கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாயமாகி போன மாணவர்களுக்கான "சிறப்பு' பஸ்கள் : மீண்டும் இயக்க தடை என்ன?

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இயக்கப்பட்ட, சிறப்பு பஸ்களை குறைத்ததே, மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கும்,அதனால் ஏற்படும் இறப்புகளுக்கும் காரணம் என்ற , குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை, பெருங்குடி கந்தன்சாவடியில், இம்மாதம், 10ம் தேதி, பஸ் மீது லாரி மோதியதில், படிக்கட்டில் பயணம் செய்த, மாணவர்கள் நான்கு பேர் பலியாகினர். நகரின் பல பகுதிகளுக்கு, போதிய பஸ் சேவைகள் இல்லாததே, இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என, கூறப்படுகிறது.குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும், கூட்ட நெரிசலில், பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். படிக்கட்டு பயணமும் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க, நெரிசல் நேரங்களில், மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு எளிதாக சென்று வர, முதல் கட்டமாக, 12 வழித்தடங்களில், காலையில் இரண்டு நடை, மாலையில் இரண்டு நடை செல்லும் சிறப்பு பஸ்கள், 2010ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

அயனாவரம், பெசன்ட்நகர், பெரம்பூர், பிராட்வே, கே.கே.நகர் மேற்கு, வள்ளலார் நகர், திரு.வி.க.நகர், விவேகானந்தர் இல்லம், பட்டினப்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, வில்லிவாக்கம், தி.நகர், மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து, இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.தொடர்ந்து, சிறப்பு பஸ்களின் நடைகள், 12லிருந்து 48ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது, இந்த சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை, 12 நடைகளுக்கு குறைவாக இயக்கப்படுகிறது.

இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் நெரிசலில், பள்ளி மாணவர்கள் எளிதாக சென்று வர, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் சேவை துவக்கப்பட்ட சில மாதங்களிலேயே, அதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் வசதிக்காக தான், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன; சிறப்பு பஸ்களால் வருவாய் இழப்பு மட்டுமில்லாமல், பஸ்சும் சேதமடைகிறது. இதன் காரணமாக, பஸ்சின், எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில், மாநகர போக்குவரத்து கழகம் தள்ளப்பட்டது.மாநகரில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தயாராக இருக்கிறோம். ஆனால், ஊழியர்கள் பற்றாக்குறை உட்பட பல பிரச்னைகள் உள்ளன. இதை அரசு சரிசெய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

>>>இண்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த சில வழிகள் !!!

 
எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக
்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.
இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்..

>>>ஓசோன் படலம் என்பது என்ன?

 

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் இன்று முன்னேற்றம் என்ற போர்வையில் அறிவு வளர்ச்சி என்ற ஏக்கத்தில் சுற்றுச்சூழலை அழித்துக்கொண்டு இருக்கிறான். சாகாவரம் பெற்ற பாலித்தீன். பூமியை மலடாக்குகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீரும், புகையும் பூமியையும் வளிமண்டலத்தையும் மாசு அடைய செய்கிறது. காடுகளின் அழிவால் சுற்றுச் சூழல் வெப்பம் அடைந்து பனி பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயரு கிறது. இவ்வாறு கடல்மட்டம் உயருவதால் கடற் கரை ஓரங்களில் வளரும் அரிய தாவர இனங் களும் நிலப்பகுதிகளும் அழிக்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டு கொண்டு இருக்கும் இச்சுற்று சூழல் பாதிப்பினால் மனித இனத்திற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சார்ந்த அனைத்து உயிர்களுக்கும் இயற்கையோடு இணைந்த அனைத்து அமைப்புகளும் அழிவை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

ஓசோன் படலத்தை பற்றி...
ஓசோன் படலத்தைப் பற்றியும், அது எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் ஓசோன் படலம் மாசுபடுவதை தடுப்பதற்கான வழி முறைகளையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

