குரூப்-2 பணிகளுக்கு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, இந்த
மாதம், 29ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம்
தடைவிதித்து உள்ளது. கடந்த ஆண்டு, ஜூலையில், குரூப்-2
தேர்வு நடந்தது. 6,692 பணியிடங்களுக்காக, இந்த தேர்வு நடந்தது. இதில், 3.5
லட்சம் பேர் எழுதினர். கடந்த, ஜூன் மாதம், தேர்வு முடிவு வெளியானது. 6,949
பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு, ஜூன் இறுதியில்
துவங்கி, ஜூலை வரை நடந்தது. இந்நிலையில், கரூரைச் சேர்ந்த நிர்மல் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
"ஐந்து கேள்விகளுக்கு, கீ விடைத்தாளில் வழங்கப்பட்ட, விடைகள் தவறானவை. "ஒரு
மதிப்பெண்ணால், எனக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு இல்லை. எனக்கு, ஐந்து
மதிப்பெண்கள், கூடுதலாக வழங்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்க
வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் கவுன்சிலிங், முடிந்தது. அடுத்த கட்ட
நடவடிக்கைகளை, அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கனவே கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, இந்த மாதம், 29ம்
தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க கூடாது. டி.என்.பி.எஸ்சி., தரப்பில்,
29ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதி
நாகமுத்து உத்தரவிட்டு உள்ளார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
TNPSC Group 2 Expected Cut Off 2025
TNPSC Group 2 / 2A Expected Cut Off 2025 : Know Category Wise Qualifying Marks for Preliminary Exam