கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>எஸ்.எஸ்.ஏ., கலந்தாய்வு கூட்டத்தில்: 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட்

தமிழகத்தில், பள்ளி வேலை நாளில், தற்செயல் விடுப்பு (சி.எல்.,) எடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 38 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, தொடக்க கல்வி துறை தயார் செய்துள்ளது.
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஜன.,5ல் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதே நாளில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் ஆசிரியர் பள்ளித் தொகுப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக, இக்கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டுமென்ற ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனால், அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்து, தற்செயல் விடுப்பு எடுத்து, கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணித்தனர். அதிகாரிகள் விசாரணையில், 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட் ஆகியிருப்பது தெரிந்தது.
இதுபற்றி தொடக்க கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு மேற்கொள்ளப்படும்' என்றார்.
சங்க நிர்வாகிகள் கூறுகையில், "எங்கள் போராட்டம் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. குறைந்தது 6 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

>>>ஜனவரி 16 [January 16]....

நிகழ்வுகள்

  • 1547 - நான்காம் இவான் ரஷ்யாவின் சார் மன்னனாக முடிசூடினான்.
  • 1556 - இரண்டாம் பிலிப்பு ஸ்பெயின் மன்னன் ஆனான்.
  • 1581 - இங்கிலாந்து நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்க மதத்தை சட்டத்துக்கெதிரானதாக்கியது.
  • 1707 - ஸ்கொட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
  • 1761 - பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.
  • 1777 - வெர்மொண்ட் நியூயோர்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1795 - பிரான்ஸ், நெதர்லாந்தின் யூட்ரேக்ட் என்ற இடத்தைக் கைப்பற்றியது.
  • 1864 - டென்மார்க்கின் மன்னன் ஒன்பதாம் கிறிஸ்டியான் ஜெர்மனி மீது போரைத் தொடுத்தான்.
  • 1909 - ஏர்ணெஸ்ட் ஷாக்கிளெட்டனின் குழுவினர் தென் முனையைக் கண்டுபிடித்தனர்.
  • 1945 - ஹிட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.
  • 1956 - எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றுவதாக சூளுரைத்தார்.
  • 1979 - ஈரான் மன்னர் முகமது ரேசா பாஹ்லாவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.
  • 1991 - ஐக்கிய அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்தது.
  • 1992 - எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்சிக்கோ நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
  • 1993 - விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.
  • 2001 - கொங்கோ தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 2006 - எலென் ஜோன்சன் சேர்லீஃப்ப் லைபீரியாவின் அதிபரானார். இவரே ஆபிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.
  • 2003 - கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.
  • 2008 - 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.
  • 2008 - இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.

பிறப்புகள்

  • 1932 - டயான் ஃபொஸி, கொரில்லாவைப் பற்றி சிறந்த ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (இ. 1985)

இறப்புகள்

  • 1967 - ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)

சிறப்பு நாள்

  • தாய்லாந்து: ஆசிரியர் நாள்

>>>ஜனவரி 15 [January 15]....

