கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அரசு பள்ளிகளை பாதுகாக்க பாதுகாவலர்கள் நியமிக்கபடுவரா?

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்துக்கும், வாட்ச்மேன் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, வகுப்பறைகளும், ஒரு சில பீரோக்களும் மட்டுமே சொத்துக்களாக இருந்தன. இதனால், திருட்டு போகும் அபாயமின்றி, வாட்ச்மேன் பணியிடங்களுக்கு அவசியம் இல்லாமல் இருந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்பாட்டுக்கு வந்த பின், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு செயல் திட்டங்களும், கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டன. இவையனைத்தும், சம்பந்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், தமிழக அரசு சார்பில், கம்ப்யூட்டர், லேப்-டாப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. உயர்நிலைப் பள்ளிகளில், லேப் அமைப்பதற்காக, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், ஒவ்வொரு பள்ளியிலும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள், அசையும் சொத்துக்களாக இடம் பெற்றுள்ளன. இவை திருடு போகும் அபாயம் உள்ளதால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டுள்ளனர். பெரும்பாலான பள்ளிகளில், பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் வாயிலாக, வாட்ச்மேன்களை நியமித்தும் பாதுகாத்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளுக்கும் வாட்ச்மேன் தேவையிருப்பதால், தமிழக அரசு சார்பில், வாட்ச்மேன் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:கிராமபுற பள்ளிகள் பெரும்பாலும், ஊருக்கு வெளிப்புறம் அமைந்துள்ளது. அப்பள்ளிகளில் காம்ப்பவுண்டு மற்றும் கேட் வசதி கூட இல்லை. மேலும், இரவு காவலர்களும் இல்லாத நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சாதனங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது; இவை சேதமடையவும் வாய்ப்பு உள்ளது.பள்ளிகளில் வாட்ச்மேன் பணியிடங்களை உருவாக்குவதன் மூலம், பொருட்களை பாதுகாக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...