கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கேட் தேர்வுகள் தொடக்கம்: ஜனவரி 9ம் தேதி ரிசல்ட்

ஐஐஎம் போன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படும் கேட் தேர்வு இன்று தொடங்கி வரும் நவம்பர் 6ம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் நடக்கிறது. இந்த தேர்வின் முடிவுகள் ஜனவரி 9ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 2 லட்சத்து 14 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இதற்காக நாடு முழுவதும் மொத்தம் 36 நகரங்களில் 61 மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. காலையில் 10 மணிக்கு முதல்தாள் தேர்வு நடைபெறும் என்றாலும், பாதுகாப்பு சோதனைகளை பூர்த்தி செய்வதற்காக காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்தில் தேர்வர்கள் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிற்பகல் நடைபெறும் 2ம் தாள் தேர்வு 3..15 மணிக்கு தொடங்கும். இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் மதியம் 1.45 மணிக்கு மையத்தில் இருக்க வேண்டும். இந்த ஆண்டு கேட் தேர்வில் முதல்தாளில் Quantitative Ability, Data Interpretation தொடர்பான கேள்விகளும், 2ம் தாளில் Verbal Ability, Logical Reasoning தொடர்பான கேள்விகளும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேட் தேர்வை எந்தவித சிக்கலும் இன்றி சுமுகமாக நடத்துவதற்காக, தேர்வு நடைபெறும் மையங்களில் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக, இந்த ஆண்டுக்கான கேட் தேர்வை நடத்தும் கோழிக்கோடு ஐ.ஐ.எம் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேட் தேர்வின் மூலம் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படக்கூடிய சில முதுநிலை மேலாண்மை பாடத்திட்ட விபரங்கள்: PGP, PGP - ABM, PGSEM, PGPPM, PGP - PGDM, PGP - PGDCM, EPGP, PGDHRM போன்ற படிப்புகள் திருச்சி, பெங்களூர் மற்றும் கோழிக்கோடு உட்பட, நாட்டில் மொத்தமுள்ள 13 ஐஐஎம்-களில் வழங்கப்படுகின்றன. மேலும் FPM (Fellow Programmes in Management) எனப்படும் முனைவர் பட்டத்திற்கு இணையான படிப்பானது, அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, இந்தூர், கோழிக்கோடு, லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருச்சி ஆகிய இடங்களிலுள்ள ஐஐஎம் களில் வழங்கப்படுகிறது. கேட் 2012 தேர்வின் மதிப்பெண்களை, www.catiim.in என்ற வலைத்தளத்தில் 9 ஜனவரி, 2013 முதல் பார்க்கலாம். மதிப்பெண் அட்டையின் பிரிண்ட் அவுட் நகலை மாணவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த கேட் 2012 மதிப்பெண் அட்டையானது, 31 டிசம்பர், 2013 வரை செல்லும். இந்த மதிப்பெண் அட்டையை 31 டிசம்பர், 2013 வரை, www.catiim.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...