கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டில்லியில் கல்வி ஆலோசனைக் கூட்டம்: ஆர்.டி.இ. குறித்து ஆய்வு

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின், புதிய அமைச்சர் பல்லம் ராஜு தலைமையில், கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின், 60வது கூட்டம், இன்று டில்லியில் நடக்கிறது. இதில், பல்வேறு மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இம்மாதம், 1ம் தேதி, நடப்பதாக இருந்த கூட்டம், 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இன்று பிற்பகல், 2:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், துறையின் செயலர்கள் பங்கேற்கின்றனர்.தமிழகத்தின் சார்பில், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, இரு துறைகளின் செயலர்களான ஸ்ரீதர் மற்றும் சபிதா ஆகியோர் பங்கேற்பர் என, தெரிகிறது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் செயல்பாடுகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், ஆசிரியர் கல்வி குறித்து, நீதிபதி வர்மா பரிந்துரைகள், புதிய சட்டத்திற்கான வரைவு மசோதா உள்ளிட்ட, 10 அம்சங்கள் குறித்து, கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள், தமிழகத்தில் எந்த அளவிற்கு அமல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து, அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் விவரிப்பர். இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தை, முழுமையான அளவில் அமல்படுத்த வேண்டும் என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், எந்த மாநிலங்களிலும், இத்திட்டம், 100 சதவீதம் செயல்படுத்தப் படவில்லை என்பது, குறையாக உள்ளது. எனவே, ஒவ்வொரு மாநிலமும், இச்சட்டத்தை எந்த அளவிற்கு அமல்படுத்தி உள்ளது என்பது குறித்து, முக்கியமாக ஆய்வு செய்யப்பட உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, இச்சட்டம் குறித்து, அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரிடையே, நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் குறித்து, விரிவாக எடுத்துக் கூற, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

>>>விழிப்புணர்வு இல்லாத "விழி' பதிவு!:"ஸ்மார்ட் கார்டு' பணிகள் தொய்வு

 
உடற்கூறு அடிப்படையிலான இருப்பிட அடையாளஅட்டை வழங்குவதற்கான,விரல் மற்றும் கருவிழி பதிவுவிபரங்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வுஇல்லை. இது தொடர்பாக,உரிய விளம்பரங்கள் செய்யப்படாததால், திட்டப் பணிகளில்தொய்வு ஏற்பட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு உடற்கூறு அடிப்படையிலான (பயோ மெட்ரிக்) இருப்பிட அடையாள அட்டைகள் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதன்படி, பொதுமக்களின்அடிப்படை விபரங்கள், உடற்கூறு அடையாளங்களுடன்பதிவு செய்யப்படுகின்றன.இதற்காக கண்ணின் கருவிழிமற்றும் கைகளின் 10 விரல்ரேகைகள் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

எதிர்காலத்தில் அரசு நலத்திட்டங்கள் அனைத்தும், உடற்கூறுபதிவுகளின் அடிப்படை யிலானஅடையாள ஆவணத்தின்படிவழங்க அரசு திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் ரேஷன் கார்டுகளை புதுப்பித்து வழங்கும்போதும், உடற்கூறு பதிவுகள்கொண்ட "ஸ்மார்ட்' ரேஷன் கார்டாக வழங்கவும், அரசு பரிசீலனை செய்து வருகிறது. இப்பணிகள் தேசிய மக்கள் தொகைபதிவேடு அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரின் விரல் ரேகைகள்,கண் கருவிழிகள், புகைப்படங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

அக்., 3 முதல் கோவைமாவட்டத்தில் கோவை (தெற்கு)மற்றும் பொள்ளாச்சி தாலுகாக்களுக்கு உட்பட்ட சில இடங்களில்,இதற்கான முகாம்கள்நடந்தன. ஆனால், இது குறித்துபோதிய பிரசாரமோ, விளம்பரமோ இல்லாததால், பொதுமக்கள்இடையே விழிப்புணர்வுஇல்லை. பதிவு விபரங்கள்குறித்தோ, இதன் அவசியம்என்ன என்பது குறித்தோ பொதுமக்கள் பலரும் அறிந்தவர்களாக இல்லை. இதனால்,பதிவு செய்வோர் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது.

