ஐஐடி, என்ஐடி மற்றும் ஐஐஐடி போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் வரும்
2013ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஆசைப்படும் மாணவர்கள் சந்தோஷப்படும்
விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய நடைமுறை பற்றியும், அதற்கு தயாராவது
குறித்தும் அறியலாம்.
ஐஐடி-ஜேஇஇ, ஏஐஇஇஇ மற்றும் சில மாநில சிஇடி போன்றவை ஒரே தேர்வாக, 2 கட்டங்களில் நடத்தப்படும்.
தேர்வுமுறை
இத்தேர்வானது, 2 கட்டங்களாக நடத்தப்படும். மெயின் மற்றும் அட்வான்ஸ்டு
என்ற பெயர்களில் அவை இருக்கும். அனைத்து மாணவர்களும், சி.பி.எஸ்.இ நடத்தும்
மெயின் தேர்வை எழுத வேண்டும். இது மல்டிபிள் சாய்ஸ் வினாத்தாளாக இருக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலுள்ள பல்வேறு வாரியங்களின் மதிப்பெண்களை அளவிடுவதற்கான ஒரு
செயல்முறையை, கொல்கத்தாவிலுள்ள இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம், ஒரு
சிறப்பு வழிமுறையை வகுத்துள்ளது.
ஐஐடி -கள் மெயின் தேர்வை ஒரு ஸ்கீரினிங் தேர்வாக மதிப்பிடுகின்றன.
மெயின் தேர்வில் முக்கிய இடம் பெறுபவர்கள் மட்டுமே, அட்வான்ஸ்டு தேர்வுக்கு
தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வு, ஐஐடி -களால் மாணவர்களை
தேர்ந்தெடுக்க நடத்தப்படுகின்றன. இத்தேர்வு ஒரு சப்ஜெக்டிவ் பேப்பராகவும்
இருக்கலாம். இந்த இடத்தில் பள்ளி வாரியங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
அவரவர் வாரியங்களில் யார் முதல் 20% பெறுகிறார்களோ, அந்த மாணவர்களே,
இறுதி சேர்க்கைக்கு கவனத்தில் கொள்ளப்படுவார்கள். தகுதி பெறுவதற்கான
குறைந்தபட்ச மதிப்பெண் அளவுகள், வாரியத்திற்கு வாரியம், மாநிலத்திற்கு
மாநிலம் வேறுபடும்.
மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்கள், வரும்
2013ம் ஆண்டிலிருந்து இந்த ஒற்றை நுழைவுத்தேர்வு திட்டத்தில் இணைந்து
செயல்பட உள்ளன. பிற மாநிலங்கள் எதிர்காலத்தில் இத்திட்டத்தில் இணையும்
என்று நம்பப்படுகிறது. வெயிட்டேஜ் வழங்குவது பற்றி அந்தந்த மாநில அரசுகளே
தீர்மானித்துக்கொள்ளும்.
படிப்பதற்கான ஆலோசனைகள்
* படிப்பது குறித்து முதலில் நன்றாக திட்டமிட வேண்டும்.
* பள்ளி பாடத்திட்டத்தில் நன்கு கவனம் செலுத்தி, பள்ளி
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில்,
இத்தகைய தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதானது, உங்களின் வாய்ப்பை
குறைத்துவிடும்.
* ஒருவர், தனது திறமை மற்றும் தாங்குதிறன் எவ்வளவு என்பதை அறிந்து,
அதற்கேற்ப, தன்னால் சாதிக்க முடிந்த அளவில் மட்டுமே திட்டமிட வேண்டும்.
* மேலும், தேர்வுமுறைகள் மற்றும் தேர்வுக்கான புதிய நடைமுறைகள்
குறித்து, சி.பி.எஸ்.இ மற்றும் ஐஐடி இணையதளங்களுக்கு சென்று நன்றாகப்
படித்து அறிந்துகொள்ள வேண்டும்.
புதிய முறை நல்லதா?
புதிய தேர்வு முறையானது, ஒரு மாணவரின், தனிப்படுத்தப்படாத அறிவு,
பகுப்பாய்வுத் திறன், பொது திறனாய்வு ஆகியவற்றுக்குப் பதிலாக, அவரின்,
தயார்நிலையையும், போட்டித் திறனையும் சோதிக்கிறது.
இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள்தான், உலகிலேயே,
இதுபோல், மாணவர்களிடம், பல்திறன் சோதனை முயற்சிகளை மேற்கொள்பவை என்றுகூட
சொல்லலாம். புதிய வழிமுறைகளை உருவாக்கும் முன்பாக, உலகின் 50 முன்னணி
தொழில்நுட்பக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை
ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பது சில
நிபுணர்களின் கருத்தாக உள்ளது.