ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், மாணவர்களை சேர்க்க
நடத்தப்படும் புதிய வடிவிலான நுழைவுத்தேர்வின்(JEE) மெயின் தேர்வு
அடுத்தாண்டு ஏப்ரல் 7ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், அத்தேர்வின் ஆன்லைன் ஏப்ரல் 8 முதல் 25 வரை நடைபெறும்.
ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின்
கல்வி நிறுவனங்களில், இளநிலை பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்க்க,
2013ம் ஆண்டு முதல், புதிய முறையில் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை
சேர்க்க திட்டமிடப்பட்டது. அதன்படி, தற்போது அதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த JEE தேர்வு, மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என்று 2 பிரிவாக நடத்தப்படவுள்ளது.
JEE மெயின் தேர்வில், சிறப்பாக செயல்பட்ட 1.50 லட்சம் பேர்
தேர்வுசெய்யப்பட்டு, அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த
தேர்வை எழுதியவர்களில், சிறப்பாக செயல்பட்டவர்கள் பிரிவு வாரியாக தெரிவு
செய்யப்படுவார்கள். ஒரு மாணவர் +2 படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 40%
முக்கியத்துவமும், JEE மெயின் தேர்வு செயல்பாட்டிற்கு 60% முக்கியத்துவமும்
தரப்படும்.
JEE அட்வான்ஸ்டு தேர்வானது, ஜுன் 2ம் தேதி நடத்தப்படவுள்ளது. இவ்வாறு சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.