நிகழ்வுகள்

  • 1559 - முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.
  • 1582 - லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை ரஷ்யா போலந்திடம் கையளித்தது.
  • 1609 - உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான Avisa Relation oder Zeitung, ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.
  • 1759 - பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
  • 1777 - அமெரிக்கப் புரட்சிப் போர்: வெர்மொண்ட் விடுதலையை அறிவித்தது.
  • 1799 - இலங்கையில் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.
  • 1892 - ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்.
  • 1908 - யாழ்ப்பாணத்துக்கும் காரைநகருக்கும் இடையில் பயணிகள் படகுச் சேவை (ferry) ஆரம்பிக்கப்பட்டது.
  • 1915 - மலாவியில் வெள்ளையினக் குடியேற்றத்தை எதிர்த்து யோன் சிலம்புவே தலைமையில் இடம்பெற்ற கிளர்ச்சியில் மூன்று வெள்ளையினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1919 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கினால் 21 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1919 - ஜெர்மனியின் இரு சோசலிஸ்டுகளான ரோசா லக்சம்பேர்க், மற்றும் கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் துணை இராணுவக்குழுவினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
  • 1936 - முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டடம் ஒகைய்யோவில் கட்டப்பட்டது.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் தீவான குவாடல்கனாலில் இருந்து விரட்டப்பட்டனர்.
  • 1943 - பென்டகன் திறக்கப்பட்டது.
  • 1944 - ஆர்ஜெண்டீனாவில் சான் ஜுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1966 - நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவா என்பவாரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
  • 1969 - சோயூஸ் 5 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு ஏவியது.
  • 1970 - நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா சரணடைந்தது.
  • 1970 - முவாம்மர் அல்-கடாபி லிபியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1975 - போர்த்துக்கல் அங்கோலாவுக்கு விடுதலை வழங்கியது.
  • 1973 - வியட்நாம் போர்: வடக்கு வியட்நாம் மீதான தாக்குதல்களை இடை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.
  • 1977 - சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2001 - விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.
  • 2005 - ஈசாவின் ஸ்மார்ட்-1 என்ற லூனார் விண்கலம் சந்திரனில் கல்சியம், அலுமீனியம், சிலிக்கன் மற்றும் இரும்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தது.
  • 2005 - செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் செல்லினம் என்ற மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 2007 - சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராகிம், மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1866 - நேத்தன் சோடர்புளொம், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1931)
  • 1895 - ஆர்ட்டூரி வேர்ட்டானென், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)
  • 1908 - எட்வர்ட் டெல்லர், ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர், ஹைட்ரஜன் குண்டின் தந்தை (இ. 2003)
  • 1926 - காசாபா தாதாசாகேப் சாதவ், இந்திய ஒலிம்பிக் வீரர் (இ. 1984)
  • 1929 - மார்ட்டின் லூதர் கிங், அமெரிக்க கறுப்பினத் தலைவர் (இ. 1968)
  • 1956 - மாயாவதி குமாரி, இந்திய அரசியல்வாதி

இறப்புகள்

  • 1919 - ரோசா லக்சம்பேர்க், ஜெர்மனிய சோசலிசவாதி (பி. 1870)
  • 1981 - தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (பி. 1902)
  • 1988 - ஷோன் மாக்பிரைட், நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் குடியரசு இராணுவத் தலைவர் (பி. 1904)
  • 1998 - குல்சாரிலால் நந்தா, 2வது இந்தியப் பிரதமர், (பி. 1898)

சிறப்பு நாள்

  • மலாவி - யோன் சிலம்புவே நாள்
  • விக்கிப்பீடியா நாள்

>>>ஜனவரி 14 [January 14]....

நிகழ்வுகள்

  • 1539 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.
  • 1690 - கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.
  • 1724 - ஸ்பெயின் மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான்.
  • 1761 - இந்தியாவில் பானிப்பட் போரின் மூன்றாம் கட்டம் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
  • 1784 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
  • 1814 - நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.
  • 1858 - பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
  • 1907 - ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
  • 1913 - கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர்.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.
  • 1950 - சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
  • 1969 - ஹவாயிற்கு அருகில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1974 - திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1994 - ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் ரஷ்யத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.
  • 1995 - சந்திரிகா அரசு - விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
  • 1996 - உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, "கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டது.
  • 1998 - ஆப்கானிஸ்தானின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2005 - சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.

பிறப்புகள்

  • 1977 - நாராயண் கார்த்திகேயன், கார் பந்தய வீரர்

இறப்புகள்

  • 1898 - லூயி கரோல் ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர் (பி. 1832)
  • 1901 - சார்ல்ஸ் ஹெர்மைட், பிரெஞ்சு கணிதவியலர் (பி. 1822)
  • 1978 - கியோடல், ஆஸ்திரிய அமெரிக்க, கணித, மெய்யியல் அறிஞர் (பி. 1906)

சிறப்பு நாள்

  • தைப்பொங்கல் - தமிழர் திருநாள் (ஜனவரி 14 அல்லது ஜனவரி 15, இந்து நாட்காட்டியின் படி)

தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள்....

தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.


நான்கு நாள் திருவிழா
போகி
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். [மார்கழி] கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.
தைப்பொங்கல்
தை மாத முதல் நாள் பொங்கல்(உழவர் திருநாள்) கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கல்
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
காணும் பொங்கல்
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

>>>ஆங்கில தேர்வுக்கு இடையே விடுமுறை தேவை : ஆசிரியர், மாணவர் வலியுறுத்தல்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலத் தேர்வுகள் விடுமுறையின்றி வருகின்றன. "ஆங்கிலம் இரண்டாம் தாளை, ஒரு நாள் இடைவெளி விட்டு நடத்த வேண்டும்' என, ஆசிரியர், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிளஸ் 2 தேர்வில், தமிழ் முதல் தாளுக்கும், இரண்டாம் தாளுக்கும் இடையே இரண்டு நாட்கள் விடுமுறை உள்ளது. ஆனால், ஆங்கிலம் இரண்டு தாள்களும், மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில், அடுத்தடுத்து நடக்கிறது. அதேபோல், 10ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டு தாள்களும், ஏப்ரல் 1 மற்றும், 2ம் தேதிகளில், தொடர்ச்சியாக நடக்கிறது.

இது குறித்து, ஆங்கில ஆசிரியர்கள் கூறியதாவது: மின்வெட்டு பிரச்னையால், மாணவர்களுக்கு, பகலில் படிப்பது மட்டுமே, ஒரே வழியாக உள்ளது. பகல் நேரத்தில் பள்ளிக்குச் செல்வது, டியூஷன் செல்வது, அன்றாட வேலைகள் என, நேரம் போய் விடுகிறது. அடுத்தடுத்த நாட்களில் தேர்வு இருந்தால், முந்தைய இரவில் படிப்பதோ, பாடங்களை திருப்புவதோ சாத்தியமில்லை. குறிப்பாக, கிராமப்புறங்களில் தமிழ்வழி கற்கும் மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதே பெரும் பிரயத்தனமாகவே உள்ளது. அத்துடன், பெரும்பாலான கிராமப்புறப் பள்ளிகளில் தேர்வு மையங்கள் இல்லை. அருகில் உள்ள பெரிய ஊர் அல்லது நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதி, திரும்ப வேண்டும்.
தேர்வு மையத்திலிருந்து, பஸ் பிடித்து, வீடு திரும்ப மாலை நேரமாகி விடும். அதன் பின், தொடர் மின் வெட்டு இருப்பதால், படிப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால், ஆங்கிலம் இரண்டாம் தாள்களில் மதிப்பெண் குறைய வாய்ப்பு அதிகம். எனவே, கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆங்கில தேர்வுகளை, ஒரு நாள் இடைவெளி விட்டு நடத்த வேண்டும். இவ்வாறு, ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதே கருத்தை, மாணவர்களும் வலியுறுத்துகின்றனர். ஆனால், அட்டவணையில் திருத்தம் செய்ய வாய்ப்புகள் இல்லை என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>கரும்பின் நன்மைகள்...

 
பொங்கல் பண்டிகையின் போது தான் கரும்பு மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இந்த நாட்களில் கரும்பை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். கரும்பை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போமா!!!

மஞ்சள் காமாலை
கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். அதுமட்டுமின்றி மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

தொற்றுநோய்கள்
உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.

சிறுநீரக கற்கள்
கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.

நீரிழிவு
கரும்பு இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.

ஊட்டச்சத்துக்கள்
கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

சளி, இருமல் மற்றும் தொண்டை வலி
நிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.

புற்றுநோய்
கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.

நீர் வறட்சி
நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Magizh Mutram - Handbook Manual - Tamil Nadu Government School Education Department Released

மகிழ் முற்றம் - கையேடு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியீடு - தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ் முற்றம் சார்ந்து அமைக்கப்பட...