கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>விக்கிப்பீடியா தினம்!

 
ஜன.15: அறிவை எளிய மக்களுக்கும் இலவசமாக திறந்துவிடுகிற சாதனையைச் செய்த விக்கிப்பீடியா பிறந்த தினம் இன்று. என்சைக்ளோபீடியாதான் அறிவுக்களஞ்சியம் என பலருக்கு தெரியும்; ஆனால், அந்த மொழி புரிந்துக்கொள்ள கடினமாக, எல்லாருக்கும் கிடைப்பதாக இல்லாமல் இருந்த குறையை இது போக்கியது.

கடந்த 2001 இல் ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் தொடங்கிய தளமிது. எந்த விளம்பரங்களும் இல்லாமல் அறிவை எல்லாரும் பகிர்ந்து கொள்வதே இதன் நோக்கம். ஒரு பக்கத்தை நீங்கள் நான் யார் வேண்டுமானாலும் துவங்கலாம், அதை மேலும்மேலும் தகவல்களை சேர்த்து விரிவுபடுத்தலாம்; சந்தேகம் வருமென்றால் அங்கேயே கேள்விகள் எழுப்பலாம். ஒரு ரூபாய்கூட பெறாமல் இது செயல்படுத்தப்படும் என்கிற கான்செப்டில் தொடங்கியது இது.

இன்றைக்கு 285 மொழிகளில் ஒரு லட்சம் பேரின் உழைப்போடு 24 மில்லியன் கட்டுரைகள் எளிய நடையில் புரிந்துகொள்ளும் வகையில் இலவசமாக கிடைக்கின்றன. இதன் தாக்கத்தில் பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா தன் அச்சுப் பதிப்பை நிறுத்திக்கொண்டது. விக்கி என்றால் ஹவாய் மொழியில் வேகமான என்று அர்த்தம். ஆமாம் வேகமான தகவல்களை இலவசமாக கொண்டுபோய் சேர்க்கிற வேலையை செய்திருக்கும் இந்தக் கட்டுரைகூட விக்கிபீடியா உதவியுடனே அடிக்கப்பட்டது. என்றாலும், விக்கிப்பீடியா தரும் தகவல்களை சரிபார்த்து கொள்ளுதல் நல்ல அணுகுமுறையாக இருக்கும்.

>>>மார்டின் லூதர் கிங்...

 
மார்டின் லூதர் கிங்... இணையற்ற போராளி. வெள்ளையர்கள் அமெரிக்காவை பிடித்த பின்பு அங்கே வேலை செய்ய எண்ணற்ற ஆப்ரிக்க மக்களை கொண்டுவந்தனர். அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினர். ஆடு, மாடுகளை விற்பதை போல அடிமை விற்பனை பல இடங்களில் இருந்தது. கொல்லபட்டாலும் கேட்பதற்கு ஆளில்லாமல் இருந்த அவர்களுக்கு அடிமைமுறையில் இருந்து விடுதலை கொடுத்து லிங்கன் கொடுத்த அறிவிப்பில் நாடே இரண்டுபட்டது. உள்நாட்டுப்போருக்கு பின் ஒன்று சேர்ந்தது. சட்டரீதியாக அவ்வாறு சொல்லப்பட்டாலும் கொடுமைகள் தொடர்ந்தன. அப்பொழுது தான் மார்டின் லூதர் கிங் வந்தார்.

ஆயுதம் ஏந்தி போராடிய தன்னின மக்களை அன்பாயுதம் ஏந்த சொன்னார். நன்னெறியை கேடயமாக கொள்ள சொன்னார் கருப்பு கேவலம் என்கிற எண்ணம், பலூன் கடைகாரரின் நிறத்திற்கும் சாதனைக்கும் சம்பந்தமில்லை என்கிற சொல்லில் பறந்தது. பாதிரியாராக மாறிய இவர் இயேசுவின் போதனைகளை அமெரிக்காவின் மனசாட்சியை எழுப்ப பயன்படுத்திக் கொண்டார். அன்பால் யாவும் சாத்தியம் என முழங்கினார்.

