கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>124 மாணவர்களை பேருந்தில் ஏற்றி வந்த தனியார் பள்ளிக்கு அபராதம்

பழநியில் 124 மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்தை பறிமுதல் செய்து,  போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மாலை 5.40 மணிக்கு இடும்பன்கோயில் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த, பள்ளி பேருந்தில் ஏராளமான மாணவர்கள் இருப்பதை கண்டு நிறுத்தினர்.
சோதனையில் 60 மாணவர்கள் ஏற்ற வேண்டிய பேருந்தில், இரு மடங்காக 124 மாணவர்களை ஏற்றி வந்தது தெரிந்தது. பள்ளி பேருந்து மூலமே மாணவர்களை, போக்குவரத்து போலீசார் பாதுகாப்புடன் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பேருந்தை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினர்.
ஓட்டுனர் முத்தையாவை எச்சரிக்கை செய்து, ரூ. 2500 அபராதம் விதித்தனர். மீண்டும் இதுபோல் நடந்ததால் பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் கண்ணன் எச்சரித்தார்.

>>>ஜனவரி 21 [January 21]....

நிகழ்வுகள்

  • 1643 - ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.
  • 1793 - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டான்.
  • 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டில் இருந்து விலகினார்.
  • 1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.
  • 1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.
  • 1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.
  • 1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
  • 1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
  • 1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
  • 2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.
  • 2008 - அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.

பிறப்புகள்

  • 1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000)
  • 1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.

இறப்புகள்

  • 1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)

>>>இன்று ஒரு தகவல் !!! சிந்தனைக்கு .....தென்கச்சி கோ.சுவாமிநாதன்

 
ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

>>>தூதுவளை...

 

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவேளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

பூ இதை உட்கொண்டால் உடல் பெருக்கும் , ஆண்மை பெருகும் வலிவு கிடைக்கும்

காய் காயை உலர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய்கள் தீரும்.அழற்சி தீரும் .வாயு தொந்த்தரவு தீரும்.

பழம் இது மார்பில் இறுகிய சளியை நீக்கும்.இருமல் மூன்று தோஷம் நீக்கும்.பாம்பின் நஞ்சு நீக்கும் .தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

>>>மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஎஸ்......!

 
மொபைல் இயங்குதளம்னா என்ன?

மொபைல் போன்கள் இல்லாதவர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை என்பதுதான் பதில். அனைவராலும் உபயோகப்படுத்தப்படும் இந்த மொபைல் போன்கள், மென்பொருள் மாறும் வன்பொருள்கள் சேர்ந்தவையே!

இதில் மொபைல்களுக்கான இயங்குதளமும் ஒருவகை மென்பொருள்தான். இந்த இயங்குதளம் இல்லாமல் எந்த போனும் இயங்காது. விலை மதிப்பான ஸ்மார்ட்போன்கள்தான் இயங்குதளத்தில் செயல்படுகிறது என நினைக்கவேண்டாம். சாதாரண போன்களும் இயங்குதளத்தின் மூலமே செயல்படும்.

இயங்குதளங்கள் பல்வேறு நிறுவனங்களால் பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படுகின்றன. அவையாவன,
• கூகுள் – ஆன்ட்ராய்டு,
• சாம்சங் – படா,
• மைக்ரோசாப்ட் – விண்டோஸ் போன் ஓஎஸ்,
• ஆப்பிள் – ஐஒஸ்,
மேலும் சிம்பியன், ஜாவா என பல்வேறுவகையான கைபேசியில் பயன்படும் இயங்குதளங்கள் மொபைல் சந்தையில் உள்ளன.

அவற்றில் இன்று நாம் ஆன்ட்ராய்டு 4.1, விண்டோஸ் போன் 8 ஓஎஸ், ஐஒஸ் 6 ஆகியவற்றை ஒப்பீடு செய்யலாம். இதற்கான விரிவான தகவல்கள் ....

================================

முதலில் ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்:

கூகுள் நிறுவனத்தின் அற்புதமான படைப்பாகும்! விபரங்கள் விரிவாக கீழே!

கிடைக்கும் மொத்த அப்ளிகேசன்கள்: 6.0 + லட்சங்கள்,
ஒரே நேரத்தில் மற்றவேலை: அற்புதமாக செய்யும்,
விட்ஜெட்கள்: உண்டு
அதிகப்படுத்தும் நினைவகம்: உண்டு
அதிக தரமான திரை: பயன்படுத்தலாம்,
ஃபைல் மேனேஜர்: உண்டு
ப்ளாஷ் ஃபைல் சப்போர்ட்: உண்டு
இணையமில்லாத மேப்கள்: பார்க்கலாம்.
எதிலிருந்து உருவாக்கப்பட்டது? : லினக்ஸ்,

=================================

அடுத்ததாக ஐஒஸ் 6 இயங்குதளம்:

ஆப்பிள் நிறுவனத்தின் படைப்பாகும்! விபரங்கள் விரிவாக கீழே!

கிடைக்கும் மொத்த அப்ளிகேசன்கள்: 6.5 + லட்சங்கள்,
ஒரே நேரத்தில் மற்றவேலை: செய்யும்! ஆனால் குறைவு.
விட்ஜெட்கள்: இல்லை,
அதிகப்படுத்தும் நினைவகம்: இல்லை,
அதிக தரமான திரை: பயன்படுத்தலாம்,
ஃபைல் மேனேஜர்: இல்லை,
ப்ளாஷ் ஃபைல் சப்போர்ட்: இல்லை,
இணையமில்லாத மேப்கள்: இல்லை. பணம் கொடுத்து பயன்படுத்தலாம்,
எதிலிருந்து உருவாக்கப்பட்டது? : டிராவின் என்றதிலிருந்து,

====================================

கடைசியாக விண்டோஸ் போன் 8 ஓஎஸ்:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான அற்புதமான படைப்பாகும்! விபரங்கள் விரிவாக கீழே!

கிடைக்கும் மொத்த அப்ளிகேசன்கள்: 1 + லட்சம்,
ஒரே நேரத்தில் மற்றவேலை: செய்யும். ஆனால் குறைவுதான்.
விட்ஜெட்கள்: உண்டு
அதிகப்படுத்தும் நினைவகம்: உண்டு
அதிக தரமான திரை: பயன்படுத்தலாம்,
ஃபைல் மேனேஜர்: இல்லை,
ப்ளாஷ் ஃபைல் சப்போர்ட்: அப்படீனா?
இணையமில்லாத மேப்கள்: பார்க்கலாம்.
எதிலிருந்து உருவாக்கப்பட்டது? : விண்டோஸ் NT இயங்குதளம்,

இவற்றில் எந்த இயங்குதளம் மொபைலுக்கு சிறந்தது?

ஆன்ட்ராய்டு 4.1, விண்டோஸ் போன் 8 ஓஎஸ், ஐஒஸ் 6 ஆகியவற்றை ஒப்பீடு செய்தோம். இவற்றில் எந்த இயங்குதளம் சிறந்ததென ஒருநிறுவனம் நடத்திய ஆய்வின் தகவல்கள் பின்வருமாறு,

• நம்பர் 1 – ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம் – சிறந்தது!
• 2 – விண்டோஸ் போன் 8 ஓஎஸ் – நன்று!
• 3 – ஐஒஸ் 6 இயங்குதளம் – சுமார் தான்.

>>>வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் முன்பு கவனிக்கவேண்டியவை...

 
எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்பு தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.

>>>இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..!

 
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.Ed., admission application period Extended

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 1560, நாள்...