கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிப்ரவரி 12 [February 12]....

நிகழ்வுகள்

  • 55 - ரோமின் முடிக்குரிய இளவரசன் டிபேரியஸ் கிளோடியஸ் சீசர் பிரிட்டானிக்கஸ் மர்மமான முறையில் இறந்தான். இவனது மரணம் நீரோ மன்னனாக வர வாய்ப்பளித்தது.
  • 1502 - இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.
  • 1733 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா ஆங்கிலக் குடியேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.
  • 1771 - சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான்.
  • 1818 - சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1832 - கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது.
  • 1832 – லண்டனில் காலரா பரவியதில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1873 - எமிலியோ காஸ்டெல்லார் ஸ்பெயினின் புதிய குடியரசின் பிரதமராக ஆனார்.
  • 1912 - சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான்.
  • 1912 - சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.
  • 1927 - முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.
  • 1934 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.
  • 1961 - வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.
  • 2001 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
  • 2002 - யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபடான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின.
  • 2002 - ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1809 - சார்ள்ஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் (இ. 1882)
  • 1809 - ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் 16வது அதிபர் (இ. 1865)
  • 1918 - ஜூலீயன் ஷ்விங்கர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1994)

இறப்புகள்

  • 1804 - இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த மெய்யியலாளர், (பி. 1724)
  • 1908 - ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820)

சிறப்பு நாள்

  • டார்வின் நாள்

>>>பிப்ரவரி 11 [February 11]....

நிகழ்வுகள்

  • கிமு 660 - ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.
  • 55 - ரோமப் பேரரசின் முடிக்குரிய பிரிட்டானிக்கஸ் ரோம் நகரில் மர்மமான முறையில் இறந்தான். நீரோ பேரரசனாவதற்கு இது வழி வகுத்தது.
  • 1531 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் இங்கிலாந்துத் திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
  • 1659 - சுவீடன் படைகளின் கோப்பன்ஹேகன் நகரத் தாக்குதல் பலத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது.
  • 1752 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.
  • 1809 - ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1814 - நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
  • 1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.
  • 1873 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது.
  • 1919 - பிரீட்ரிக் எபேர்ட் ஜெர்மனியின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.
  • 1929 - இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக வத்திக்கான் நகர் உருவானது.
  • 1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பூக்கிட் டீமா என்ற இடத்தில் நேச நாடுகள் அணிக்கும் ஜப்பானுக்கும் இடையில் சமர் நிகழ்ந்தது.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: யால்ட்டா உச்சி மாநாடு முடிவடைந்தது.
  • 1953 - சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
  • 1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
  • 1964 - சைப்பிரசில் கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் லிமசோல் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.
  • 1964 - சீனக் குடியரசு (தாய்வான்) பிரான்சுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
  • 1968 - இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது.
  • 1971 - ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன.
  • 1973 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கைதிகளின் முதலாவது தொகுதியை விடுவிக்கும் நிகழ்வு வியட்நாமில் இடம்பெற்றது.
  • 1979 - அயதொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது.
  • 1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.
  • 1996 - இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
  • 1997 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • 2005 - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
  • 2008 - கிழக்குத் திமோரின் அதிபர் ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

பிறப்புகள்

  • 1847 - தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931)
  • 1917 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
  • 1964 - சேரா பேலின், அலாஸ்கா மாநில ஆளுனர்

இறப்புகள்

  • 1650 - ரேனே டெஸ்கார்ட்டஸ், தத்துவ ஞானி, கணித மேதை (பி. 1596)
  • 1713 - ஜகாந்தர் ஷா, முகலாய அரசன் (பி. 1664)
  • 1946 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860)
  • 1948 - செர்கீ ஐசென்ஸ்டைன், ரஷ்யத் திரைப்பட இயக்குனர் (பி. 1898)
  • 1973 - ஹான்ஸ் ஜென்சன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (பி. 1907)
  • 1978 - ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1904)
  • 1991 - ரொபேர்ட் ஹோலி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1922)

சிறப்பு நாள்

  • ஜப்பான் - நிறுவன நாள்
  • ஈரான் - இஸ்லாமியப் புரட்சி நாள் (1974)
  • கமரூன் - இளைஞர் நாள்
  • ஐக்கிய அமெரிக்கா - கண்டுபிடிப்பாளர் நாள்
  • பொஸ்னியா - விடுதலை நாள்
  • வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922)

>>>Google Mapathon 2013 - பரிசுகளை வெல்லுங்கள்!

