கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.இ.டி. மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு

டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டி.இ.டி., மறு தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில் 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். கடந்த ஜுலை மாதம் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், சமீபத்தில் நடந்த மறுதேர்வு முடிவு, தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வைவிட, இந்த தேர்வுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாலும், வினாத்தாள் எளிதாக இருந்ததாலும் தேர்ச்சி சதவீதம் நன்றாக இருக்கும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀🌀...