கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளி சத்துணவு திட்டத்தில் பலவகை உணவுகள் சேர்ப்பு

சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சத்துணவில், இனி, பெப்பர் முட்டை, கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
தமிழகத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தேவையான அளவில் சத்தான உணவு அளிப்பதன் மூலம், அவர்கள் உடல் தரத்தை உயர்த்தி, கல்வி கற்பதை ஊக்குவித்து, கல்வி விகிதாச்சாரத்தை உயர்த்துவதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் நீக்குவதற்காக, சத்துணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டம், 1984ம் ஆண்டு முதல், 10 முதல், 15 வயதுள்ள குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தற்போது இரண்டு முதல், ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கும், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கும், 365 நாட்களும் சத்துணவு வழங்கப்படுகிறது. ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், அதாவது, 220 நாட்களும் வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 43 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 50.14 லட்சம் மாணவர்கள்; அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த, 11.30 லட்சம் குழந்தைகள்; முதியோர் மற்றும் ஓய்வூதியப் பயனாளிகள், 18 ஆயிரம் பேர் என, மொத்தம், 61.62 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். இவர்களில், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு சத்து மாவு வழங்கப்படுகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தினசரி, சாதம், சாம்பார் வகை உணவுகள் அளிப்பதால், மாணவர்கள் சலிப்படைந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில், தினமும் விதவிதமான உணவு வகைகளை தயாரித்து வழங்கும் விதமாக, சத்துணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, "செப்" தாமுவுடன் இணைந்து, புதிய, "மெனு" தயாரிக்கும் முயற்சியில், சத்துணவுத் திட்ட அதிகாரிகள் இறங்கினர். மேலும், இது தொடர்பான செயல்முறை விளக்க பயிற்சிப் பட்டறை, சென்னை சைதாபேட்டை மாந்தோப்பு மாநகராட்சி பள்ளியில் நடந்தது.
இதைத் துவங்கி வைத்த அமைச்சர், எம்.சி.சம்பத், "தற்போது சோதனை ரீதியாக துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் செயல்பாட்டிற்கு வரும்" என அறிவித்திருந்தார். தொடர்ந்து, திருச்சியில் ஒரு பள்ளியில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டபோது, மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
புதிய திட்டப்படி, ஒரு நாள் வழக்கம் போல் சாதம், சாம்பார், முட்டை இருக்கும். மற்ற நாட்களில் பல்வேறு வகை சாதங்கள் வழங்கலாம் என்றும், தினசரி வழங்கப்படும் அவித்த முட்டையை மாற்றி, பெப்பர் முட்டை உட்பட பல்வேறு விதமாக வழங்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி வடிவம் பெறப்பட்டு, அரசிடம் முறையான அனுமதியை, சத்துணவுத் திட்டத் துறையை உள்ளடக்கிய, சமூக நலத்துறை கோரி இருந்தது.
இதுகுறித்த விளக்கத்தை சத்துணவுத் திட்டத் துறை, "செப்" தாமுவின் ஆலோசனை பெற்று அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செலவினங்கள் குறித்து நிதித் துறையும் திருப்தியடைந்து விட்டதாகத் தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, அடுத்த மாதம், 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது வழங்கும் உணவு
தினம் - சாதம், சாம்பார், அவித்த முட்டை
செவ்வாய் - பச்சைப்பயறு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்
வெள்ளி - உருளைக்கிழங்கு கூட்டு
புதிய மதிய உணவு முறை
* வழக்கம் போல் சாதம், சாம்பார் ஒரு நாள்.
* மற்ற நாட்களில், பிரைடு ரைஸ், லெமன் சாதம், கருவேப்பில்லை அல்லது கீரை சாதம், தக்காளி சாதம் என, 13 விதமான உணவுகளில், தினமும் ஒரு உணவு வழங்கப்பட உள்ளது.
* அவித்த முட்டை ஒரு நாளும், மற்ற நாட்களில், பெப்பர் முட்டை, மசாலா முட்டை, பருப்பு முட்டை, முட்டைப் பொரியல் என, உணவு வகைக்கு ஏற்ப மாற்றித் தரப்பட உள்ளது.
* உருளை மசாலா, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் என, இரண்டு நாட்கள் தர உள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher

ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teach...