கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>படைப்பாற்றலுக்கான மாநில விருது: அரசுப்பள்ளி மாணவர் சாதனை

படைப்பாற்றலுக்கான மாநில விருதை, அருப்புக்கோட்டை, சவ்வாசுபுரம் அரசுப்பள்ளி மாணவர் பாலச்சந்தர் பெற்றார். டில்லியில் உள்ள அறிவியல் தொழில் நுட்ப கழகம், சிறந்த படைப்புகளை தரும் மாணவர்களுக்கு, "இன்ஸ்பயர் விருது' வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டில், கோவை கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில், மாநில அளவில் கண்காட்சி நடந்தது. இதில் அருப்புக்கோட்டை, சவ்வாசுபுரம் அரசுப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் ஆர். பாலச்சந்தர் கலந்து கொண்டார். எளிய முறையில் தீ அணைக்கும் கருவியை உருவாக்கி, சிறந்த படைபாற்றலுக்கான மாநில அளவில் விருது பெற்றுள்ளார்.
இவரது கண்டுபிடிப்பு: தீயணைக்கும் கருவி ஒரு குறிப்பிட்ட அறையில் வெப்பநிலை உயரும்போது, ரிலே சுவிட்ச் ஆன் செய்யப்படுகிறது. ஐ.சி., துணையுடன் ஒரு சத்தம் எழுப்பப்பட்டு, அந்த சப்தம் நீரில் மூழ்கியிருக்கும் மின் மோட்டாரை இயக்கி, நீரை செலுத்தி தீயை அணைக்க பயன்படுகிறது. விருது பெற்ற மாணவரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பகவதி, ஆசிரியர்கள் பாராட்டினர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமையாசிரியர்களுக்கு ஒரு நாள் SMC பயிற்சி - SPD செயல்முறைகள்

பள்ளி மேலாண்மைக் குழு - தலைமையாசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி - SPD செயல்முறைகள்  SMC Training to HMs - SPD Proceedings  >>> தரவிற...