கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>'எரிநட்சத்திரம்'

 
ரஷ்யாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு எரிநட்சத்திரம் பெரிய பீதியை ஏற்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

ரஷ்ய விஞ்ஞானிகள் 'இத்தனை மணிக்கு விழும் எனக் கணித்த நேரத்துக்கு முன்னமே விழுந்து விட்டது. யூரல் மலைப் பகுதியில் உள்ள செல்யபின்ஸ்க் என்ற இடத்தில் இந்த எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.

அந்த நிகழ்வின்போது நிலநடுக்கத்தை போன்ற அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றது. பூமியை நோக்கி மிகவேகமாக பாய்ந்து வந்து பயங்கர வெடிச் சத்தத்தோடு வெடித்துள்ள இந்த எரிநட்சத்திரம் ஏற்படுத்திய அதிர்வலைகள் பல கட்டடங்களின் கண்ணாடியை நொறுக்கியது; மேற்கூரைகளும் இடிந்துள்ளன.

எரி நட்சத்திரங்கள் அளவில் சிறியவை; இவை இங்கேதான் விழும், எவ்வளவு நேரத்தில் விழும் என சொல்வது பலசமயங்களில் நடக்காமலே போய்விடும். ஒரு எரிநட்சத்திரம் இன்று இரவு பூமியை அடையும் என்றும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிட்டு இருந்தார்கள் வானியல் வல்லுனர்கள். அதற்கு முன்னாடியே வந்து, 'உள்ளேன் அய்யா' சொல்லி இருக்கிறது இந்த எரிநட்சத்திரம். அதேசமயம், ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றிருக்கிறது நாசா.

ரஷ்யாவில் விண்ணில் இருந்து விழுந்த எரிநட்சத்திரத்தால் உண்டான சிதறல்களால் 3,000 கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1000 பேருக்கு மேலானோர் காயம் அடைந்துள்ளனர். அந்த ரணகளத்திலும் எரிநட்சத்திரம் விழுவதை பலபேர் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள். அவை யூடியூபில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

எது எரிநட்சத்திரம்..?

அணுவை விட அளவில் பெரிதாக, விண்கல்லை விட அளவில் சிறிதாக இருக்கும் பிரிவு வான்வெளி பிள்ளைதான் எரி நட்சத்திரம். விண் எரிகல் என்றும் இதைச் சொல்லலாம். METEOR என ஆங்கிலத்தில் குறிக்கப்படும் இந்த எரிநட்சத்திரம், கிரேக்க மொழியில் காற்றில் மிதக்கும் திடப்பொருள் என்று அர்த்தம் மீசோஸ்பியர் எனும் பகுதியில் இருந்து வரும். இவை கூழாங்கல் அளவில்கூட இருக்கும்; இவை பூமியை நோக்கி வரும்பொழுது, RAM அழுத்தம் எனும் பாய்ம ஊடகத்தில் ஏற்படும் இழுவிசையால் எரிந்து ஆவியாகி எரிந்து விழுகிறது. இவை அவற்றில் இருக்கும் தனிமங்களை பொறுத்து பல கலரில் தோன்றும் சோடியம் (ஆரஞ்சு) இரும்பு (மஞ்சள்) சிவப்பு (சிலிகேட்). சில சமயம் ஷவரில் நீர் கொட்டுவது போல பல ஏறி நட்சத்திரங்கள் ஒரே சமயத்தில் விழும்.

>>>பெப்ரவரி 16 [February 16]....

நிகழ்வுகள்

  • 1568 - நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
  • 1646 - இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
  • 1796 - ஆங்கிலேயர் கொழும்பை டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.
  • 1838 - தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடாத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1918 - லித்துவேனியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1934 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1937 - வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படைகள் பிலிப்பீன்சின் கொரெகிடோர் தீவில் தரையிறங்கினர்.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: முதல் தடவையாக அமெரிக்கப் போர் விமானம் டோக்கியோவைத் தாக்கியது.
  • 1945 - அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.
  • 1947 - 80 ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.
  • 1959 - ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.
  • 1961 - எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • 1983 - ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 71 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1985 - ஹெஸ்புல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1986 - சோவியத் கப்பல் மிகைல் லெர்மொண்டொவ் நியூசிலாந்தில் மூழ்கியது.
  • 1988 - சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
  • 2005 - கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
  • 2007: 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

இறப்புகள்

  • 1907 - ஜியோசு கார்டூச்சி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1835)
  • 1932 - பெர்டினண்ட் புயிசோன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1841)
  • 1944 - தாதாசாஹெப் பால்கே, இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடி (பி. 1870)
  • 1954 - டி. கே. சிதம்பரநாதன், இரசிகமணி

சிறப்பு நாள்

  • லித்துவேனியா - விடுதலை நாள் (1918)

>>>காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

>>>தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ளால் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!!

