கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வயநாடு (கேரளா )...!

 
கேரளாவில் வற்றாத அழகு கொட்டிக் கிடக்கும் மாவட்டம் வயநாடு. இந்த மாவட்டத்தின் முக்கால்வாசி இடம் வனப்பகுதி என்பதால் இங்கு எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேல்தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 700 முதல் 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வயநாடு, தமிழக மற்றும் கர்நாடக மாநில சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் மைசூர் அருகே அமைந்துள்ளது இன்னொரு சிறப்பு. இயற்கை ஆட்சி செய்யும் வனப்பு மிக்க வயநாடுதான்

கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு கடந்த 1980ம் ஆண்டு வயநாடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்கள் முக்கியமானவையாகும். இங்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் நிறைய உள்ளன.

பேகர் வனவிலங்கு சரணாலயம்:
மானந்தவாடி என்ற இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது பேகர் வனவிலங்கு சரணாலயம். இங்கு பலவகையான அரிய விலங்குகளைப் பார்க்கலாம். இதே போல மானந்தவாடியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள நாகர்ஹோல் வனவிலங்கு சரணாலயப் பகுதியிலும் பல வகை விலங்குகளின் நடமாட்டத்தைக் காண முடியும். அரிய வகைத் தாவரங்களும் இங்கு உண்டு. இயற்கை விரும்பிகளுக்கு இவை மறக்க முடியாத இடங்களாகும்.

செம்ப்ரா உச்சி:
கல்பெற்றாவில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது செம்ப்ரா உச்சி என்ற செம்ப்ராமலை முகடு. கடல் மட்டத்தில் இருந்து 2100 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை உச்சிதான் வயநாட்டின் உயரமான மலை உச்சி ஆகும். மலை ஏற்றத்துக்கு சிறந்த இடம்.


கரலாட் லேக்:

கரலாட் ஏரி கல்பெற்றாவில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அழகிய சோலைகளால் அலங்கரிக்கப்பட்ட கரலாட் ஏரியில் படகுச் சவாரி நடத்தப்படுகிறது. இந்த ஏரியில் தூண்டில் போட்டு மீன்பிடித்தும் பொழுது போக்கலாம்.


சிப்பாரா அருவி:
வயநாட்டுக்கு அருவிகளும் அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றன. மேப்பாடிக்கு அருகே உள்ள சிப்பாரா அருவி காண்போரை பரவசப்படுத்துவதோடு ஆச்சரியப்படுத்தவும் வைக்கிறது. 100 அடி முதல் 300 அடி உயரத்தில் இருந்து வரிசைத் தொடராக கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள், கண்களைக் கொள்ளை கொள்ளும். அருவியின் தடாகத்தில் நீந்தி மகிழலாம். இதே போல மேப்பாடிக்கு அருகே வெள்ளரிமலா கிராமத்தில் அமைந்துள்ள சென்டினல் ராக் அருவியும் பிரபலமானது.


மீன்முட்டி அருவி:

சுமார் 300 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருக்கும் மீன்முட்டி அருவி, ஊட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அழகும், ஆர்ப்பரிப்பும் மீன்முட்டி அருவியின் தனிச்சிறப்பு. விண்முட்டி நிற்கும் மீன்முட்டி அருவியின் அழகு, நம்மை கண்கொட்ட விடாமல் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும்.




குருவா தீவு:
இயற்கை விரும்பிகளின் மிதக்கும் சொர்க்கபுரியாகத் திகழும் குருவா தீவு, கபினி ஆற்றையொட்டி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அழகான வனப்பகுதி. அரியவகை பறவைகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. ஆபூர்வ மூலிகைகளும் உள்ளன.
முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்:
சுல்தான் பத்தேரியில் இருந்து 15 கி.மீ தொலைவில் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் போன்றவை இங்கு உள்ளன. வனத்துறையினர் ஆற்றோரமாக யானைச் சவாரியையும் நடத்தி வருகின்றனர்.