1930-ம் ஆண்டு சிட்னிசாப்மேன் என்பவர் ஓசோனை கண்டறிந்தார். ஓசோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்ததே ஒரு ஓசோன் துகள் ஆகும். இதனை வேதி குறியீட்டில் 03 என்பர். ஓசோன் வாயு ஆனது படலமாக பூமியிலிருந்து 60 கிலோ மீட்டர் உயரம் வரை பரவி உள்ளது. 20யிலிருந்து 25 கி. மீட்டர் வரையிலான உயரம் வரை மிக அடர்த்தியாக உள்ளது. இந்த ஓசோன் படலத்தின் முக்கிய பணி என்ன வென்றால் சூரிய ஒளி கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளது. இத்தகைய ஒளிக் கதிர்களை அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். அகச்சிவப்பு கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக் கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதா கதிர்களை பூமியை வந்து அடையா வண் ணம் பாதுகாப்பதுதான் ஓசோன் படலத்தின் பணி ஆகும்.

ஓசோன் படலம் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறது?
உன்னத பணி செய்துக் கொண்டிருக்கும் ஓசோன் படலத்தை நாம் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், புகையிலை தொழிற்சாலைகள, முரைப் பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலைகள், தீயணைப்புக் கருவிகள், வர்ணம் அடிக்கும் தூவிகள், போன்றவற்றில் குளோரோ புளோரா கார்பன் என்னும் வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயு வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் துகள்களை தாக்குகிறது. இதனால் ஓசோன் படலத்தில் துளைகள் ஏற்படுகிறது. எவ்வாறு எனில் குளோரோ புளோரோ கார்பன் வாயு நிலைத்த நிலையில் நூறு ஆண்டுகள் வரையில் இருக்கும். ஆனால், சூரிய கதிர்கள் இவ்வாயுவின் மீது படும்போது இது பிரிகிறது. இந்த வேதியல் மாற்றத்தால் ஒரு குளோரின் அணு மட்டும் பிரிந்து, ஓசோன் துகளை தாக்குகிறது. ஓசோனிலிருந்து ஒரு ஆக்ஸிஜன் அணுவை இழுத்துக் கொள்கிறது. இது குளோரின் மோனாக்ஸைடு துகளாக மாறுகிறது. இவ்வாறு ஓசோன் படலம் அழிக்கப்படுகிறது.

ஓசோன் படலம் பாதிக்கப் படுவதால் ஏற்படும் தீமைகள்„
உலகம் முழுவதும் வெப்பம்கூடும். இதனால் வளி மண்டலத்தில் மிகுதியான வெப்பம்கூடும். அதிக வெப்பத்தினால் வறட்சிக்காலம் ஆண்டுதோறும் நீடிக்கும். வெப்பம் கூடுதல் ஆக ஆக பனிமலைகளிலுள்ள பனி உருகி திடீர் வெள்ளம் ஏற்படும். கடல் மட்டம் கூடும். இதனால் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் நிலத்திற்குள் புகுந்து நிலப்பகுதியின் அளவைக் குறைப்பதோடு கடலோர பகுதிகள் மூழ்கடிக்கப் படும். பருவகாலங்கள் மாறுபட்டு உயிரினங் களும் ஆபத்தை உண்டுபண்ணும். புறா ஊதா கதிரானது ஓசோன் படலத்தால் தடுக்கப்படாமல் நேரடியாக பூமிக்கு வந்தால் மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்ச்சி, தோல் சுருக்கம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் உண்டாக்கின்றன.

ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலா னோர் தோல் புற்று நோயினால் அவதிப்படு கின்றனர். ஓசோன் படலம் 0Š ஒரு விழுக்காடு குறைந்தால் தோல் புற்றுநோய் இரண்டு விழுக்காடு அதிகரிக்கும். மேலும் தாவரங்களின் உற்பத்தி திறனும் குறையும். விலங்கினங்கள் அதிக அளவு பாதிக்கப்படும்.