பொதுமக்கள் கூறுகையில்,"எங்கு முகாம் நடக்கிறது என்பதே எங்களுக்கு தெரியவில்லை. வீடுகள் தோறும் அலுவலர்கள் வந்து பதிவு செய்துக்கொள்வார்களா? வாக்காளர்அடையாள அட்டை பதிவு,விலையில்லா பொருட்கள்வழங்கும்போது சரியான தகவல்களை முன்கூட்டியே தருகின்றனர்; அரசியல் கட்சியினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால். ஸ்மார்ட் கார்டுவிஷயத்தில் அப்படி இல்லை.வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இதற்கு யாரும்அளிப்பதில்லை. இது நல்ல திட்டம்; ஆனால், செயல்படுத்துவதில் இருக்கும் குளறுபடிகளால், திட்டத்தின் நோக்கம்நிறைவேறாமல் போய்விடுகிறது.எங்களுக்கு விருப்பம்இருந்தும், பதிவு செய்ய முடியவில்லை' என்றனர்.

கோவை மாவட்டத்தில் ஆறுதாலுகாக்களில் இரண்டில் மட்டுமே பணிகள் துவங்கியுள்ளன. அதுவும் சில கிராமங்கள் மட்டும், தேர்வு செய்யப்பட்டுள்ளன. கோவை தெற்குதாலுகாவுக்கு உட்பட்ட குறிச்சிஹவுசிங் யூனிட் உட்பட்ட சிலபகுதிகளில், உடற்கூறு பதிவுக்குபொதுமக்களுக்கு டோக்கன்வழங்கப்பட்டது. ஆனால்,"மின்சாரம் இல்லை; வீடியோகேமராமேன் வரவில்லை'எனக் கூறி, பதிவுப்பணிகள்பாதியில் நிறுத்தப்பட்டன. ஆபரேட்டர், கேமராமேன் பற்றாக்குறையும், பணிகளில் தொய்வுஏற்பட முக்கிய காரணம்.

தமிழகத்தில் கடந்த 2011ம்ஆண்டு ஜூன் மாதம் இப்பணிகள் துவங்கின. அரியலூர்,பெரும்பலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்டமாவட்டங்களில் பணிகள் ஓரளவு முடிந்துள்ளன. 2013மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகள் முடிக்க மத்திய உள்துறைஅமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.ஆனால், இந்தஇலக்கை எட்டுவது சிரமம் எனஅதிகாரிகள் கூறுகின்றனர்.

இன்னொரு "ஆதார்?':கடந்த சில மாதங்களுக்குமுன்பு, "ஆதார் அடையாளஅட்டை' பெயர் பதிவுப்பணிகள் தீவிரமாக நடந்தன.பிப்., 6ம் தேதியுடன் இந்தபணிகள் நிறுத்தப்பட்டன. மாவட்டத்தில் றைந்தஅளவிலான மக்களே"ஆதார் அட்டை' பெற்றுக்கொண்டனர். அதே போல்,ஸ்மார்ட் கார்டு திட்டமும்அனைத்து தரப்பு மக்களையும் எட்டாமல் செல்லும்நிலை உள்ளது. எங்கெங்கு, எப்போது பெயர்பதிவு மற்றும் உடல்கூறுபதிவு நடக்கிறது; என்னென்னஆவணங்கள்தேவை என்பது குறித்து,உரிய அதிகாரிகள் அவ்வப்போது தகவல்களை வெளியிட்டால், பொதுமக்கள்பங்கேற்பை அதிகப்படுத்தமுடியும்; திட்டத்தின் நோக்கமும் நிறைவேறும்.

>>>நவ.10 - மலாலா தினம்: உலகம் கொண்டாடும் தைரிய தேவதை!

