்களை சோதனை செய்து அவற்றை பரிந்துரைக்கிறார்கள் ASLP
நிபுணர்கள். இத்துறையானது, ஒரு கூட்டு செயல்பாட்டுத் துறையாகும். இத்துறை
நிபுணர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், ஆகுபேஷனல் தெரபிஸ்டுகள்
மற்றும் கல்வியாளர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்படுகிறார்கள்.
பலவிதமான குறைபாடுகள்
கேட்டல் மற்றும் பேசுதல் குறைபாடுகள், பல காரணங்களால் ஏற்படுகின்றன. சில
குறைபாடுகள், புற்றுநோய் மற்றும் ஸ்ட்ரோக் ஆகியவற்றின் பாதிப்புகளால்
ஏற்படும். மேலும் சில, கேட்டல் கோளாறுகள், கற்றல் குறைபாடுகள், வளர்ச்சி
தாமதங்கள், ஆடிஸம், வாய் அமைப்பில் ஏற்படும் பிளவு மற்றும் மூளை தொடர்பான
பிரச்சினைகள் போன்றவற்றால் ஏற்படுகின்றன. சிலருக்கு திக்குவாய் உள்ளிட்ட
பலவிதமான பேச்சு தொடர்பான சிக்கல்கள் இருக்கலாம். சிலருக்கோ, விழுங்குதல்
கூட கடினமாக காரியமாக இருக்கும்.
BASLP படிப்பு
இளநிலை ஆடியாலஜி அன்ட் ஸ்பீச் லாங்குவேஜ் பேதாலஜி(BASLP) எனப்படும்
படிப்பானது, துணை மருத்துவ அறிவியல்களுக்கான மணிப்பால் கல்லூரியில்
வழங்கப்படுகிறது. டெல்லியிலுள்ள எய்ம்சில், 3 வருட B.Sc in Hearing and
Speech படிப்பு வழங்கப்படுகிறது. BASLP படிப்பில், 4ம் வருடத்தில் ஒரு
கூடுதல் அம்சமாக, கட்டாய இன்டர்ன்ஷிப் உள்ளது.
படிப்பிற்கான அங்கீகாரம்
BASLP படிப்பானது, கடந்த 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய
ரீஹேபிலேஷன் கவுன்சிலால்(RCI) பரிந்துரைக்கப்பட்ட ஒன்று. ரீஹேபிலேஷன்
தொடர்பான படிப்புகளை தரப்படுத்துவது, இந்த கவுன்சிலின் முக்கிய
நோக்கங்களில் ஒன்றாகும். இந்த BASLP படிப்பானது, ஒருவர் இத்துறையில்
பயிற்சி பெறும் தகுதியை அளிக்கிறது.
அதேசமயம், ஒருவர் பயிற்சியைத் தொடங்கும் முன்பாக, RCI -ல் பதிவுசெய்ய
வேண்டும். இன்றைய நிலையில், இந்தியாவில், இத்துறையில் இளநிலை, முதுநிலை
மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்கும் மொத்தம் 54 கல்வி நிறுவனங்களை RCI
அங்கீகரித்துள்ளது.
இளநிலை படிப்பில் சேரும் தகுதிகள்
நீங்கள் பள்ளி படிப்பில் இயற்பியல் மற்றும் வேதியியலை கட்டாயம்
படித்திருக்க வேண்டும். மூன்றாவது பாடமாக, கணினி அறிவியல், புள்ளியியல்,
எலக்ட்ரானிக்ஸ், உளவியல் போன்ற பாடங்களில் ஏதேனும் ஒன்றை படித்திருக்கலாம்.
Hearing-Language-Speech துறையில் டிப்ளமோ(DHLS) படித்தவர்கள் மற்றும் 2
வருட பணி அனுபவம் உடையவர்கள், BASLP படிப்பில் நேரடியாக இரண்டாவது வருடம்
சேரலாம். 2 வருட DHLS படித்த ஒருவர், முழுமையாக பயிற்சியளிக்கப்பட்ட
பட்டதாரி அல்லது முதுநிலை பட்டதாரியின் கீழ், ஸ்பீச் அன்ட் ஹியரிங்
டெக்னீசியனாக பயிற்சி எடுக்கலாம்.
தேர்வு முறைகள்
ஒவ்வொரு கல்வி நிறுவனம் தனக்கான சொந்த நுழைவுத்தேர்வை வைத்துள்ளன. பல
வளாகங்களை வைத்துள்ள Ali Yavar Jung national institute for the hearing
handicapped(AYJIHH), தனது அனைத்து வளாகங்களுக்கும் ஒரே நுழைவுத்தேர்வையே
நடத்துகிறது. கடந்த 1965ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட, நாட்டிலேயே பழமையான,
அகில இந்திய ஸ்பீச் மற்றும் ஹியரிங் கல்வி நிறுவனம், ஒரு நுழைவுத்தேர்வை
நடத்துகிறது. இத்தேர்வானது, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பாடத்திட்ட
அடிப்படையில் நடத்தப்படுகிறது.
மருத்துவக் கல்லூரி நன்மை
இப்படிப்பிற்கான கல்வி நிறுவனத்தை தேர்வு செய்கையில், அது
மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டதாக இருந்தால் பயன்கள் அதிகம். இதன்மூலம், பல
அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆராயச்சி நிறுவனங்கள்
AIISH நிறுவனமானது, இத்துறை நிபுணர்களால் மிகவும் சிறப்பும்,
முக்கியத்துவமும் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிறுவனம், பொது
மக்களுக்கான சேவையை வழங்குவதால், மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கான சிறந்த
இடமாக திகழ்கிறது. பல இடங்களிலிருந்து வரும் நோயாளிகளின் மூலம் பரவலான
அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதேசமயம், இந்தக் கல்வி நிறுவனத்தின் புகழ் மற்றும் குறைந்த கல்விக்
கட்டணம் போன்ற காரணிகளால், இங்கே இடம்பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிறுவனத்தில், இளநிலைப் படிப்பை மேற்கொள்ள முடியாதவர்கள், முதுநிலைப்
படிக்க இங்கு வருகிறார்கள். ஆனால், அவர்கள் அப்படிப்பை மேற்கொள்ள ஸ்பீச்
லாங்குவேஜ் அல்லது ஆடியாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முதுநிலைப்
படிப்பிற்காக தேர்ந்தெடுக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகள்
ASLP நிபுணர்கள், இ.என்.டி, நியூராலஜி, சைக்யாட்ரிக், பீடியாட்ரிக்ஸ்,
சர்ஜரி மற்றும் ஆன்காலஜி ஆகிய துறைகளுடன், நெருங்கி பணிபுரிவார்கள்.
மேலும், குழந்தைகளுக்கான வாய்ஸ் அல்லது ரீஹேபிலேஷன் தொடர்பான சிகிச்சையில்
ஈடுபட்டிருக்கும் மையங்களில் நிறைய வேலைவாய்ப்புகள் உண்டு.
இவைத்தவிர, சிறப்பு பள்ளிகள் மற்றும் ஆரம்ப கால சிகிச்சை மையங்கள்
போன்றவற்றில் பணிவாய்ப்புகளை பெறலாம். மேலும், வெளிநாட்டு மற்றும் ரெகுலர்
பள்ளிகள், தங்களுடைய மாணவர்களின் பிரச்சினைகளுக்காக ASLP நிபுணர்களை
தொடர்பில் வைத்துள்ளன. இந்த வழக்கத்தை, வேறு பல பள்ளிகளும் பின்பற்ற
தொடங்கிவிட்டன.
இத்துறை நிபுணர் ஒருவர், தனியார் ஆலோசகராகவும் இருக்கலாம். ஆனால்,
புதிதாக படித்து இத்துறையில் நுழையும் ஒருவர் ஆலோசகர் ஆவது கடினம்.
ஏனெனில், இதற்கான முதலீடும், பரவலான தொடர்பும் தேவை.
சம்பளம்
இத்துறை வருமானம், இடத்திற்கு இடம் மாறுபடும். நிலையானது என்று
எதுவுமில்லை. இத்துறையில் முதுநிலைப் படிப்பு முடித்து, அனுபவமின்றி, ஒரு
நல்ல மருத்துவமனையில் பணிக்கு சேரும் ஒருவர், மாதம் ரூ.35,000 முதல்
ரூ.45,000 வரை பெறுகிறார்.
தொழில்துறை பணிவாய்ப்பு
Hearing aids உள்ளிட்ட, இத்துறை தொடர்பான மருத்துவ சாதனங்களை
தயாரிக்கும் தொழிற்சாலைகளின் மூலமாக பணி வாய்ப்புகள் உண்டு. இன்றைய
நிலையில், நாட்டில், இத்துறை தொடர்பான சாதனங்களை தயாரிக்கும் குறைந்தபட்சம்
8 முதல் 10 வரையான பிரபல நிறுவனங்கள் உண்டு. இந்நிறுவனங்களுக்கு,
அச்சாதனங்களின் பயனாளர்கள் மற்றும் நோயாளிகளிடமிருந்து கருத்துக்கள் தேவை.