புற ஊதாக்கதிர்கள் கடலில் பல மைல் தூரம் ஊடுருவிச்சென்று கடல்வாழ் உயிரினங்களில் ஒரு செல் உயிர்களை கொன்று குவிக்கிறது. மண்ணில் நுண்ணுயிர்கள் பாதிப்புக்கு உள்ளா கின்றது. இவ்வாறு ஓசோன் படலம் பாதிக்கப் படுவதால் ஏற்படும் தீய விளைவுகளை கூறிக் கொண்டே செல்லலாம்.

ஓசோனை பாதுகாக்க வழிமுறைகள்

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான வழி முறைகள் பார்ப்போம்.
1995-ம் ஆண்டு ஓசோன் ஆய்விற்காக குரூட்சன் மற்றும் நிகோலஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அறிஞர்களின் விருப்பமெல்லாம் இந்த பூவுலகை காக் கும் ஓசோன் படலத்தை காக்க உலகத்திலுள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும் என்பதுதான்.

எனவே ஒசோன் படலம் பாதிக்கப்படுவதால் எற்படும் பிரச்சினையைக் கட்டுப்படுத்த அகில உலக அளவில் ஒட்டு மொத்தமான கூட்டுறவு முயற்சியும் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் மேற்கொள்ள பரவலான முன் எச்சரிக்கை நட வடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குளோரோ புளோரோ கார் பனை வெளியிடும் சாதனங்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுச் சாதனங்களை கண்டுபிடிக்கவேண்டும். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் ஆகியவற்றில் குளோரோ புளோரோ கார்பனுக்கு ஈடான சுற்றுச்சூழலை மாசு அடைய செய்யாத வேறு பொருள்களை பயன்படுத்தவேண்டும்.

>>>பென்சிலின் உருவான கதை..!!

 
அறிவியல் உலகில் தற்செயலாக பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் பென்சிலின். மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்ததும்தான், நியூட்டன் புவி ஈர்ப்பு விசையையே கண்டுபிடித்தார். அதேபோல் தான் அலெக்சாண்டர் பிளமிங்கும் பென்சிலினைக் கண்டறிந்தார். அந்த சுவையான சம்பவத்தைப் பற்றிப் பார்ப்போமா.
பிளமிங், 1881ல் ஸ்காட்லாந்தில் பிறந்தார். முதலாம் உலகப் போரின் போது படை வீ
ரர்கள் பலர் காயமடைந்து தொற்றுநோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டு இறந்தனர். இதைக் கேள்விப்பட்டு பாக்டீரியாவைக் கொல்லும் மருந்தைக் கண்டுபிடிப்பேன்’ என்று சபதம் கொண்டார் பிளமிங்.1928ல் லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையில் ஒரு விடுமுறை நாளில் கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அன்று விடுமுறை நாளாக இருந்ததால் ஆய்வுப் பொருட்களை அப்படியே வைத்துவிட்டுச் சென்றார். அதில் ஒரு தட்டு மூடாமல் இருந்தது. சுற்றுப்புறமும் அசுத்தமாக இருந்தது. அப்போது வீசிய காற்றால் மெல்லிய பூஞ்சணம் அந்த தட்டில் படித்திருந்தது. 
சில நாட்கள் கழித்து அந்த தட்டை ஆராய்ந்து பார்த்தார் பிளமிங். அப்போது பூஞ்சணம் படிந்த இடத்தில் கிருமிகள் முழுவதும் அழிந்திருந்தன மற்ற பகுதியில் பெருகி இருந்தன, உடனே பிளமிங் அந்த பூஞ்சணத்தைப் பயன்படுத்தி ஒரு மருந்து தயாரித்தார். பூஞ்சணத்தின்பெயர் பென்சிலினா நோடேடம். அதனால், அந்த மருந்துக்கு பென்சிலின் என்று பெயரிட்டார்.
இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் பிளமிங் ஒரு நவீன ஆய்வு கூடத்துக்குச் சென்றார். அங்கே ஆய்வுக் கருவிகள் பளபளப்பாகவும், தூய்மையாகவும் இருந்தன. சுற்றுச் சூழல் தூசியற்றும் குளிரூட்டப்பட்டும் இருந்தது. அப்போது ஒருவர் ‘உங்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை. ஒரு தரமான ஆய்வகம் கூட உங்களுக்குக் கிடைக்கவில்லையே? அப்படி கிடைத்தால் நீங்கள் இன்னும் நிறைய மருந்துகளைக் கண்டுபிடித்திருப்பீர்களே’ என்று சொன்னார். அதற்கு பிளமிங் அமைதியாக, ‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், நிச்சயமாக பென்சிலினைக் கண்டுபிடித்திருக்க மாட்டேன்’ என்றார்.