இவை தவிர அம்புக்குத்தி மலையடிவாரத்தில் உள்ள முனியறா, வயநாடு ஹெரிடேஜ் மியூசியம், கொட்டமுண்டா கிளாஸ் டெம்பிள், கோரோம் மசூதி, திருநெல்லி கோவில், பழசிராஜா டாம்ப் உள்ளிட்ட பார்க்கத் தகுந்த பல இடங்கள் உள்ளன.
கேம்ப் பயர், மரவீடுகள்:
இது தவிர சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அடர்ந்த காட்டுக்குள் கேம்ப் பயர் நடத்தப்படுகிறது. காட்டுக்குள் கொட்டும் பனிக்கு இதமாக, நெருப்பு முன் அமர்ந்து குளிர் காய்ந்தவாறு அந்தப் பகுதியின் கதை சொல்லி ஒருவர் சொல்லும் சுவாரஸ்யமான கதையைக் கேட்டுக் கொண்டே, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்திற்குள் சென்று தூங்கி, காலையில் மேனியை இதமாகத் தொடும் காலை வெயிலுக்கு ஹாய் சொல்லி எழுவது வித்தியாசமான அனுபவம். காட்டுக்குள் காலாற நடந்து சென்று இயற்கையை ரசிக்கலாம். மரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள மரவீடுகளில் தங்கி இயற்கையுடன் ஒன்றிப் போவதும் புதுமை அனுபவமே. இவை வயநாட்டின் ஸ்பெஷல்.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:
வயநாட்டில் உணவைப் பொறுத்த வரை நாவிற்கு ருசியான நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. போக்குவரத்து வசதிகளை பொறுத்தவரை வயநாட்டுக்கு நல்ல ரோடு வசதிகள் உள்ளன. அருகில் உள்ள கோழிக்கோட்டில் ரயில் நிலையமும், விமான நிலையமும் உள்ளன.

>>>நீர்ப் பாலம்...

 
விந்தை உலகில் அதிசய நீர்ப் பாலம் கட்டுமான துறையில் பல நம்ப முடியாத, அதிசயிக்ககூடிய வகையில் கட்டங்கள் அமைந்திருந்திரும். அந்த வகையில் பலபேரின் கவனத்தை ஈர்ந்துள்ளது இந்த நீர்பாலம். யெ(ஜெ)ர்மனியில் நம்பமுடியாத Magdeburg நீர் பாலம் பற்றி யாரும் அறிந்திருப்பீர்களா?

யெ(ஜெ)ர்மனியில் அமைந்திருக்கும் 12 கிலோமீற்றர் தூரம் உள்ள நீர் பாலம் இதுவாகும். இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப்படுகின்றது. இது கிழக்கு மற்றும் மேற்கு யெ(ஜெ)ர்மனியை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும்.

பொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு. ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்திருப்பதே இதன் சிறப்பாகும்.

1930 ஆண்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட இதன் வேலைகள் மீண்டும் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் 2003ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது....

>>>கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி?

 http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash3/543770_337131939725646_1642286571_n.jpg
உடல் பருமன் : நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்டிரால்ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு கொலஸ்ட்ரால்: கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது

இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே வேறு கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருந்தால் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது கடினமானமாகும். ஏனெனில் பல உணவுகள் இதனை தன்னுள் கொண்டுள்ளன. உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல காரணிகள் உயர் அளவு கொலஸ்டிரால் ஏற்பட பங்களிக்கிறது, ஆனால் சில செயல்கள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

* கொலஸ்டிரால் அளவு உங்கள் உடலில் உள்ள எச்டிஎல் கொலஸ்டிரால் அளவு (நல்ல கொலஸ்டிரால்) மற்றும் எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு (கெட்ட கொலஸ்டிரால்) களை பொறுத்துள்ளது. எல்டிஎல் கொலஸ்டிராலைவிட எச்டிஎல் கொலஸ்டிரால் உடலில் அதிகளவு இருப்பது உடலில் உள்ள சுகாதாரமான கொலஸ்டிரால் அளவை பேண மிக முக்கியமாகும்.

* உடலில் நல்ல கொலஸ்டிராலலின் அளவை அதிகரிக்க, உங்கள் உணவில் எந்த வகையான கொழுப்புகள் உள்ளன என்பதனை கவணியுங்கள், குறிப்பாக ட்ரான்ஸ் பாட் (அன்சாச்சுரேட்டெட் பாட்) டினை தவிர்ப்பது நல்ல வழியாகும்.

* இதய இரத்தநாள பயிர்ச்சிகளை ஒழுங்காக செய்வது, உணவில் குறைந்த அளவு கொலஸ்டிராலினை எடுத்துக்கொள்வது மற்றும் புகைக்காமல் இருப்பது போன்றவை உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேர்வதை அகற்றும் பிறவழிகளாகும்.

கொலஸ்டிரால் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம் :

* வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.

* கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

* பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.

* ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.

* தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.

* எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

* அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது. * முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.

* அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.

* கொட்டை வகைகள்:
முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.

* வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது

* பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.

* ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் * எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.

* கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.

* டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.

* பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.

* வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.

* உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.

* இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். * நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.

* ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.

* வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது நல்லது

நாம் சாப்பிடும் உணவு வகையில் கொலஸ்டிராலின் அளவு :

* முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)

* வெண்ணெய் -250 (mg /100gm)

* சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)

* இறால் (Shrimp)-170 (mg /100gm)

* மாட்டு இறைச்சி -75 (mg /100gm)

* ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)

* கோழியிறைச்சி-62 (mg /100gm)

* பனீர் (cottage cheese)-15 (mg /100gm)

* ஐஸ் கிரீம்-45 (mg /100gm)

* நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)

* கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)

* பிரெட்-1 (mg /100gm)

* ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)

* சாக்லேட் பால்-90 (mg /100gm)

நாமும் இதைப்பின்பற்றினால் கொலஸ்டிரால் இல்லாத மனிதனாக வாழ முயற்சிக்கலாமே....

>>>சுட்டி மேதை பிரணவ்!

 
தொழில்நுட்ப உலகில் மிகவும் கடினமானதாகக் கருதப்படும் மைக்ரோசாஃப்ட் சர்ட்டிஃபைடு டெக்னாலஜி ஸ்பெஷலிஸ்ட் (Microsoft Certified Technology Specialist - MCTS) தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்து இருக்கிறார், ஒன்பது வயது பிரணவ்.

உலகின் இளம் மைக்ரோசாஃப்ட் வல்லுநர் என்ற பெருமையுடன் வலம் வரும் இவரது பூர்வீகம் தமிழ்நாடு. தந்தை கல்யாண்குமார், மதுரை பாலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார்.

மூன்று வயதில் கம்ப்யூட்டரில் புகுந்து விளையாடத் தொடங்கிய பிரணவ், தன் தந்தையின் உதவியுடன் தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். மைக்கோராசாஃப்ட் அளித்த அங்கீகாரத்தின் பலனாக, இணையக் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா, 'கணினி அறிவியல்’ துறை, சுட்டி மேதைகள் (Child Prodigies)பட்டியலில் இவரை இணைத்துக் கௌரவப்படுத்தி உள்ளது.

>>>இன்று - பிப்.2 : உலக சதுப்பு நில தினம்!

 
ஈர நிலங்கள் என்கிற பட்டியலில் எதுவெல்லாம் வரும் எனப் பார்த்தாலே அவற்றின் பாதுகாக்க வேண்டியதன் அருமை உங்களுக்கு புரியக்கூடும்.

ஆறுகள், தாழ்நிலங்கள், ஈரமான புல்வெளிகள், கழிமுகங்கள், கழிமுக, கடலோர குடியிருப்பு பகுதிகள், சதுப்புநிலக்காடுகள், பவளத் திட்டுகள், மீன் குளங்கள், நெற்பயிர் நிலங்கள், நீர்த் தேக்கங்கள்....

உலகம் முழுக்க மனிதனின் தொடர் செயல்களால் இவை மிகப்பெரிய அழிவை சந்திக்கின்றன. சுற்றுலா தலங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில்கள் ஆகியனவும் இத்தகைய நிலங்களை அழிக்கின்றன.

பல்லுயிரி வளம், நிலத்தடி நீர் வளம், நீரை வடிகட்டி நன்னீர் ஆக்குதல், உணவுச்சங்கிலியின் உறுதியான பிணைப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் இவற்றின் அழிவு மேற்சொன்ன எல்லாவற்றையும் காணாமல் செய்கிறது.

சுனாமி நம் நாட்டை தாக்கியபொழுது சதுப்பு நிலக் காடுகள் அதன் தாக்கத்தை பெருமளவில் குறைத்தது ஞாபகம் இருக்கலாம். வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதும் இடம் சார் காலநிலை, நுண்காலநிலை என ஒழுங்காக மழை, வெயில் ஆகியன அதனதன் காலங்களில் உண்டாவதையும் உறுதி செய்கிற வேலையையும் இவைதான் செய்து வந்திருக்கின்றன.

கடந்த 1971களில் ஈரானின் ரம்சார் நகரில் நாடுகள் பல சேர்ந்து சதுப்பு நிலப் பாதுகாப்பிற்கு கையெழுத்திட்டன. சதுப்பு நிலங்களை அடையாளப்படுத்தல், அதன் முக்கியத்துவத்தினை உணர்த்துவது, தேசிய சர்வதேச ரீதியில் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கங்களாக கொண்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 2 ஆம் நாள் உலக சதுப்பு நில தினமாக கொண்டாடப்படுகிறது.

