கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>"லேப்டாப்' மட்டும் ஏன் இல்லை:சுயநிதி பள்ளி மாணவர்கள் ஆதங்கம்

தமிழக அரசின் அனைத்து விலையில்லா பொருட்களும் சுயநிதி பிரிவு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்து வந்த நிலையில் "லேப்டாப்' மட்டும் தற்போது மறுக்கப்படுகிறது. இது, பாதிக்கப்பட்ட மாணவர்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.மாணவர்கள் நலன் கருதி அரசு சார்பில் புத்தகம், சீருடை, சைக்கிள் என 13 வகையான விலையில்லா பொருட்கள் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொன்றாக வழங்கப்படுகிறது. தற்போது, விலையில்லா "லேப்டாப்'கள் கொடுக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுயநிதி பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு "லேப்டாப்' வழங்குவது குறித்து எவ்வித உத்தரவும் அரசு சார்பில் வெளியிடவில்லை. "அரசின் விலையில்லா திட்டங்கள் பட்டியலில் உள்ள சைக்கிள், சீருடை, புத்தகங்கள் உள்ளிட்டவை பெற்ற எங்களுக்கு "லேப்டாப்'கள் மட்டும் பெறுவதற்கு தகுதி இல்லையா. பிளஸ் 2வில் அரசு மற்றும் உதவி பெறும் கலை பிரிவு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கும்போது, சுயநிதி பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்தவர்களுக்கு கூட லேப்டாப் இல்லையா?' என்று சுயநிதி பள்ளி மாணவர்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TAPS G.O. in Tamil Translation

  தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துதல் அரசாணை (நிலை) எண் : 07 , நாள் : 09-01-2026 தமிழில் TAPS G.O. Ms. No.07, Dated...