 
தாலிபான் பயங்கரவாதிகளின் தோட்டாக்களை மண்டியிடச் செய்து, மீண்டு எழுந்துள்ள பாகிஸ்தான் போராளிச் சிறுமி மலாலாவைக் கௌரவிக்கும் வகையிலும், உலக அளவில் கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்கான விழிப்பு உணர்வை வலுப்படுத்தும் வகையிலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

"நவம்பர் 10 - (சனிக்கிழமை) உலக அளவில் 'மலாலா தினம்' கொண்டாடப்படும் எ
ன்பதே அந்த அறிவிப்பு. சர்வதேச அளவில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி, அடிப்படை உரிமை என்பதற்கான அடையாளமாகவே மலாலா திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

தற்போது, உலக அளவில் 6 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத அவல நிலையில் வாடுகிறார்கள். அவர்களுக்குக் கல்வி கிடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் விழிப்பு உணர்வை வலுப்படுத்துவதே மலாலா தினத்தின் நோக்கம்.

இதனிடையே, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், உலக அளவில் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றன. இந்தப் பிரசாரத்துக்கு இங்கிலாந்து அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது. நாடு, மொழி, மதங்கள் கடந்து தனக்குக் கிடைத்துள்ள ஆதரவில் நெகிழ்ந்து உலகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார், பிரிட்டனில் சிகிச்சை பெற்றுவரும் மலாலா. அவரது உடல்நிலை வெகுவாக முன்னேறி இருக்கிறது.

நானும் மலாலா இயக்கத்தில் சேர விரும்புவோர் நாட வேண்டிய தளம் - http://educationenvoy.org

இனி மலாலாவின் சரித்திரத்தை நினைவுகூர்வோம்...

தைரிய தேவதை!

வீதிக்கு வருவதே வீரதீரச் செயல், எந்த நேரமும் தாக்கப்படக்கூடிய அச்சம், 'நாமும் நாளை இப்படித்தான் தெருவில் பிணமாகக் கிடப்போமா?' என்கிற பீதி... 2003 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் தாலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தால் பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் சந்தித்த அவலநிலையே இவை.

எல்லாவற்றுக்கும் மேலாக, 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டன. 50 ஆயிரம் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக, பெண்களுக்குக் கல்வி கிடைக்காமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்தனர்.

இக்கொடுமைகளை எதிர்த்து நின்றாள். 2009-ல் தன் எழுத்தின் மூலம் தாலிபான்களில் அட்டகாசங்களை உலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டினாள். ஸ்வாட் பகுதி முழுவதுமே தாலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு வித்திட்டாள்.

அவள் மலாலா யூசஃப்சாய். அப்போது அவளுக்கு வயது 11. ஆம், அண்மையில் தாலிபான்களின் துப்பாக்கித் தோட்டாக்கள் தீண்டிய 14 வயது போராளிச் சிறுமியைப் பற்றிதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

சக தைரியச் சிறுமிகளைப் போலவே யூனிஃபார்ம் அல்லாத சாதாரண உடை அணிந்து, புத்தகங்களை மார்பில் மறைந்து பள்ளிக்குச் சென்று வந்த மலாலாவிடம் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. டைரிக் குறிப்பின் ஒவ்வொரு வாக்கியமும் தாலிபான்கள் இழைத்துக்கொண்டிருக்கும் கொடுமைகளின் பதிவாகவே இருந்தது. அதை அப்படியே பி.பி.சி. உருது மொழிப் பிரிவுக்கு புனைப்பெயரில் அனுப்பிவைத்தாள் மலாலா. எழுத்தின் வீரியம் உணரப்பட்டதால், உடனடியாக வலைப்பதிவு தொடராக வெளியிடப்பட்டது. அதுவே, ஸ்வாட் பகுதியில் இருந்து தாலிபான்கள் விரட்டி அடிக்கப்படுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது.