>>>தகவல் அறியும் உரிமைச் சட்டம் [RIGHT TO INFORMATION ACT]...

 
1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம்?

எடுத்துக்காட்டாக:

1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும்?

4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் (முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம்), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் (தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள்) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன? பாதுகாப்பானவையா? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா?

8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது?

10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா?

11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும்? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும்? இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :
-
திரு. எஸ். இராம கிருட்டிணன், (இ. ஆ. ப, ஓய்வு)
மாநில தலைமை தகவல் ஆணையர், காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி, (வானவில் அருகில்) பழைய எண் : 273, புதிய எண் : 378 , அண்ணா சாலை, (தபால் பெட்டி எண் : 6405) தேனாம்பேட்டை, சென்னை - 600 018 தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580 Email : sic@tn.nic.in http://www.tnsic.gov.in/contacts.html
Tamil Nadu Information Commission

>>>டிசம்பர் 18 [December 18]....

நிகழ்வுகள்

  • 1271 - குப்லாய் கான் தனது சீனப் பேரரசின் பெயரை "யுவான்" என மாற்றிக் கொண்டான். யுவான் வம்சம் ஆரம்பமானது.
  • 1505 - பெல்ஜிய மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் தூக்கிலிடப்பட்டான்.
  • 1642 - ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தில் காலடி பதித்த முதலாவது ஐரோப்பியரானார்.
  • 1787 - நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது.
  • 1911 - சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
  • 1926 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
  • 1935 - இலங்கை சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1941 - ஹொங்கொங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து ஜப்பான் ஹொங்கொங் மீது படையெடுத்தது.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படை விமானங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில் ஜப்பானிய இராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.
  • 1961 - இந்தோனீசியா டச்சு நியூ கினியை ஆக்கிரமித்தது.
  • 1966 - சனி கோளின் சந்திரன் எப்பிமேத்தியஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1973 - சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • 1987 - லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.
  • 1990 - ஈழப்போர்: இலங்கையின் திருகோணமலை இராணுவத் தளபதி லக்கி விஜயவர்த்தனா கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
  • 1997 - எச்.டி.எம்.எல் 4.0 வெளியிடப்பட்டது.
  • 1999 - ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.
  • 2005 - சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புக்கள்

  • 1822 - ஆறுமுக நாவலர், ஈழத்தின் ஆன்மீகவாதி, தமிழ் உரைநடையின் முன்னோடி (இ. 1879)
  • 1856 - ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கில இயற்பியலாளர் (இ. 1940)
  • 1863 - பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் (இ. 1914)
  • 1878 - ஜோசப் ஸ்டாலின், சோவியத் தலைவர் (இ. 1953)
  • 1932 - நா. பார்த்தசாரதி, தமிழ் எழுத்தாளர் (இ. 1987)
  • 1948 - ஸ்டீவன் ஸ்பில்பேர்க், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்

இறப்புகள்

  • 1843 - தாமஸ் கிரஹாம், லினடொக் பிரபு, இந்தியாவுக்கான பிரித்தானிய வைசிராய் (பி. 1748)

சிறப்பு நாள்

  • நைஜர் - குடியரசு தினம் (1958)

>>>நுழைவுத் தேர்வுகளின் புதிய அம்சங்கள் எப்படி?

