முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக, 3,219 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,
2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, ஜூலையில் போட்டித் தேர்வை நடத்தி,
தேர்வுப் பட்டியலையும், டி.ஆர்.பி., வெளியிட்டது. 23 கேள்விகளுக்கான
விடைகளில் குளறுபடி ஏற்பட்டதால், சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தனர். தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட், குளறுபடியான
கேள்விகளுக்கு, உரிய மதிப்பெண்களை வழங்கி, அதன் அடிப்படையில், புதிய தேர்வு
பட்டியலை தயாரித்து வெளியிட உத்தரவிட்டது. அதன்படி, புதிய பட்டியலை தயாரிக்க, கூடுதலாக, 3,219 பேருக்கு, சான்றிதழ்
சரிபார்ப்பு செய்யும் பணி, 32 மாவட்டங்களிலும் நேற்று துவங்கியது.
இன்றும், தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. நவம்பர் 15ம்
தேதிக்குள், புதிய தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Aadhaar Correction - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்
ஆதார் திருத்தம் - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள் Aadhaar Correction - Required Documents, Terms and Limitations UIDAI (Uniq...