சதுப்பு நிலங்களை அழிவில் இருந்து காக்க, கொஞ்சம் ஈர நெஞ்சோடு உறுதிபூணுவோம்!

>>>பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் 10 கட்டளைகள்!

 
* எதைப்பற்றியும் தீர்மானமான முடிவெடுத்துக்கொண்டு செயலாற்றாதே.

* உண்மையை மறைத்து காரியங்களை சாதிக்காதே; ஒரு நாள் உண்மை வெளிப்பட்டு கட்டாயம் மாட்டிக்கொள்வாய்.

* உன்னால் ஜெயிக்க முடியும் என்கிற எண்ணத்தில் உறுதியாக இரு; சந்தேகம் என்பதையே மறந்துவிடு.

* யாருடைய அடக்குமுறையை கண்டும் அஞ்சாதே; எல்லா அடக்குமுறைக்கும் மாற்று இருந்தே தீரும். ஆகவே அடக்குமுறைகளை முழுமையாகவே புறக்கணி.

* உன்னை எதிர்ப்பது யாராக... ஏன் உன் குடும்பத்து உறுப்பினராக இருந்தாலும் அவர்களிடம் உன் அதிகாரத்தைப் பயன்படுத்தாதே, விவாதத்தால்தான் ஜெயிக்க வேண்டும். ஏனெனில், அதிகாரத்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய வெற்றி ஒரு மாயை, அது பொய்யானதும்கூட.

* நாசகர சிந்தனைகளை அதிகாரத்தை கொண்டு கட்டுப்படுத்த முயலாதே 'அவை அவற்றை மிஞ்சியும் தன் வேலையை காட்டும்.

* கிறுக்குத்தனம் என உன் சிந்தனைகளை பிறர் ஒதுக்கினால் கவலைப்படாதே; இன்றைய தலைசிறந்த சிந்தனைகள் என கொண்டாடப்படுபவையும் ஒரு காலத்தில் அவ்வாறே அழைக்கப்பட்டன.

* அமைதியாக ஒத்துப்போவதைவிட அறிவார்ந்த வாக்குவாதங்களில் மகிழ்ச்சி காண வேண்டும். பிறர் அறிவை நீ சரியாக மதிக்கிறபொழுது ஆழமான புரிதல் உண்டாகும்

* நெஞ்சில் பட்ட உண்மையை நேர்பட பேசு; அது கசப்பாக இருந்தாலும் அதை மறைத்தல் அதை விட துன்பகரமானது.

* முட்டாள்கள் சந்தோசம் இங்கே எனக்கொண்டாடும் மலிவான விஷயங்களை பார்த்து பொறாமைப்படாதே. அவர்கள் தான் அவற்றை இன்பம் தருபவை என்பார்கள்.

பழைமையோடு கூடிய தாராள நோக்கைப் பெற ஒரு கல்வியாளராக இந் 10 கட்டளைகள் தந்தவர், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.

இவர் ஓர் இணையற்ற சிந்தனையாளர், தத்துவஞானி மறைந்த தினம் இது. இவரின் தாத்தா இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர்; மனிதர் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தார். தனிமை வாட்டியது. பலமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அப்பொழுது அவரை யூக்ளிட் எழுதிய வடிவியல் பற்றிய நூலும், ஷெல்லியின் கவிதைகளும் கட்டிப்போட்டு மரணத்தில் இருந்து காத்தன.

கணிதத்தை தர்க்கத்தின் மூலம் கற்க முடியும் என இவர் எழுதிய நூல்கள் உலகப்புகழ் பெற்றன. கணித தத்துவவியல் எனும் இவரின் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்தது. போருக்கு எதிராக உலகப்போர் சமயத்தில் குரல் கொடுத்து விரிவுரையாளராக இருந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அணு ஆயுத போட்டியை தொடர்ந்து விமர்சித்தார். ஹிட்லர், ஸ்டாலின் இருவரின் சர்வதிகார போக்கையும் விமர்சித்த இவர், அமெரிக்கா வியட்நாம் மீது போர் தொடுத்த பொழுது அதையும் எதிர்த்தார்.

நாத்திகவாதியான இவர் மதத்தின் மீது கூர்மையான விமர்சனங்களை வைத்தார். இவரின் மேற்குலகின் தத்துவ வரலாறு நூல் பலபேரால் விரும்பி படிக்கப்பட்டது. இவரை ஒரு முறை விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்தபொழுது ஏதேனும் விலை உயர்ந்த பொருள்கள் இருக்கிறதா எனக்கேட்க, மிக விலையுயர்ந்த அறிவு உள்ளது என்னிடம் !" என்றார் கம்பீரமாக.