நன்றி

>>>மதுரை திருமலை நாயக்கர் மகால்

 
17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால். உள்ளே செல்லும்போது நீங்கள் 3700 Sq mtr பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பை காண முடியும். அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலை தூக்கி நிறுத்துகின்றன. தற்போது அந்த இடம் பூங்காவாக மாறியுள்ளது.

இந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் மற்றொன்று ரங்க விலாசம். இதில் சொர்க்க விலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது. அனைத்து கட்டிடங்களும் இந்த இரண்டு பகுதிகளுக்குள் அடங்கிவிடும். மஹாலின் சிறப்பம்சமே அங்கு இருக்கும் பிரமாண்ட தூண்கள். பல தூண்களை நீங்கள் என்ன நினைத்தாலும் கட்டிப்பிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய தூண்கள்.

இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது. மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றொன்றும் 58 அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்டது. தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் இந்த மஹால் இயங்குகிறது. தினமும் கண்கவர் ஒளி மற்றும் ஒலிக் காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. முக்கியமாக சிலப்பதிகாரத்தை பற்றி இந்த காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த மஹாலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள மஹாலுக்கே
வாய்ப்பு சென்று பார்க்கலாம் கிடைத்தால் சென்று பார்க்கலாம்

>>>பிரகாஷ் ராவ்

 
ஒடிசாவில் டீக்கடைக்காரர் ஒருவர் சுமார் 60 ஏழை குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் கல்வி அளித்து வருகிறார் !!!

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராவ். அங்குள்ள சேரிப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பிரகாஷ், அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால் படிப்பை கைவிட்டு விட்டார்.

தற்போது டீக்கடை நடத்தி வரும் அவருக்கு படிப்பின் அருமை நன்றாக தெரியும். அவர் டீக்கடை வைத்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். அன்றன்றைக்கு தொழிலுக்குச் சென்றால் தான் அவர்களுக்கு வருமானம்.

இதனால் அவர்களின் குழந்தைகள் படிக்க வசதியின்றி, தெருக்களில் சுற்றித்திரிவதைக் கண்டு வேதனையடைந்த பிரகாஷ், அவர்கள் படிப்பதற்காக சிறு பள்ளி ஒன்றை அமைத்துள்ளார். அதில் தற்போது 3ம் வகுப்பு வரை கல்வியளிக்கப்பட்டு வருகிறது. 3ம் வகுப்புக்கு மேல் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க, பிரகாஷ் உதவி செய்து வருகிறார். இப்பள்ளியில் சுமார் 60 ஏழை குழந்தைகள் படித்து வருகின்றன.

குழந்தைகளுக்கு கல்வியளிக்க 4 டீச்சர்களை நியமித்துள்ள பிரகாஷ், அவர்கள் நான்கு பேருக்கும் சம்பளமாக ரூ. 10 ஆயிரம் தந்து வருகிறார். மேலும், சம்பளம், மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து மாதம் ஒன்றிற்கு அவருக்கு ரூ. 20 ஆயிரம் செலவாகி வருகிறது. இவை அனைத்தையும் தனது டீக்கடையிலிருந்து மட்டுமே எடுத்து செலவிட்டு வருகிறார் பிரகாஷ். தனது பள்ளிக்காக இதுவரை யாரிடம் பணஉதவி அவர் கேட்டதில்லை.

பிரகாஷின் பள்ளியில் படித்து வரும் ஜெயா என்ற சிறுமியின் தாய் கூறுகையில், "முன்பெல்லாம் குழந்தைகள் தெருக்களில் சுற்றித்திரிவார்கள். அவர்களில் சிலர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் பிரகாஷ் பள்ளி ஆரம்பித்த பின் அவர்கள் அனைவரும் மாறி விட்டனர். இப்போது ஒழுங்காக பள்ளி செல்கின்றனர். இப்போது எனது இரு பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கனவு கண்டு வருகிறேன்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பிரகாஷ் கூறுகையில், "தாய், தந்தையர்கள் பணிக்குச் சென்ற பின் அவர்களது குழந்தைகள் தெருவில் சுற்றித்திரிவது கண்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். தற்போது பள்ளி துவங்கியதும் அவர்களது பெற்றோர்களே குழந்தைகளை பள்ளிக்கு வந்து விடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூக விரோத செயல்கள் செய்தவர்கள் தற்போது திருந்தி விட்டனர். எந்த ஒரு சிறார் சட்டமும் மாற்றங்களைக் கொண்டு வராது. ஒழுக்கக்கல்வியே குழந்தைகளிடம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்றார். கல்விப்பணி மட்டுமல்லாமல், 50 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ள பிரகாஷ், அவசர காலத்தில் ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்த தானமும் செய்து வருகிறார்.

