கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மின்சார சிக்கனம், தேவை எக்கணமும்....

தமிழகத்திற்கு முன்னுரிமை அளித்து, தேசிய மின்தொடருடன் இணைக்க வேண்டும். அதனால் காற்றாலை மின்சாரம் முழுவதும் பயன்படுத்தப்படும். இதற்கு, மத்திய அரசின் பசுமை எரிசக்தி நிதி அதிக அளவில் பயன்படுத்தப்பட, முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், 7,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் நிறுவப் பட்டு உள்ளன. ஆனால், காற்றாலை மின் உற்பத்தி அதிகமுள்ள காலத்தில், தமிழக மின்சார கட்டமைப்பு மூலம், அனைத்து மின்சாரத்தையும் வெளிக்கொண்டு வரவும், பயன்படுத்தவும் முடியாத அளவுக்கு, தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளன.
காற்றாலை பிரச்னை: மின்தொடரின் திறன் அளவை கட்டுக்குள் கொண்டு வர, பல நேரங்களில் அதிகப்படியான காற்றாலை உற்பத்தியை, அவ்வப்போது நிறுத்தி வைக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், காற்றாலை மின்சாரம் அதிகமாகும் நேரத்தில், அது நிலையில்லாததாக கருதப்பட்டு, வெளிமாநிலங்களால், இலவசமாக எடுத்து கொள்ளப்படுகிறது. இந்த மின்சாரத்திற்கும் சேர்த்து, தமிழக மின்வாரியம், காற்றாலை அதிபர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய தொடர் இணைப்பு: இதை சரிசெய்வதற்கான காரணம் குறித்து, காற்றாலை அதிபர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கய்யன் கூறியதாவது: தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிமாநிலத்திற்கு விற்க முடியாத அளவுக்கு, பிரிவு 11ன் கீழ் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்ததடையால், காற்றாலையோ அல்லது மற்ற மின் நிலையத்தினரோ, அதிகப்படியான மின்சாரத்தை வெளிமாநிலத்திற்கு விற்க முடிவதில்லை. மேலும், தேசிய மின்தொடருடன், தெற்கு மண்டல மின்தொடரையும் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசுக்கு பரிந்துரை: இதுகுறித்து, தமிழக மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தெற்கு மண்டல மின்தொடர், கடும் இட நெருக்கடியில் உள்ளது. எனவே, தெற்கு மண்டல மின்தொடரை, தேசிய மின்தொடருடன் இணைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்குமாறு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கான நடவடிக்கையில், பவர் கிரிட் நிறுவனம் காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கிடையில், மரபுசாரா  எரிசக்தி துறையை ஊக்குவிக்க, மத்திய அரசின் பசுமை எரிசக்தி நிதியை பயன்படுத்தி, உள்கட்டமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப் பட்டு உள்ளது. தமிழகத்தில் தான், அதிக அளவில் காற்றாலை மின் உற்பத்தியாவதால், தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்கும்படி, மத்திய மின்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு, மத்திய மின்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தெற்கு மண்டல மின்சார கமிட்டியும் ஒப்புதல் அளித்து, மின்சார கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு உள்ளது; மத்திய அரசுக்கும் பரிந்துரைக்கப் பட்டு உள்ளது. விரைவில் தேசிய மின்தொடர் இணைப்புக்கான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பயன் என்ன: தேசிய மின்தொடருடன் தமிழகம் இணையும் பட்சத்தில், பல்வேறு மாநிலங்களிலிருந்து குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்க முடியும். தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் அதிகமாகும்போது, பரஸ்பர ஒப்பந்த அடிப்படையில் மற்ற மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரத்தை கொடுத்து, தமிழகத்தில், மின் தட்டுப்பாடுள்ள நேரத்தில் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.
நன்றி-தினமலர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...