கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தனியார் ஐ.டி.ஐ கல்லூரிகளுக்கு இந்த மாதம் கலந்தாய்வு

தமிழகத்தில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,க்களில், 50 சதவீதம் இடங்களை அரசே நிரப்பும் என அறிவித்துள்ள நிலையில், இம்மாத மத்தியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்த, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முடிவு எடுத்து உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது, 67 அரசு ஐ.டி.ஐ.க்கள் உள்ளன. இவற்றில், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதுதவிர, தமிழகம் முழுவதும், 627 அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஐ.டி.ஐ.,க்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும், 40 ஆயிரம் இடங்கள் வரை நிரப்பப்படுகின்றன.
அரசு ஐ.டி.ஐ.,க்களில் கலந்தாய்வின் மூலம், அரசே அனைத்து இடங்களையும் நிரப்புவது போல், தனியார் ஐ.டி.ஐ.,க்களில், 50 சதவீதம் இடங்களை நிரப்ப, அரசு முடிவெடுத்தது. தனியார் கல்லூரியில் பெறப்படும் இடங்கள், அவற்றை நிரப்புவது தொடர்பாக, சமீபத்தில் தலைமைச் செயலகத்தில், அமைச்சர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், ஐ.டி.ஐ.,க்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை, இந்த மாதம் மத்தியில் துவக்கி, இறுதிக்குள் முடிக்கலாம் என, முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, ஐ.டி.ஐ.,க்களில் இறுதித் தேர்வு நடந்து வருகின்றன. தேர்வு முடிந்ததும், கலந்தாய்விற்கான நடவடிக்கைகள் துவக்கப்படும்.
இதுகுறித்து, வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆண்டுதோறும், அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கும் நிலையில், குறைந்த அளவே இடங்கள் இருப்பதால், அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க முடியவில்லை.தற்போது, தனியார் ஐ.டி.ஐ.,க்களில் இருந்து, 20 ஆயிரம் இடங்களை அரசே நிரப்புவதால், அதிகளவில் தொழிற்பயிற்சி பெறுபவர்களை உருவாக்க முடியும்.
மேலும், நகர்ப்பகுதிகளில் உள்ள ஐ.டி.ஐ.,க்களில், கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்களுக்கு, 12 ஆயிரம் ரூபாய் கட்டணமும்; கிராமப்புற ஐ.டி.ஐ.,க்களில் சேரும் மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கட்டணமும் அரசே செலுத்துகிறது.
அதிக எண்ணிக்கையில் தொழிற்பயிற்சி அளிக்கவும்; புதிய ஐ.டி.ஐ.,க்கள் துவக்கவும்; தேவையான பணிகளில் தொழிலாளர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, புதிய பாடத் திட்டங்கள் துவக்கவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Madurai MP S. Venkatesan's letter to change the date of Chartered Accountant exam to be held on Pongal

 பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் Chartered Accountant தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் Madurai MP S. Venkatesan's...