இன்றைய சிக்கலான, குழப்பமான காலகட்டத்தில், அநேகம் பேர் மகிழ்ச்சியை வெளியில் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்தவர்களுக்கு உதவி புரிவதிலேயே மகிழ்ச்சி இருக்கிறது என்பதை எளிதான வகையில் சுட்டிக்காட்டும் வகையில் வாழ்ந்து வரும் பிரகாஷ் ராவ் போன்றவர்கள் நமக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.

>>>இன்று: பிப்.15 - கலிலியோ கலிலி எனும் நவீன அறிவியல் மற்றும் இயற்பியலின் தந்தையின் பிறந்த தினம்.

 
பள்ளியில் படிக்கிறபோது அரிஸ்டாட்டில் 'மனிதனின் பற்கள் 28' என சொன்னார். எண்ணிப் பார்த்து 'இல்லை' 32 என மறுத்தவர் இவர். அதுபோல வெவ்வேறு எடை உள்ள பொருட்கள் உயரத்தில் இருந்து போடப்படும்போது ஒரேசமயத்தில் வந்து விழும் என உறுதியாக அரிஸ்டாடிலின் கருத்தை ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்து பைசா கோபுரத்தின் மேலிருந்து வெவ்வேறு எடையுள்ள குண்டுகளை போட்டு பார்த்தார். இரண்டும் ஒரே சமயத்தில் பூமியை அடைவதைக்கண்டு அரிஸ்டாட்டில் சொன்னது தவறு என அறிவித்தார்.

மருத்துவம் படிக்கப்போன இவர் இயற்பியலின் மீது காதல் கொண்டது வேடிக்கையான நிகழ்வு. ஆஸ்டில்லோ ரிக்கியின் கணிதம் பற்றிய சுவையான ஒரு பேச்சை கேட்டு ஈர்க்கப்பட்டு இயற்பியல் சார்ந்து இயங்க ஆரம்பித்தார். மன்னனின் மகன் கண்டுபிடித்த இயந்திரம் வீணானது என சொன்னது மருத்துவ பட்டத்தை அவர் பெறாமல் தடுத்தது.

கணித பேராசிரியர் ஆனார். பீரங்கி குண்டின் இலக்கை ஆராய்ச்சியின் மூலம் சொன்னார். ஹாலந்து தேசத்தில் ஒருவர் ஒற்றர் கண்ணாடி எனும் கண்ணாடியின் மூலம் தூரத்தில் இருப்பவர்களை அருகில் காட்டும் கண்ணாடியை வடிவமைத்து இருப்பதை கேள்விப்பட்டே தனக்கான தொலைநோக்கியை உருவாக்கினார். நிலவைப் பார்த்து அதில் பாறைகளும் மலைகளும் இருப்பதை சொன்னார். பல்வேறு கிரகங்களை உற்றுப் பார்த்து சூரியனை கிரகங்கள் சுற்றி வருவதாக உறுதியாக சொன்னார்.

ஏற்கெனவே பைபிளுக்கு மாறாக அக்கருத்தை சொன்ன ப்ரூனோ எரித்து கொல்லபட்டிருந்தார். இதையே கலிலியோ சொன்னது எதிர்ப்பை உண்டாக்கியது. அதேசமயம் டயலாக்ஸ் எனும் நூலை எழுதினார். ஒருவர் பூமியை சூரியன் சுற்றுகிறது என்றும் இன்னொருவர் பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்றும் பேச இன்னொருவர் இருவரின் கருத்துகளையும் திறந்த மனதோடு பரிசீலனை செய்வதாக அந்நூலை வடிவமைத்தார்.

தெர்மாமீட்டருக்கு முன்னோடியான தெர்மோஸ்கோப், ராணுவ திசைகாட்டி என பலவற்றை உருவாக்கினார். அவரின் டயலாக்ஸ் நூலின் மீது தடை விதிக்கப்பட்டது; அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்; மீண்டும் உண்மையை சொன்னதற்காக மருத்துவம் பார்க்காமல் முழு குருடர் ஆக்கப்பட்டார்.

200 வருடங்கள் கடந்து 1822 இல் அவர் சொன்னதன் உண்மை புரிந்து, அவர் நூலின் மீதான தடை விலக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு கலிலியோ சொன்னது சரியென்றும், அவரை சிறைப்படுத்தியது தவறு எனவும் வாடிகன் மன்னிப்பு கேட்டது.

தான் சொன்ன உண்மைக்கான நீதி கிடைக்க கலிலியோவின் ஆன்மா 400 ஆண்டுகள் காத்திருந்தது என்பதை பார்க்கும்பொழுதே சிலிர்க்கிறது. உண்மையை நேர்பட சொன்ன அவரின் பிறந்தநாள் இன்று.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Allocation of ₹ 14.60 Crore for Annual Day in Government Schools - DSE Proceedings

  அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ₹ 14.60 கோடி நிதி ஒதுக்கீடு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Allocation of ₹ 14.60 Crore for Ann...