அதன்பின், நியூயார்க் டைம்ஸ் ஆவணப் படம் மூலம்தான் தெரியவந்தது, பிபிசி-யில் தன் டைரிக் குறிப்புகளை வழங்கியது 11 வயதுச் சிறுமி மலாலா என்று. முதன்முறையாக மலாலாவின் முகத்தைப் பார்த்த உலகம் வியப்பில் ஆழ்ந்தது. ஹிட்லரின் வெறிச் செயல்களைத் தனது டைரிக் குறிப்புகள் மூலம் வரலாற்றுப் பதிவாக்கிய ஆன்னி ஃபிராங்க்கை நினைவூட்டினாள்.

மலாலாவின் தைரியத்தைக் கொண்டாடியது பாகிஸ்தான். அந்நாட்டின் இளம் அமைதியாளருக்கான முதல் விருதை வழங்கி கௌரவித்தது பாகிஸ்தான் அரசு. பெண் கல்விக்காகப் போராடும் அவளுக்கு சர்வதேச அரங்கில் பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன.

இவற்றைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்ட தாலிபான்கள், மலாலாவை தங்கள் 'ஹிட்' லிஸ்டில் வைத்து, அவளைத் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டினர். மின்கோராவில் உள்ள பள்ளி வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தவளைச் சுட்டனர். கழுத்திலும் தலையிலும் தோட்டாக்கள் துளைக்க, படுகாயத்துடன் விழுந்தாள். அந்தத் தோட்டாக்களுக்கே மலாலாவின் மகத்துவம் தெரிந்திருக்கிறது. ஆம், தோட்டக்கள் அவள் உயிரைப் பறிக்கவில்லை.

உடனடியாக, பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த பாகிஸ்தான் மக்களுக்கு மலாலா குறித்த வருத்தமும், தாலிபான்கள் மீதான கோபமும் மிகுதியானது. உலக நாடுகள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பினர். அதேவேளையில், மலாலா உயிர்பிழைக்கப் பிரார்த்தனைகளும் தொடர்ச்சியாக நடந்தன.

இதனிடையே, மலாலா தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியால், பாகிஸ்தானில் தாலிபான்களின் ஆயுதக் கலாசாரத்துக்கு எதிராக மக்களிடையே உணர்வலைகள் எழுந்தன. பெண்கல்விக்காகக் குரல் கொடுத்ததற்காகவும், மதசார்பற்றவளாக செயல்பட்டு வருவதற்காகவுமே மலாலாவைத் தாக்கினோம் என்ற தாலிபான்களின் விளக்கமும் மக்களின் கொதிப்பைக் கூட்டியது.

பாகிஸ்தான் அரசின் முயற்சியால் மலாலாவுக்கு இங்கிலாந்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நினைவு இழந்தவளை மீட்க, மருத்துவர்கள் கடுமையாகப் போராடினர். லட்சக்கணக்கான உள்ளங்களின் வேண்டுதல்களுக்குப் பலன் கிடைத்திருக்கிறது. மலாலா அபாயக் கட்டத்தைத் தாண்டி குணமாகிவருகிறாள். படுக்கையில் எழுந்து அமர்ந்து, அப்பாவின் கரம்பிடித்துப் புன்முறுவல் பூத்தக் காட்சியைக் கண்ட மக்களின் கண்களில் நீர்த்துளிகள்...

கல்வியில் பின்தங்கி இருக்கும் பாகிஸ்தானில் 'நானும் மலாலா' என்ற முழக்கம், மாணவர்களின் மந்திரச் சொல் ஆனது.

இன்னும் சில நாட்களில் முழுமையாகக் குணமடைந்து தாயகத்துக்குத் திரும்புகிறாள் தைரிய தேவதை மலாலா. அவளுக்கு ஒரு சின்ன வேலை இன்னும் முடியாமல் காத்திருக்கிறது. 'கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் தேசமாக பாகிஸ்தானை மாற்ற வேண்டும்' என்ற தனது கனவை நனவாக்குவதே அது!

>>>நவம்பர் 10 [November 10]....

