கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பி.எட்., முடித்த 50 ஆயிரம் பேர் சான்றிதழ் இன்றி தவிப்பு

கடந்த, 2010- 11ம் ஆண்டில், பி.எட்., முடித்த, 50 ஆயிரம் பேர், சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில், 660 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன; இவற்றில், 2010- 11ம் ஆண்டில், 50 ஆயிரம் பேர், பி.எட்., படிப்பை முடித்தனர். இவர்களுக்கு, இதுவரை பட்டம் வழங்கவில்லை.ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், மாணவ, மாணவியருக்கு, தற்காலிக சான்றிதழை மட்டும் வழங்கியது. இந்த சான்றிதழை, உயர் படிப்புகளில் சேரவும், வேலை வாய்ப்பிற்காகவும் பயன்படுத்தலாம்; எனினும், பட்டப் படிப்பு சான்றிதழ் அவசியம். குறிப்பாக, பலர், அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியராக வேலையில் சேர்ந்துள்ளனர். இவர்களின் பணி நியமனத்திற்கு, அரசின் ஒப்புதல் பெற வேண்டும் எனில், தற்காலிக சான்றிதழ் மட்டும் போதாது. இதுபோன்ற பிரச்னைகளால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர், வீரமணி கூறுகையில், "பட்டமளிப்பு விழாவிற்கு, ஆளுனரிடம் தேதி கேட்டுள்ளோம். விரைவில், தேதி கிடைத்து விடும். நவம்பருக்குள், பட்டமளிப்பு விழாவை நடத்தி, சான்றிதழை வழங்கி விடுவோம்," என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருமான வரி புதிய வரி விதிப்பு : ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு எப்போதும் வரி விலக்கு கிடைக்காது - ஏன்?

வருமான வரி புதிய வரி விதிப்பு : ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு எப்போதும் வரி விலக்கு கிடைக்காது - ஏன்?  புதிய வரி விதிப்பில் ஒரு ட்விஸ்ட்...