* இன்று - பிப்.2: பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் நினைவு தினம்.

>>>தனிம அட்டவணையின் தந்தை! மென்டலீவ்...

 
மென்டலீவ்... மாபெரும் வேதியியலாளர். தனிம அட்டவணையை உருவாக்கியவர் இவரே. ரஷ்யாவில் பிறந்த இவர் அப்பா கண்பார்வை இழந்து வேலையை இழந்ததால் வறுமைக்கு தள்ளப்பட்டார்; அம்மா நடத்திய கண்ணாடி தொழிற்சாலை தீவிபத்தில் சிக்கி, அப்பா இறந்து போன சூழலில் தானே வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என உணர்ந்தார் இவர். நடுவில் காசநோய் தாக்க மீண்டும் போராடி மீண்டார்.

வேதியியலில் ஆர்வம் உண்டானது. ஆல்கஹாலில் நீரை சேர்ப்பதை பற்றி ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றார். அவர் பணியாற்றிய பீட்டர்ஸ்பர்க் பல்கலையை உலகத்தர வேதியியல் அமைப்பாக தன் உழைப்பால் கட்டமைத்தார். மென்டலீவை ஒரு விஷயம் நெடுநாட்களாக மண்டையை போட்டு குழப்பிக்கொண்டு இருந்தது. வெவ்வேறு தனிமங்களை எப்படி வகைப்படுத்துவது என்பதே அந்த கேள்வி; அதற்கு முன் நியூலாண்ட் எனும் அறிஞர் அணு எடையை கொண்டு தனிமங்களை வகைப்படுத்தி இருந்தார்;

அதற்கு பிறகு லோதர் மேயர் என்பவர் இணைவுத்திறனை கொண்டு கண்டுபிடிக்கபட்ட 53 தனிமங்களில் 28--ஐ வகைப்படுத்தி இருந்தார். இதுவெல்லாம் அவ்வளவாக தகவல் தொடர்பில்லாத காலம் என்பதால் இவருக்கு தெரியாது; பாணினி எனும் சம்ஸ்க்ருத இலக்கண வல்லுனரின் நூல் மீது பெரிய, மரியாதை இருந்ததாம். சொற்களின் ஒலிப்பு எப்படி உச்சரிப்புக்கு ஏற்ப மாறுபடுகிறது என விதிகளின் மூலம் பாணினி கட்டமைத்தது போல ஒரு விதியின் மூலம் தனிமங்களை அட்டவணைப்படுத்த முடியும் என மென்டலீவ் நம்பினார்.

ஒரு நாள் தூங்கிக்கொண்டு இருந்த பொழுது ஒரு கனவு கண்டார். அதில் மேலே எண்ணிடப்பட்ட பந்துகள் ஒரு அட்டவணையில் வீழ்வது போல காட்சிகள் ஓடின. அப்படியே எழுந்து ஓடியவர் தனிமங்களை அவற்றின் அணு எடையை கொண்டு வகைப்படுத்தினார் -கச்சிதமாக வந்தது. சில இடங்களில் தனிமங்கள் இல்லாமல் இருப்பதை கண்டார். அவை இன்னும் கண்டுபிடிக்கபடாத தனிமங்கள் என சொல்லி அவற்றின் வேதி பண்புகளை துல்லியமாக கணித்தார். அவையே பின் ஜெர்மனியம், ஸ்காண்டியம், காலியம் ஆகிய தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது அவர் சொன்ன பண்புகள் அப்படியே பொருந்தின. அந்த தனிமங்களுக்கு அவர் பாணினிக்கு மரியாதை செலுத்தும் விதமாக சம்ஸ்க்ருத சொற்களை முன்பெயராக வைத்தார்.

இவர் நாட்டின் வோட்காவில் உள்ள நீரின் அளவை இவரே மாற்றியமைத்தார்; கூடவே அவர் நாட்டின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். பெட்ரோல் உலகின் முக்கியமான எரிபொருள் ஆகும் என 19 ஆம் நூற்றாண்டிலேயே சொன்னவர் இவர், தனிம அட்டவணையின் தந்தையான இவரின் நினைவு நாள் இன்று (பிப்.2).

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

At the Block education office, the teachers are on a sit-in

வட்டாரக் கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் At the Block education office, the teachers are on a sit-in  கோவை: மதுகரை வட்...