அவரின் எனக்கொரு கனவிருக்கிறது பேச்சை படித்து பாருங்கள் மெய்சிலிர்த்து போவீர்கள். தன் வீட்டில் குண்டுவீசப்பட்ட பொழுதுகூட அன்பையே போதித்தவர். ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பின பெண்ணுக்கு பேருந்தில் உட்கார இடம் மறுக்கப்பட்ட பொழுது ஒரு வருடம் முழுக்க அத்தனை கறுப்பின மக்களையும் அலபாமா மாகாணத்தில் பேருந்தில் போகாமல் நடந்து அல்லது டேக்ஸியில் போக வைத்து உரிமையை மீட்டெடுத்தவர்.

எங்கேயும் எப்பொழுதும் கொல்லப்படலாம் என தெரிந்தும் தீர்க்கமாக வெள்ளை வெறியர்களில் அன்பை விளைவிக்க முயன்ற அன்புக்காரர். குண்டுகள், தாக்குதல்கள் என எல்லாமும் சுற்றி தாக்கிய பொழுதும் "என் தலையில் இரண்டு காளைகள் மோதுகின்றன - ஒன்று அன்பு; இன்னொன்று அராஜகம் - இதில் எது ஜெயிக்கிறது தெரியுமா? எதற்கு நான் அதிக உணவிடுகிறேனோ அதுவே ஜெயிக்கிறது! அன்பே போதும் எனக்கு!" என்றார் முப்பத்தைந்து வயதில் நோபல் பரிசை பெற்றவர் அவர். அந்த பணத்தை முழுக்க கறுப்பர்களின் உரிமை மீட்டெடுப்பு பணிகளுக்கு செலவு செய்தார். இறுதியில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார். அவரின் கனவை அத்தேசம் நிறைவேற்றியது அதைவிட பெரிய மரியாதை வேறென்ன இருக்க முடியும்?

( ஜன.15 : மார்டின் லூதர் கிங் பிறந்தநாள்.)

>>>மே மாதத்தில் சேர்க்கை: மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில், அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும், 2013-14ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, மே மாதம் முதல் மேற்கொள்ள வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் வசுந்தராதேவி (பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு உட்பட்டு செயல்படும் அனைத்து மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2013-14ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை, மே மாதத்திற்கு முன் மேற்கொள்ளக் கூடாது.
சில பள்ளிகள் டிசம்பர் முதல் சேர்க்கை நடத்துவதாக தெரிகிறது. இதுகுறித்து ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகங்கள், இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும்.
விதிமுறைக்கு முரணாக செயல்படும் பள்ளிகள் மீது நேரடி கவனம் செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திலும் இதுதொடர்பான அறிவிப்பு வைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞர் அசத்தல்

"காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்," என பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார்.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.
இரண்டு ஆண்டாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறும் அவர், மேலும் கூறியதாவது: சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.
தற்போது காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளேன். இரண்டு ஆண்டாக இதற்காக முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். நாகர்கோவில், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும். மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது. என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும்.
காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும்.
ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது.
நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது. ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்ட வேண்டும்.
நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

>>>இலவச பொருட்களை பள்ளிகளுக்குஅனுப்ப ஒதுக்கிய நிதியில் முறைகேடு

இலவச பொருட்களை பள்ளிகளுக்கு அனுப்ப ஒதுக்கிய நிதியை, பள்ளிகளுக்கு வழங்காமல், கல்வித் துறை அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு ஆண்டிற்கு நான்கு முறை சீருடைகள், மூன்று முறை நோட்டு, புத்தகங்கள், கலர் பென்சில்கள், செருப்பு, கணிதவியல் பெட்டி உட்பட பொருட்களை, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது.

இப்பொருட்களை மாவட்டத்திற்கு கொண்டு வருவதில் இருந்து, பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கும் வரை, அனைத்து செலவுகளையும், கல்வித் துறை ஏற்றுக் கொள்கிறது. இதற்காக, ஒவ்வொரு உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் இருந்தும், ஒவ்வொரு பள்ளியும் எவ்வளவு தொலைவில் உள்ளது என, வரைபடம் தயாரித்து, கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது. அதன் அடிப்படையில், இலவச பொருட்களை பள்ளிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு தேவையான நிதியை, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, அரசு வழங்கி விடுகிறது.அவர்கள், இந்நிதியை பள்ளிகளுக்கு வழங்குவதில்லை.

