கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>TET கேள்வித்தாள் கடினமாக இருக்குமா...?

வரும் 12ம் தேதி நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,), கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. எட்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின்படி தேர்வு என்றாலும், பிளஸ் 2 நிலையில், கேள்விகள் கடுமையாகவும், சிந்தித்து விடை அளிக்கும் வகையிலும் இருக்கும் என கூறப்படுகிறது. திணறடித்த குரூப்-4:கடந்த 7ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப்-4 தேர்வில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர். 10ம் வகுப்பு கல்வித்தகுதி நிலையில் நடக்கும் தேர்வு என்றாலும், மிகக் கடுமையாக, தேர்வர்களை குழப்பும் வகையில், நீண்ட நேரம் சிந்தித்து விடை அளிக்கும் வகையில், கேள்வித்தாள் அமைந்தது. இதனால், தேர்வெழுதியவர்கள் புலம்பி வருகின்றனர்.
குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு, பன்மடங்கு போட்டி எனும்போது, கடுமையான தேர்வு முறையை கையாளாவிடில், ஆட்களை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்படும் நிலையும் உள்ளது.இந்நிலையில், 12ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தும், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. குரூப்-4 தேர்வெழுதிய தேர்வர்கள் பலர், டி.இ.டி., தேர்வையும் எழுத உள்ளனர். 10ம் வகுப்பு நிலையில் நடந்த தேர்வே அதிர்ச்சி அடைய வைத்ததால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் நடக்கும் தேர்வு எப்படி இருக்குமோ என, பீதி அடைந்து உள்ளனர். திறமையை சோதிப்போம்:ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை
பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியருக்கு, ஆரம்பக்கல்வி நிலையிலும்; ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியருக்கு, எட்டாம் வகுப்பு பாடத்திட்ட அளவிலும், தேர்வு நடக்க வேண்டும். எனினும், இரு பிரிவு ஆசிரியருக்குமே, பிளஸ் 2 பாடத்திட்ட நிலையில், கேள்விகள் கேட்கப்பட உள்ளன.இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறும்போது, இருக்கும். ஆசிரியர் பணிக்கு வருபவரின் திறமையை சோதிக்கும் வகையிலும், சிந்திக்கும் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாகவும், கேள்விகள் இருக்கும்,'' என்றனர்.பட்டதாரி ஆசிரியருக்கு சவால்டி.இ.டி., தேர்வு, 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. கட்டாயக்கல்வி சட்டத்தின்படி, ஆசிரியர் பணியில் உள்ளவர்கள்மற்றும் ஆசிரியர் பணிக்கு செல்ல இருப்பவர்கள், தேர்ச்சி பெற, 90 மதிப்பெண் (60 சதவீதம்) பெற வேண்டும். இடைநிலை ஆசிரியரைப் பொறுத்தவரை, தேர்ச்சி பெற்றால் போதும். ஏனெனில், அவர்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்பட உள்ளனர்.ஆனால், பட்டதாரி ஆசிரியரைப் பொறுத்தவரை, முழுக்க முழுக்க மதிப்பெண் அடிப்படையில் தான் நியமிக்கப்பட உள்ளனர். எனவே, இடைநிலை ஆசிரியரை விட, பட்டதாரி ஆசிரியருக்கு, இந்த தேர்வு பெரும் சவாலாக இருக்கும்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...