அந்த கருத்துக்களைப் பெற்று தருபவர்களாக ASLP நிபுணர்கள் விளங்கி, பணி
வாய்ப்புகளை அளிக்கிறார்கள்.
தொழில்நுட்ப அனுகூலம்
கடந்த 70 மற்றும் 80ம் ஆண்டுகளில், மருத்துவ பரிசோதனை செயல்பாடுகள்
என்பவை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கடுமையாக உணரும் ஒன்றாக
இருந்தது. ஆனால் இன்றோ, தொழில்நுட்பத்தின் உதவியால், பல நவீன, மேம்பட்ட
சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, சமீபத்திய தொழில்நுட்ப மேம்பாடுகள்
குறித்த அறிவைக் கொண்டிருப்பது அவசியம்.
அறுவை சிகிச்சையின்போது மற்றும் அதற்கு பிறகான நிலைமைகளில், சாதனம்
சரியாக பொருந்தியிருக்கிறதா மற்றும் நோயாளி சூழலுக்கு ஏற்றவாறு பொருந்திக்
கொள்கிறாரா என்பதை மதிப்பிடுவது இத்துறை நிபுணர்களின் முக்கியப் பணிகளில்
ஒன்று.
என்ன தேவை?
பேசுதல் மற்றும் கேட்டல் குறைபாடானது, பொதுவாக, சமூக அளவிலான ஒரு
மதிப்பு குறைபாடாக கருதப்படுகிறது. மேலும், இத்துறை நிபுணர்கள், தங்களிடம்
வரும் மருத்துவ பிரச்சினைகளை உளவியல் ரீதியாக அணுக வேண்டியுள்ளது. ஏனெனில்,
பல பெற்றோர்கள், தங்களது குழந்தைக்கு இதுபோன்ற ஒரு குறைபாடு இருக்கிறது
என்பதை ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களால் அதை
தாங்கிக்கொள்வதும் கடினம்.
எனவே, அதீத பொறுமையையும், கடின உழைப்பையும், விடாமுயற்சியையும்
கைக்கொண்டு, ஒருவரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டிய பெரும் பொறுப்பு இத்துறை
நிபுணருக்கு உள்ளது. இத்தகைய கடும் முயற்சிகளுக்குப் பிறகு கிடைக்கும்
பலன்கள், அதீத சந்தோஷத்தையும், திருப்தியையும் கொடுக்கும்.
>>>வங்கிப் பணி: டிசம்பரில் பொது நுழைவுத்தேர்வு
இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா,
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 20 பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர்
பதவிக்கான பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்வு டிசம்பர் மாதம்
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (IBPS) சார்பில் நடத்தப்படும் இந்த எழுத்துத் தேர்வுக்கு www.ibps.in எனும் இணையதளத்தின் மூலமாக, நவம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் ஆன்லைன் வழியாக நடத்தப்பட உள்ளது.
எழுத்தர் அல்லது வங்கி பணிகளில் பணி புரிய விரும்புபவர்கள் இந்த தேர்வினை
கட்டாயம் எழுதியிருக்க வேண்டும். தேர்வினைத் தொடர்ந்து பொது நேர்முகத்
தேர்வு IBPS ஆல் நடத்தப்படும். எழுத்துத் தேர்விற்கான அழைப்புக் கடிதத்தினை டிசம்பர் 3ம் தேதி
இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.ibps.in எனும் இணையதளத்தினை அணுகலாம்.