ஐஐடி, என்ஐடி மற்றும் ஐஐஐடி போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக, சி.பி.எஸ்.இ நடத்தும் தேர்வானது, ஆன்லைன் தேர்வாகவும் நடத்தப்படுவதில் இருக்கும் சாதக அம்சங்கள் இங்கே அலசப்படுகின்றன.
ஆன்லைனில் தேர்வெழுதுதல்
சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, ஒரு மாணவர், ஆன்லைனில் தேர்வெழுதுகிறோமா அல்லது ஆப்லைனில் தேர்வெழுதுகிறோமா என்பதை தன் விருப்பம்போல் முடிவு செய்து கொள்ளலாம். ஆப்லைன் தேர்வானது, 2013 ஏப்ரல் 7ம் தேதி நடத்தப்படுகிறது. முதல் தாளுக்கான ஆன்லைன் தேர்வு ஏப்ரல் 8 லிருந்து, ஏப்ரல் 30க்குள் நடத்தப்படுகிறது. ஆன்லைன் தேர்வில், அதிக மாணவர்கள் பங்கேற்கும் விதமான மாறுதல்களை CBSE செய்துள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
ஆன்லைன் தேர்வின் மிக முக்கியமான அம்சமே, விண்ணப்ப கட்டணம்தான். ஆப்லைனில், முதல் தாளை எழுதும், பொது மற்றும் OBC பிரிவு மாணவர்கள், ரூ.800 ஐ செலுத்த வேண்டும் மற்றும் ஆன்லைனில் தேர்வெழுதுபவர் ரூ.500 செலுத்த வேண்டும். இதே கட்டணம்தான், பெண்களுக்கும், SC/ST/PD பிரிவு மாணவர்களுக்கும் பொருந்தும்.
போக்குவரத்து சிரமங்கள்
ஜேஇஇ மெயின் தேர்வை ஆன்லைனில் எழுத, பெரு நகரங்களில் வாழும் மாணவர்களுக்கு எந்த சிரமமுமில்லை. ஆப்லைனில் எழுதும் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் தொடர்பாக 4 சாய்ஸ்கள் உள்ளன. CBSE வெளியிட்ட தகவல் அறிவிக்கையில், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தேர்வுகளுக்கான மையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆப்லைன் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மையங்கள், ஆன்லைன் தேர்வில் இடம்பெறவில்லை. இதன்மூலம், பெருநகரங்களில் வாழும் மாணவர்கள், ஆன்லைன் தேர்வை தெரிவுசெய்து கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
ஆன்லைன் விண்ணப்பம் என்பது, இம்முறை, CBSE செய்திருக்கும் ஒரு சிறந்த மாற்றம். ஒரு மாணவர், ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தால், அதை அவர் ஆன்லைனில்தான் செய்ய வேண்டும். ஏதேனும் தேர்வு மையங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில், விண்ணப்ப படிவங்களைப் பெறுவதற்கு வழியில்லை.
CBSE -ன் இந்த புதிய திட்டமானது, தொலைதூர கிராமப் பகுதிகளில் வாழும் மாணவர்கள், இணைய கணிப்பொறி வசதியைப் பயன்படுத்தி, ஆன்லைன் விண்ணப்ப முறையைப் பின்பற்றுவதை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், ஜேஇஇ மெயின் தேர்வை, முழுமையாக ஆன்லைனில் நடத்தும் சாத்தியம் குறித்தும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
யாருக்கு சிக்கல்?
கணினி தொழில்நுட்ப விஷயத்தில், குறைந்த அறிவுபெற்ற மற்றும் அதில் ஆர்வமற்ற மாணவர்களுக்கு, CBSE -ன் புதிய மாற்றங்கள் சிக்கல் ஏற்படுத்துவதாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று CBSE தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும், புதிய விதிமுறைகள், மாணவர்களை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கும் பொறுப்பு, CBSE தேர்வு வாரியத்துக்கு உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...