கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>2000 கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு அறிவிப்பு வெளியீடு - தமிழக அரசுப்பணிகளில் சேர அதிகரிக்கும் வாய்ப்புகள்.....

தமிழக அரசில், பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை, சத்துணவுத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம் என, பல்வேறு துறைகளில் வேலையில் சேர, புதிய வாய்ப்புகள் குவிகின்றன. இத்துறைகளில், 1 லட்சம் பணியிடங்களை நிரப்ப, அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி., நேற்று மாலை, 2,000 வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. அனைத்து துறைகளும், போட்டி போட்டுக் கொண்டு ஆள் எடுப்பதால், அரசு வேலையில் சேர, படித்த இளைஞர்களுக்கு, பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது
ஒவ்வொரு துறையிலும், புதிய பணி நியமனங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக, பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், சத்துணவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள், போட்டி போட்டுக் கொண்டு, புதிய நியமன அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.ஒரு பக்கம், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமனங்களும், மற்றொரு பக்கம், போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகளும், நடந்து வருகின்றன. பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர் தேர்வு வாரியம், 12ம் தேதி நடத்த உள்ள டி.இ.டி., தேர்வு மூலம், 20 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படஉள்ளனர்.
தற்காலிகம்:போக்குவரத்துத் துறையில், 16 ஆயிரத்து 850 டிரைவர், கண்டக்டர் மற்றும் 9,000 தற்காலிக ஊழியர்கள் நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சத்துணவுப் பணியாளர்கள் 16 ஆயிரம் பேர், 7ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப்-4 தேர்வு மூலம் 11 ஆயிரம் பேர், முதுகலை ஆசிரியர் 3,000 பேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், 1 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1,623 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்யும் அறிவிப்பை, முதல்வர் நேற்று வெளியிட்டார். மேலும், 2,000 வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பையும், டி.என்.பி.எஸ்.சி., நேற்று மாலை வெளியிட்டது. ஏற்கனவே, 11 ஆயிரம் பேரை தேர்வு செய்ய, 7ம் தேதி தேர்வு நடத்திய நிலையில், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில், 2,000 வி.ஏ.ஓ.,க்களை தேர்ந்தெடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.இப்படி, எல்லா துறைகளும், போட்டி போட்டுக் கொண்டு ஆள் எடுத்து வருவதால், படித்த இளைஞர்கள், அரசு வேலையில் சேர, மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், அரசு, தொடர்ந்து புதிய நியமனஅறிவிப்புகளை வெளியிட்டு வருவது, படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மத்தியில், பெரும் வரவேற்பையும்மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டால், அரசுத் துறைகளில், வேலைகள் வேகம் எடுக்கும் என, அரசு எதிர்பார்க்கிறது.
எவ்வளவு செலவாகும்? பல்வேறு அரசுத் துறைகளில், ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும், தொடர்ந்து புதிய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆறாவது ஊதியக்குழு சம்பளம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சம் பேருக்கு, சம்பளம் மற்றும் இதர சலுகைகளாக, ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழக அரசில் ஊழியர்கள் எண்ணிக்கை, 20 லட்சத்தை நெருங்கிவிட்டது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...