பொருட்களையும், பள்ளிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதில்லை.மாறாக, அனைத்து பள்ளிகளுக்கும் போன் மூலம் தகவல் தெரிவித்து, உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு வந்து பொருட்களை எடுத்துச் செல்லுமாறு, கூறி விடுகின்றனர். பள்ளி நிர்வாகங்கள், தங்கள் சொந்த செலவில் இந்த பொருட்களை எடுத்துச் சென்று, மாணவர்களுக்கு வழங்குகின்றனர். அதிகாரிகள், பள்ளிகளுக்கு கொண்டுபோய், பொருட்களை வழங்கியதாக கணக்கு காட்டி, நிதி முறைகேடு செய்கின்றனர். இதனால், கல்வித்துறை அதிகாரிகள் மீது, பள்ளி நிர்வாகங்கள் அதிருப்தியில் உள்ளன.பள்ளிகளுக்கு அரசு நேரடியாக நிதி வழங்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன.

>>>எஸ்.எஸ்.ஏ., கலந்தாய்வு கூட்டத்தில்: 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட்

தமிழகத்தில், பள்ளி வேலை நாளில், தற்செயல் விடுப்பு (சி.எல்.,) எடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 38 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, தொடக்க கல்வி துறை தயார் செய்துள்ளது.
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஜன.,5ல் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதே நாளில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் ஆசிரியர் பள்ளித் தொகுப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக, இக்கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டுமென்ற ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனால், அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்து, தற்செயல் விடுப்பு எடுத்து, கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணித்தனர். அதிகாரிகள் விசாரணையில், 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட் ஆகியிருப்பது தெரிந்தது.
இதுபற்றி தொடக்க கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு மேற்கொள்ளப்படும்' என்றார்.
சங்க நிர்வாகிகள் கூறுகையில், "எங்கள் போராட்டம் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. குறைந்தது 6 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

>>>ஜனவரி 16 [January 16]....

நிகழ்வுகள்

  • 1547 - நான்காம் இவான் ரஷ்யாவின் சார் மன்னனாக முடிசூடினான்.
  • 1556 - இரண்டாம் பிலிப்பு ஸ்பெயின் மன்னன் ஆனான்.
  • 1581 - இங்கிலாந்து நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்க மதத்தை சட்டத்துக்கெதிரானதாக்கியது.
  • 1707 - ஸ்கொட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
  • 1761 - பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.
  • 1777 - வெர்மொண்ட் நியூயோர்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1795 - பிரான்ஸ், நெதர்லாந்தின் யூட்ரேக்ட் என்ற இடத்தைக் கைப்பற்றியது.
  • 1864 - டென்மார்க்கின் மன்னன் ஒன்பதாம் கிறிஸ்டியான் ஜெர்மனி மீது போரைத் தொடுத்தான்.
  • 1909 - ஏர்ணெஸ்ட் ஷாக்கிளெட்டனின் குழுவினர் தென் முனையைக் கண்டுபிடித்தனர்.
  • 1945 - ஹிட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.
  • 1956 - எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றுவதாக சூளுரைத்தார்.
  • 1979 - ஈரான் மன்னர் முகமது ரேசா பாஹ்லாவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.
  • 1991 - ஐக்கிய அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்தது.
  • 1992 - எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்சிக்கோ நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
  • 1993 - விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.
  • 2001 - கொங்கோ தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 2006 - எலென் ஜோன்சன் சேர்லீஃப்ப் லைபீரியாவின் அதிபரானார். இவரே ஆபிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.
  • 2003 - கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.
  • 2008 - 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.
  • 2008 - இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.

பிறப்புகள்

  • 1932 - டயான் ஃபொஸி, கொரில்லாவைப் பற்றி சிறந்த ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (இ. 1985)

இறப்புகள்

  • 1967 - ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)

சிறப்பு நாள்

  • தாய்லாந்து: ஆசிரியர் நாள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...