கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>புதிய மருத்துவ கல்லூரிகள்: விதிமுறை தளர்த்த பரிசீலனை

மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான, தற்போதுள்ள கடுமையான விதிமுறைகளை தளர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுபற்றி ஆலோசிக்க, அடுத்த மாதம், அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள், செயலர்களின் கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கேற்ப, டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில், புதிதாக, 5,000 எம்.பி.பி.எஸ்., "சீட்"களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு, தற்போது கடுமையான விதிமுறைகள் உள்ளன; இவை, மிகவும் பழைய விதிமுறைகள். புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்றால், இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும். தற்போதுள்ள விதிமுறைப்படி, மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு அதிகமான நிலம் வேண்டும். விளையாட்டு மைதானம், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் ஆகியவை, பரந்த அளவில் அமைக்க வேண்டும் என்பதால், இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. தற்போது நிலங்கள் மிகவும் பற்றாக்குறையாக உள்ளதால், பல மாடி கட்டடங்களில், மருத்துவ கல்லூரி அமைக்கலாம். விதிமுறைகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யிடம், ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை உருவாக்குவதற்காக, எம்.சி.ஐ., சார்பில், குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம், அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள், செயலர்களின் கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது. அப்போது, இந்த விவகாரம் குறித்து, ஆலோசிக்கப்படும். புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க அனுமதி கோரி, எம்.சி.ஐ.,க்கு, 120 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்கும்படியும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...