 
கூகிள் இந்தியா நிறுவனம் Mapathon 2013 என்னும் போட்டியை அறிவித்துள்ளது. இந்தியாவில் உங்களுக்கு தெரிந்த இடங்களை கூகுள் மேப்பில் சேர்ப்பது தான் போட்டி. 
போட்டியில் கலந்து என்ன கொள்ள செய்ய வேண்டும்?
Google Map Maker என்பது கூகுள் மேப்பில் இடங்களை சேர்ப்பதற்கு பயன்படும் வசதியாகும். இதன் மூலம் இந்தியாவில் உங்களுக்கு தெரிந்த மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தீயணைப்பு துறை அலுவலகம், கடைகள், சாப்பாட்டு விடுதி போன்ற இடங்களை கூடுதல் தகவல்களுடன் இணைக்க வேண்டும்.

அப்படி நீங்கள் இணைக்கும் இடங்கள் சரிபார்க்கப்பட்டு பிறகு கூகுள் மேப்பில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படும். கூகுள் மேப்பில் சரிபார்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


பரிசுகள்:

வெற்றி பெறுபவர்களுக்கு Samsung Galaxy Note 800 ஆண்ட்ராய்ட் டேப்லட், Samsung Galaxy S II GT I9100 ஆண்ட்ராய்ட் போன்கள் போன்ற பரிசுகளையும் தருகிறது.


Samsung Galaxy Note 800 Android Tablets - 10 நபர்களுக்கு

Samsung Galaxy S II GT I9100 Android Phones - 40 நபர்களுக்கு
5000 ரூபாய் மதிப்புள்ள Flipkart gift coupons - 50 நபர்களுக்கு
Google Mapathon 2013 t-shirts and certificates - 1000 நபர்களுக்கு (மேலே உள்ள நூறு பேர்களை சேர்த்து)

இந்த போட்டி வரும் Feb 11 முதல் Mar 25 வரை நடக்கும். இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும்.


இணையத்தில் உள்ள விவரங்களைப் பார்த்து இடங்களை சேர்க்க கூடாது.


போட்டியில் கலந்துக் கொள்ள:
http://g.co/mapindia2013

>>>பிப்ரவரி 10 [February 10]....

நிகழ்வுகள்

  • 1355 - இங்கிலாந்து, ஒக்ஸ்போர்டில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
  • 1763 - பிரான்ஸ் கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு அளித்தது.
  • 1798 - லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் ரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தான்.
  • 1815 - கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
  • 1846 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.
  • 1863 - அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.
  • 1870 - கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) அமைக்கப்பட்டது (நியூயோர்க் நகரம்).
  • 1897 - மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
  • 1914 - யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக சார்ள்ஸ் கம்பர்லாண்ட் நியமிக்கப்பட்டார்.
  • 1931 - புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
  • 1954 - வியட்நாம் போர்: அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.
  • 1964 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் HMAS மெல்பேர்ன் என்ற விமானந்தாங்கிக் கப்பலும் HMAS வொயேஜர் என்ற காடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.
  • 1991 - வன்னி மீதான இலங்கை இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
  • 1996 - சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.

பிறப்புகள்

  • 1887 - ஜோன் என்டேர்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1985)
  • 1890 - போரிஸ் பாஸ்டர்நாக், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1960)
  • 1902 - வால்ட்டர் பிராட்டன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1987)
  • 1910 - ஜோர்ஜஸ் பயர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1969)

இறப்புகள்

  • 1837 - அலெக்சான்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (பி. 1799)
  • 1912 - ஜோசப் லிஸ்டர், பிரித்தானிய அறிவியலாளர் (பி. 1827)
  • 1918 - ஏர்னெஸ்டோ மொனெட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (பி. 1833)
  • 1923 - வில்ஹெம் ரொண்ட்ஜென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1845)

>>>தனுஷ்கோடி புயல்....

 
1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது.

தனுஷ்கோடியில் அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம்புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே. தனுஷ்கோடியைப் புதுப்பிக்க அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது. தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது.

மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், பேய் மழையுடன் புயல் வீசியது. ராமேசுவரத்தில், புயலின் வேகம் கடுமையாக இருந்தது . புயல் காரணமாக, கடலில் அலை பயங்கரமாக இருந்தது. தென்னை மர உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்து கரையில் மோதின திடீர் என்று கடல் பொங்கி, ராமேசுவரம் தீவில் உள்ள தனுஷ்கோடிக்குள் புகுந்தது. தனுஷ்கோடி அடியோடு அழிந்து,
கடலில் மூழ்கி விட்டதால்,

தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் என்ற இடத்தையும் , ராமேசுவரம் தீவையும் இணைப்பது "பாம்பன் பாலம்." இது கடலில் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது, இந்தப்பாலம் இரண்டாகப் பிரிந்து, கப்பலுக்கு வழிவிடும். இந்த பாலம், பலத்த சேதம் அடைந்தது. புயல் வீசுவதற்கு முன், ராமேசுவரத்தில் இருந்து, தனுஷ்கோடிக்கு ஒரு ரெயில் புறப்பட்டுச் சென்றது . தனுஷ்கோடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது , பலத்த மழையுடன் சூறாவளி வீசியது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. எனினும் சற்று நேரத்தில் கடல் பொங்கி, தனுஷ்கோடியை விழுங்கிய போது, ரெயிலும் கடலில் மூழ்கியது. ரெயிலில் 115 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அவ்வளவு பேரும் கடலில் மூழ்கி பலியாகி விட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவர்கள், ராமேசுவரத்துக்கு உல்லாசப் பயணம் வந்திருந்தனர் . கடலில் மூழ்கிய ரெயிலில் அவர்கள் பயணம் செய்தனர் என்ற தகவல் பின்னர் தெரியவந்தது . அந்த 40 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டார்கள். தனுஷ்கோடியில் இருந்த பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகளும், கட்டிடங்களும் கடலுக்குள் மூழ்கிவிட்டன . தந்தி, டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால், ராமேசுவரம் தீவுக்கும், வெளி உலகத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன . இதனால் சேதத்தின் முழு விவரங்களும் உடனடியாக சென்னைக்குத் தெரியவில்லை .

கடலுக்குள் மூழ்கி பலியாகாமல் உயிர் தப்பியவர்கள் , மணல் திட்டுகளில் தவித்தனர். அவர்களைக் காப்பாற்ற கப்பல்கள், மோட்டார் படகுகள், "ஹெலிகாப்டர்" விமானங்கள் அனுப்பப்பட்டன. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிக்கு முன்பு ரெயில் மூலம்தான் குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது. புயல்_மழை வீசியதைத் தொடர்ந்து அங்கு குடிநீரே இல்லாமல் போய்விட்டது . உயிர் தப்பியவர்கள், குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்தனர். அவர்களுக்காக ஹெலிகாப்டர் விமானத்தில் தண்ணீர் அனுப்பப்பட்டது . விமானத்தில் இருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன . உயிர் பிழைத்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மதுரையில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்தும் ராமேசுவரத்துக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டனர் .

அதன் தொடர்பான கட்டுரையை கீழே படிக்கவும்.

தனுஷ்கோடி - டிசம்பர் 23,1964 தமிழக மக்களால் மறக்க முடியாத தினங்கள் பல. அதில் ஒன்று தனுஷ்கோடியை கடல் தின்ற தினம்.

தமிழக கடலோரப் பகுதிகளை 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப் பேரலை புரட்டிப் போட்டு விட்டுப் போனதற்கு முன்பே, தனுஷ்கோடியை அந்த சுனாமி விகாரமாக்கி விட்டுச் சென்ற தினம்தான் டிசம்பர் 23,1964. அழகிய தனுஷ்கோடியை சின்னாபின்னமாக்கி, அலங்கோலப்படுத்தி விட்டுப் போனது.

மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர்.

அன்றெல்லாம் சுனாமி என்றால் என்ன என்றே அக்காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நமது காலத்தில் நம்மைத் தாக்கிய சுனாமியைப் போன்ற ஆழிப் பேரலைதான் அன்றைய தனுஷ்கோடியையும் அலைக்கழித்துள்ளது.

இந்த அலை 20 அடி உயரத்துக்கு ராட்சத அளவில் எழும்பி வந்தது. ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் தனுஷ்கோடி நகரம் இருந்தது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட அழகிய மீனவ நகரம்.

அப்போது அதிகாலை 3 மணி இருக்கும். மீனவ மக்களும், பிறரும் நிம்மதியாக கண்ணயர்ந்திருந்த நேரம் அது. ஆனால் கடல் மட்டும் காட்டுத்தனமாக விழித்துக் கொண்டிருந்தது.

