கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 7, 8ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் இந்தப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவு கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்டது. தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 8ம் தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.
இதற்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இணையதளத்திலும்  அழைப்புக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், இணையதளத்தில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Job satisfaction - Today's Short Story

  செய்யும் தொழில் மனத்திருப்தி - இன்றைய சிறுகதை  Job satisfaction - Today's Short Story  இன்று ஒரு சிறு கதை செய்யும் தொழில் மனத்திருப்தி...