கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தனியார் பள்ளிகளுக்கு 6 மாதத்திற்குள் பொது சட்டம்

தனியார் பள்ளிகளுக்கு, பொதுச் சட்டம் மற்றும் விதிமுறைகளை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள வல்லுனர் குழுவிற்கு உதவ, துணைக் குழுவை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து, பல வகையான பள்ளிகளை ஒருங்கிணைத்து, அவற்றுக்கு பொதுச் சட்டம் மற்றும் விதிமுறைகளை உருவாக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பழனியாண்டி தலைமையில், 15 உறுப்பினர்கள் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது.
குழுவின் முதல் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று காலை நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா, குழுத் தலைவர் பழனியாண்டி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
செயலர் சபிதா பேசுகையில், "அரசு தெரிவித்துள்ளபடி, ஆறு மாதங்களில், தரமான சட்டத்தையும், விதிமுறைகளையும், வல்லுனர் குழு உருவாக்க வேண்டும். இதற்காக, துணைக் குழுவை வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் என்றார்.
குழுத் தலைவர் பழனியாண்டி பேசும் போது, நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள், எங்கள் பணியை சிறப்பாக செய்து முடிப்போம் என்றார். இக்குழு, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படும் எனத் தெரிகிறது.
மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், நர்சரி பள்ளிகள் உள்ளிட்ட பல வகையான பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், பொது மக்கள், கல்வியாளர்கள் என, பல தரப்பினரிடமும், பொதுச் சட்டம் மற்றும் விதிமுறைகள் உருவாக்குவது தொடர்பாக கருத்துக்களை பெறவும், வல்லுனர் குழு திட்டமிட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...