கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியர் பணி மாறுதல் நாளை கவுன்சிலிங்

பள்ளிக் கல்வித்துறையில் பட்டதாரி, இடைநிலை, சிறப்பாசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, நாளை தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொடர்பாக நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளிக் கல்வித்துறையில் பட்டதாரி, இடைநிலை, சிறப்பாசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், ஐந்து நாட்கள் நடத்தப்பட உள்ளது.
அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள், நீலகிரி மாவட்டத்துக்குள் மாறுதல் தொடர்பான கவுன்சிலிங் நாளை (23ம் தேதி) நடைபெறவுள்ளது.
வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் தொடர்பான கவுன்சிலிங், 24ம் தேதியும்; சென்னை அசோக்நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பயிற்றுநர் பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 2 பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், 27ம் தேதியும் நடக்கிறது.
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வுக்கு 30,31ம் தேதிகளிலும், ஆங்கிலம், கணிதம், அறிவியல் சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 30ம் தேதியிலும் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Tamilnadu Government Schools Centenary Celebration - District wise Launch Schools List

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழா - தொடக்கவிழா நடைபெறும் பள்ளிகள் பட்டியல் - மாவட்ட வாரியாக  Tamilnadu Government Schools Centenar...