கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>துவர்ப்பு சுவை - பயன்கள்...

 
இன்று நரம்புத் தளர்வை நீக்கும் துவர்ப்பு சுவை பற்றிய தகவல்.
மலச்சிக்கல் நீங்க:

மலச்சிக்கல் நோயின் ஆரம்ப அறிகுறி என்கின்றனர் மருத்துவர்கள். மலச்சிக்கலை போக்கினாலே நோய்களின் கோரப் பிடியின்றி நாம் வாழலாம்.

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் துவர்ப்புத் தன்மை அதிகம் சேர்ந்திருந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும். இதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். இதனால் ஜீரண சக்தி அதிகரித்து மலச்சிக்கலைப் போக்கும் தன்மையை அறிந்து அவற்றைப் பயன்படுத்தினர்.

இரத்தம் சுத்தமடைய:

துவர்ப்புச் சுவைக்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் குணம் உண்டு.

மேலும் சிறுநீரகத்தில் படிந்திருக்கும் உப்புப் படிவங்களை கரைப்பதும் துவர்ப்பு சுவையே. துவர்ப்பு வியர்வை பெருக்கியாக உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்ற இந்த துவர்ப்பு பயன்படுகிறது.

பித்த அதிகரிப்பு நீங்க:

பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை உண்டாகும். இந்த பித்த அதிகரிப்பை குறைக்கும் தன்மை துவர்ப்புச் சுவைக்கு உண்டு.

வாயுத் தொல்லை நீங்க:

இன்றைய நவீன காலத்தில் உணவு என்பது ஏதோ உயிர்வாழ என்று நினைத்து அவசர கதியில் தயாரித்த உணவுகளை சாப்பிட்டு அவசர அவசரமாக சென்றுகொண்டிருக்கின்றனர். இதனால் வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, அதனால் அபானவாயு சீற்றமாகி குடலில் புண்களை ஏற்படுத்திவிடும். இவர்கள் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

நரம்புகள் பலப்பட:

அதிக மன அழுத்தம், வேலைப்பளு காரணமாக சிலருக்கு நரம்பு தளர்வு உண்டாகிறது. இதனால் இளம் வயதிலேயே சிலர் வயதான தோற்றத்திற்கு ஆளாகின்றனர். இந்த நரம்புத் தளர்வை நீக்கும் குணம் துவர்ப்பு சுவைக்கு உண்டு.

இரத்தக் கொதிப்பைக் குறைக்க:

இரத்தக் கொதிப்பால் ஏற்படும் இருதய நோய்களை குறைக்க துவர்ப்பு சுவை மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான அளவு துவர்ப்புச் சுவை கிடைப்பதால் இரத்தக் கொதிப்பு குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

துவர்ப்பு சுவை நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். தினமும் நாம் சாப்பிடும் உணவில் துவர்ப்புச் சுவைகொண்ட பொருட்களை அதிகம் சேர்ப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இயற்கையாகவே மூலிகைகள், காய்கள், கனிகளில் உள்ள விதைகள், தோல் முதலியவை துவர்ப்பு சுவை கொண்டவை. எந்த ஒரு சுவை உள்ள உணவுகளை சாப்பிட்டாலும் அதற்கு மாற்று மருந்தாக துவர்ப்புச் சுவை உள்ள பொருட்களை சாப்பிடுவது நல்லது.

உதாரணமாக திராட்சையில் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை உண்டு. ஆனால் அதன் மேல் உள்ள தோலும், உள்ளே உள்ள விதைகளும் துவர்ப்புச் சுவை உடையவை.

துவர்ப்புச் சுவை மற்ற சுவைகளினால் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். எனவே தினமும் துவர்ப்புச் சுவையுள்ள உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Donation of property can be canceled if children do not maintain parents - Supreme Court

பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் - உச்சநீதிமன்றம்  Donation of property can be canceled if chi...