கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>380 தனியார் பள்ளிகளுக்கு நவம்பருக்குள் புதிய கட்டணம்

கட்டணத்தை உயர்த்தக் கோரி மேல் முறையீடு செய்த, 380 தனியார் பள்ளிகளுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, நவம்பர் மாத இறுதிக்குள் புதிய கட்டணத்தை நிர்ணயிக்க, கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது.
கட்டண நிர்ணயக் குழு விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி, இந்த பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு, தற்போது கடிதம் அனுப்பப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளிகளுக்கு முதன் முதலில், ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு, கட்டணத்தை நிர்ணயித்தது. இவர் நிர்ணயித்த கட்டணம் மிகவும் குறைவு என்பதால், பள்ளிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தன. புதிய கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, ஏராளமான பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. இந்நிலையில் அவர், தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
குழுவின் இரண்டாவது தலைவராக, ரவிராஜ பாண்டியன் பொறுப்பேற்றதும், மேல் முறையீடு செய்த பள்ளிகளின் நிர்வாகிகளை அழைத்து விசாரணை நடத்தி, புதிய கட்டணத்தை நிர்ணயித்தார். பள்ளி நிர்வாகிகள் தரப்பு கருத்துகளை கேட்காமல், நிர்வாகிகளிடம் இருந்து, சம்பிரதாயமாக விண்ணப்பங்களை மட்டும் பெற்று, பள்ளிக் கட்டணத்தை குறைவாக நிர்ணயித்தார் என்ற சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், குழுவின் மூன்றாவது தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேல் நியமிக்கப்பட்டார். இவர், மேல் முறையீடு செய்யும் பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, புதிய கட்டணத்தை நிர்ணயித்து வருகிறார்.
இதற்கிடையே, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போதாது எனவும்; பள்ளிகளுக்கு ஏற்படும் செலவுகளை கணக்கில் கொண்டு, கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, 380 பள்ளிகள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில், மேல் முறையீடு செய்த, 380 தனியார் பள்ளிகளுக்கும், விரைவில் விசாரணை நடத்தி, டிசம்பருக்குள் புதிய கட்டணத்தை நிர்ணயிக்க, கட்டண நிர்ணயக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மே மாதம், சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தும் பணியை, கட்டண நிர்ணயக் குழு வேகமாக செய்து வருகிறது. இதுகுறித்து, குழு வட்டாரம் கூறியதாவது: ஐகோர்ட் உத்தரவின் படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள 380 தனியார் பள்ளிகளில், 200 பள்ளிகளுக்கு, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களிலும்; மீதமுள்ள 180 பள்ளிகளுக்கு, அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களிலும் விசாரணை நடத்தி, நவம்பர் இறுதிக்குள் புதிய கட்டண விவரங்களை, இணையதளத்தில் வெளியிடுவோம்.
புதிய கட்டணம், உடனடியாக அமலுக்கு வந்துவிடும். கட்டணத்திற்கு தகுந்தாற்போல், பள்ளி நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்.இவ்வாறு, குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...