நிகழ்வுகள்

  • 1444 - ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் ஒட்டோமான் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
  • 1520 - டென்மார்க் மன்னன் இரண்டாம் கிறிஸ்டியான் சுவீடனை முற்றுகையிட்டபோது ஸ்டொக்ஹோம் நகரில் பலரைக் கொன்றான்.
  • 1674 - ஆங்கிலேய-டச்சு போர்: வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின் படி புதிய நெதர்லாந்தை நெதர்லாந்து இங்கிலாந்திடம் ஒப்படைத்தது.
  • 1847 - ஸ்டீபன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1871 - காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஸ்கொட்லாந்தின் நாடுகாண் பயணியும் மிஷனரியுமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார்.
  • 1887 - ஹே சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற தொழிலாளர் தலைவர் லண்டனில் டைனமைட் வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
  • 1918 - யாழ்ப்பாணம், சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல கடைகள் சூறையாடப்பட்டன.
  • 1928 - ஹிரொஹீட்டோ ஜப்பானின் 124வது மன்னரானார்.
  • 1970 - சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
  • 1971 - கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் புனோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமானங்களை அழித்தனர்.
  • 1972 - பேர்மிங்ஹாமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு ஹவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
  • 1993 - தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
  • 1995 - நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ-வீவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1999 - பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
  • 2006 - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பிறப்புக்கள்

  • 1483 - மார்ட்டின் லூதர், புரட்டஸ்தாந்த மதகுரு (இ. 1546)
  • 1675 - "குரு கோவிந்த் சிங்" சீக்கியர்களின் 10வது குரு.
  • 1919 - மிக்கையில் கலாஷ்னிகோவ், ரஷ்யாவின் ஏகே47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்தவர்.
  • 1934 - அ. துரைராசா, பேராசிரியர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பி. 1994)
  • 1957 - டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்

இறப்புகள்

  • 1982 - லியோனிட் பிரெஷ்னெவ், சோவியத் யூனியன் தலைவர் (பி. 1906)
  • 2006 - நடராஜா ரவிராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் (பி. 1962)

சிறப்பு நாள்

  • மலாலா தினம்

>>>நவம்பர் 09[November 09]....

நிகழ்வுகள்

  • 1793 - கிறிஸ்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.
  • 1799 - பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
  • 1872 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் ந்கரில் களஞ்சிய சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் பொஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது. 776 கட்டடங்கள் அழிந்து 20 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1887 - ஐக்கிய அமெரிக்கா ஹவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.
  • 1888 - கிழிப்பர் ஜேக் மேரி ஜேன் கெலியைக் கொன்றான். இதுவே அவனது கடைசிக் கொலையாகும்.
  • 1913 - மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.
  • 1921 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
  • 1937 - ஜப்பானியப் படைகள் சீனாவின் ஷங்காய் நகரைக் கைப்பற்றினர்.
  • 1938 – நாசி இட்லரின் யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக செருமனியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
  • 1953 - கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1963 - ஜப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1963- ஜப்பான் யோகோஹாமா என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1967 - நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
  • 1985 - சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி கஸ்பரோவ் அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • 1989 - பனிப்போர்: கம்யூனிசக் கிழக்கு ஜேர்மனி பேர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.
  • 1990 - நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1994 - டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium) என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 2000 - உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
  • 2005 - வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது.
  • 2005 - ஜோர்தானின் அம்மான் நகரில் மூன்று விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர்.

இறப்புகள்

  • 1918 - கியோம் அப்போலினேர், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1880)
  • 1970 - சார்லஸ் டி கோல், பிரெஞ்சுத் தளபதி, அரசியல்வாதி (பி. 1890)
  • 2005 - கே. ஆர். நாராயணன், இந்தியக் குடியரசுத் தலைவர், (பி. 1921) .
  • 2006 - வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (பி. 1920)

சிறப்பு நாள்

  • கம்போடியா - விடுதலை நாள் (1953)

>>>பாதுகாப்பான தீபாவளி கொண்டாட்டம் - தொடர்பான பள்ளிக்கல்வித்துறை அறிவுரைகள்...

>>>நவம்பர் 14 - குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்- அரசாணை வெளியீடு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...