>>>மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்:கரும்பலகை, சாக்பீஸ் முறைக்கு "குட்பை'
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை
மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் "ஸ்மார்ட் கிளாஸ்'
வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திட்டத்தின்
முதல் கட்டமாக மணியகாரன்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் முதல்
ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின்
கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், "அமெரிக்கன் இந்தியா
பவுண்டேஷன்'(ஏ.ஐ.எப்) எனும் அமைப்பின் நிதியுதவியுடன், "டிஜிட்டல்
ஈக்குவலைசர்' எனும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகளை துவங்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.சி., வசதியுள்ள இந்த வகுப்பறைகளில் "டெல்' மற்றும்
ஏ.ஐ.எப். அமைப்பின் சார்பில் 25 கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர், டிஜிட்டல்
பிளாக்போர்டு, இன்டெர்நெட் இணைப்பு, புரொஜக்டர் உள்ளிட்ட வசதிகளும் இலவசமாக
வழங்கப்பட்டுள்ளன. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு,
கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் கோவை ஒருங்கிணைப்பாளர்
அலெக்சாண்டர் கூறியதாவது: வருங்காலங்களில் கம்ப்யூட்டர் இல்லாமல் எதையும்
செய்ய முடியாது. அப்படிப்பட்ட நவீன உலகில், மாநகராட்சிப் பள்ளிகளில்
படித்து வெளியேறும் மாணவர்களும் நிலைத்து நிற்க, அவர்களுக்கும்
கம்ப்யூட்டர் தொழில் நுட்ப அறிவு முக்கியம். ஆறாம் வகுப்பு முதலே
கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பாடங்களை கற்பிப்பதுதான்
ஸ்மார்ட் கிளாஸ் எனும் "கம்ப்யூட்டர் கிளப்' துவங்குவதன் நோக்கம். கிளப்பில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களும் அதிவேக இன்டர்நெட் இணைப்பு
வசதியுடன்,"ஒயர்ப்ரீ' முறையில் ஆசிரியரின் கம்ப்யூட்டருடன்
இணைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் தினமும் தனது பாடத்துக்கென
ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில், ஒரு மணி நேரத்தை கம்ப்யூட்டர் மூலம் கற்பிக்க
வேண்டும். பாடத் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட "டிவிடி', ஏற்கனவே
கம்ப்யூட்டர்களில் "லோடு' செய்யப்பட்டிருக்கும். பாடங்களை ஆசிரியர்கள்
"தொடுதிரை டிஜிட்டல் ஒயிட் போர்டின்' உதவியுடன் விளக்குவர். அதே பாடங்கள்
மாணவர்களின் கம்ப்யூட்டர்களிலும் இடம் பிடித்திருக்கும். மாணவர்களின்
கம்ப்யூட்டர்கள், ஆசிரியர் வசமுள்ள கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில்
இருக்கும். இதனால் இன்டர்நெட் இணைப்பை மாணவர்களால் தவறாக பயன்படுத்த
முடியாது. இன்டெர்நெட் இணைப்பு உள்ளதால், பாடம் தொடர்பான தகவல்கள்
மற்றும் படங்களை உடனுக்குடன் "டவுன்லோடு' செய்து படிக்கலாம். இதே வசதியுள்ள
பிற மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன், "வீடியோ கான்பிரன்ஸ்'
முறையில் பாடம் தொடர்பாக கலந்துரையாடலாம். வண்ணப் படங்கள் சகிதம் "விஷூவல்' ஆக பாடங்களை படிக்க முடிவதால், பாடத்தின்
மையக்கருத்து எளிதில் மறக்காது.ஆசிரியர்களுக்கு 56 மணி நேரம் பயிற்சி
அளிக்கப்படும். இதற்கென ஒவ்வொரு கிளப்புக்கும் தனி ஒருங்கிணைப்பாளர்
நியமிக்கப்படுவர். "சாக் அண்டு டாக்' எனும் பழைய கற்பித்தல் முறைக்கும்,
மனப்பாட கல்வி முறைக்கும் இனி "குட்பை' சொல்லி விடலாம். இத்திட்டம் பெறும்
வெற்றியின் அடிப்படையில், மீதமுள்ள பள்ளிகளிலும் துவங்கப்படும். 2014 வரை
செயல்படுத்தப்படும் இத்திட்டம், அதன் பின் மாநகராட்சி நிர்வாகத்திடம்
ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
>>>சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்: தேர்வு பட்டியல் வெளியீடு
பள்ளி கல்வித் துறையில், 1,524 சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கான
தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு
உள்ளது. இதுகுறித்து, வாரியம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளி கல்வித் துறையில், உடற்கல்வி,
ஓவியம், தையல் உள்ளிட்ட பிரிவுகளில், 1,524 சிறப்பு ஆசிரியர்கள்; அரசு
பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்கள்; அரசு,
"பாலிடெக்னிக்" கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட
உள்ளனர். இதற்கான, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் இன சுழற்சி அடிப்படையிலான தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம், 1ம் தேதி, ஐகோர்ட்
பிறப்பித்த உத்தரவின்படி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், நிரப்பப்பட
உள்ளன. தேர்வு பட்டியலில் இடம் பெற்றோருக்கு, விரைவில் கடிதம்
அனுப்பப்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
An unprecedented 41 cm Rain in Rameswaram - Cloud burst in Pamban - Chennai Met Office
ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத 41 செ.மீ. மழை - பாம்பனில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது - சென்னை வானிலை மையம் ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை கா...