பொங்கி வந்த கடல் வெள்ளமும், திரண்டு வந்த ஆழிப் பேரலைகளும், தனுஷ்கோடிக்குள் புகுந்து, புரட்டிப் போட்டது. நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.நகரிலிருந்த முக்கால்வாசிப் பேர் முகவரி தெரியாமல் கடல் அன்னையின் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்தனர்.

எனவே இலங்கை செல்ல ஏராளமான பயணிகள் அதில் இருந்தனர். தனுஷ்கோடியைத் தாக்கிய புயலுக்கும், ஆழிப் பேரலைக்கும் இந்த ரயிலும் தப்பவில்லை. அப்படியே கடலுக்குள் இழுத்துப் போட்டு விட்டது போட் மெயிலை, கடலில் எழுந்து வந்த ஆழிப் பேரலை.
அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் 2000 பேர் உயிரிழந்தனர்.

அழகிய தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே.

தனுஷ்கோடியைப் புதுப்பிக்க நமது அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது.

தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது - கடந்த காலத்தில் தாங்கள் 'தடம் புரண்ட' கதையை சொல்லியபடி.

ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், ஒரு எட்டு தனுஷ்கோடிக்கும் சென்று வருவது வழக்கம். இப்படி வந்து செல்பவர்களால்தான் இன்னும் தனுஷ்கோடி நமது மன 'டைரி'யிலிருந்து அழியாத காவியமாக உள்ளது

>>>வேர்க்கடலை.....

 
உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும்.வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது.

சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில்தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.இதனால்தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்திஜி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்திபெற வேர்கடலையும் ஆட்டுப்பாலும் சாப்பிட்டு வந்தார்.எல்லாவிதமான இரத்தப்போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்கடலையாகும்.

பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சோக்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும்.வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது.படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள், உணவு ஆய்வாளர்கள். வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிஸன், அல்ஸமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.

மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு. வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

இதில் புரதம் அதிகம். வேர்க்கடலையில் மேல் இருக்கும் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை நீக்காமல் சாப்பிடுவது அவசியம்.நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்ஸ்’ என்பார்கள். இது வேர்க்கடலையில் மிகவும் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள பிங்க் கலர் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன. ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.

இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா ?

ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.வேர்க்கடலையைச்சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

>>>மச்சு பிக்ச்சு....


நாம் அனைவரும் இந்த இடத்தை எந்திரன் படத்தில் பார்த்து இருப்போம் . அதனுடைய வரலாற்று சிறப்பை பற்றிய சில தகவல்கள் .

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும். இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.

இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.

1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் ஆரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.

மச்சு பிக்ச்சு இன்கா காலத்தைய கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பளபளபாக்கப்பட்ட சுவர்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள "இன்டிகுவாட்டானா" என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோயில் இதன் முக்கிய பகுதியாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதனைக் கண்டுபிடித்த ஹிராம் பிங்கம் தன்னுடன் எடுத்துச் சென்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இந்நகருக்கு மீளக் கொண்டு வர பெரு அரசுக்கும் யேல் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் 2007ம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் பெருமளவு உல்லாசப் பயணிகள் இங்கு முற்றுகை இடுவதும் இக்களத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 2003ம் ஆண்டில் மட்டும் 400,000 உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்திருந்தனர்.

மச்சி பிக்ச்சு நகரம் 1450 ஆம் ஆண்டளவில் இன்கா பேரரசின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது அமைக்கப்பட்டது. 100 ஆண்டுகளின் பின்னர் 1572 ஆம் ஆண்டில் எசுப்பானியர்களின் ஆக்கிரமப்பைத் தொடர்ந்து இந்நகரம் கைவிடப்பட்டது. எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரேயே இந்நகரத்தின் மக்கள் இங்கு பரவிய பெரியம்மை நோய் காரணமாக அழிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு. பிக்ச்சோ என்ற பெயருள்ள ஒரு நகரைப் பற்றி எசுப்பானியர்கள் அறிந்திருந்தார்கள் என்றாலும், அவர்கள் அந்நகருக்கு சென்றார்கள் என்பது குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் வேறு இடங்களில் உள்ள புராதன கற்பாறைகளை அழித்திருந்தனர் என்றாலும், மச்சு பிக்ச்சுவில் உள்ளவற்றை அவர்கள் தொடவில்லை.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...