கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தனியார் பள்ளி வாகனங்கள் நாளை வேலை நிறுத்தம்

தமிழகத்தில், தனியார் பள்ளி வாகனங்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறக்கோரி, நாளை, பள்ளி வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
இது தொடர்பாக, தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில், வெளியிடப்பட்டு உள்ள துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், 15 ஆயிரம் பள்ளிகள், 1.5 கோடி மாணவர்கள், 50 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சரிபட்டு வராத சமச்சீர் கல்வி, முப்பருவ கல்வி முறையால், முழுமையான புத்தகங்கள் சரியான நேரத்தில் கிடைக்காமல் அலைய விடுதல், முறையற்ற கல்வி கட்டணம், பள்ளி வாகனங்களுக்கான புதிய நடைமுறைபடுத்த முடியாத விதிகளான நடத்துனரை நியமித்தல், ஆபத்தை விளைவிக்கும், 5து4 அவசர வழி, ஓட்டுனர் களுக்கு தனி இரும்பு கூண்டு கட்டுதல், நான்கு வகையான ஆய்வு குழுக்கள், நான்கு முறை தகுதிச்சான்று, தற்காலிக அங்கீகாரம் முடிவுற்றால், தகுதிச் சான்று ரத்து, பள்ளி வாகன விபத்துக்கு பள்ளி நிர்வாகிகளை கைது செய்வது, இன்ஜினை பழுதாக்கும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது, ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.அரசாணை எண். 84 போடுவதற்கு முன்பாக துவக்கப்பட்ட, 1,000க்கும் மேற்பட்ட மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின், தொடர் தற்காலிக அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் திருப்பி அனுப்பி பள்ளியை மூடும்படி போடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.கிராமப்புற பள்ளிகள் மட்டும் சொத்து வரி செலுத்த வேண்டும் என்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளிகளின் ஒற்றுமையை அரசுக்கு தெரிவிக்க, 19ம் தேதி பள்ளி வாகனங்களை ஓட்டாமல் நிறுத்துவோம்.இவ்வாறு, துண்டுபிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...